என் மலர்
தொழில்நுட்பம்
- சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய பேட் 6 மேக்ஸ் மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த டேப்லெட் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலுடன் புதிய பேட் 6 மேக்ஸ் 14 மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக சியோமி பேட் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மேக்ஸ் மாடல் அறிமுகமாகிறது. பேட் 6 மேக்ஸ் 14 மாடலை சியோமி நிறுவனம் லேப்டாப் மற்றும் சியோமி பேட் 6 மாடல் 11 இன்ச் வேரியன்ட் உடன் ஒப்பிட்டுள்ளது. புதிய பேட் 6 மேக்ஸ் டேப்லெட்-இல் 14 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

இது முந்தைய 11 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பேட் 6 மாடலை விட 62 சதவீதம் வரை பெரியது ஆகும். டீசரில் புதிய டேப்லெட் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. எனினும், சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதில் புதிய சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்துடன் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தகவல்களுடன் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ToF சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய டேப்லெட் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
- புதிய ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் இதில் பயன்பெற முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்கள் தொர்ச்சியாக தெரிவித்துவந்த "கிரீன் லைன்" (Green Line) பிரச்சினைக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஸ்கிரீன் வாரண்டி வழங்கப்படுகிறது.
பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் AMOLED பேனல் கொண்ட தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் "கிரீன் லைன்" பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் "கிரீன் லைன்" ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.
வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் எக்ஸ்-க்ளூசிவ் சர்வீஸ் சென்டர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் நோட்டீஸ்களில், "கிரீன் லைன்" பிரச்சினை கொண்ட பயனர்கள் தங்களது சாதனத்திற்கு அப்கிரேடு முறையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பாதிக்கப்பட்ட சாதனங்களை கொடுத்து புதிய ஒன்பிளஸ் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இதற்கு பயனர்கள் சாதனத்தை ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் வாங்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ரூ. 4 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Photo Coutersy: OnePlus Community
- இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை 85 சதவீதம் வரை அதிகரிப்பு.
- இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய சந்தையில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கடந்த ஆண்டில் மட்டும் 85 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும். உள்ளூர் உற்பத்தி, மிகக் குறைந்த விலை மற்றும் அதிக சலுகைகள் உள்ளிட்டவை விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன அறிக்கையின் படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களின் விற்பனை கிட்டத்தட்ட 85 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. விற்பனை வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மின்தசாதன அக்சஸரீக்களை விற்பனை செய்யும் பிரான்டுகள் தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இவை ரூ. 200-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கின்றன. பல்வேறு விலை பிரிவுகளில் கிடைக்கும் நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் ட்ரூ வயர்லெஸ் இயர்ட்ஸ் மாடல்களில் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 இயர்பட்ஸ் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரியல்மி பட்ஸ் Q2 நியோ:
38 கிராம் எடை கொண்டிருக்கும் ரியல்மி பட்ஸ் Q2 நியோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.0., ஸ்வெட் ப்ரூஃப், மடிக்கக்கூடிய டிசைன், 20 மணி நேரத்திற்கு பிளேடைம், 10 மீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்போ என்கோ பட்ஸ் 2:
ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, ஸ்வெட் ப்ரூஃப், நாய்ஸ் கேன்சலேஷன், இன்லைன் கன்ட்ரோல்கள், 28 மணி நேரத்திற்கு டாக்டைம் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் என்கோ பட்ஸ் 2 விலை ரூ. 1799 ஆகும்.

போட் இம்மார்டல் 131:
40 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும் போட் இம்மார்டல் 131 மாடலில் ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல், ப்ளூடூத் 5.3, மூன்று வித இயர்டிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ. 1699 ஆகும்.

ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோ:
நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் பட்ஸ் ஏர் 3 நியோ 38 கிராம் எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 30 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்கும் பேட்டரி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 1799 ஆகும்.

போட் ஏர்டோப்ஸ் 411 ANC:
10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கும் போட் ஏர்டோப்ஸ் 411 மாடலில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, 10 மீட்டர் ரேன்ஜ், நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஸ்வெட் ப்ரூஃப், இன்லைன் கண்ட்ரோல்கள், 17.5 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1949 ஆகும்.
- வாட்ஸ்அப் செயலியில் 2016 முதல் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- வாட்ஸ்அப்-இன் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது நல்லது. 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மே மாத வாக்கில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்ய துவங்கியது. வின்டோஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது.
- ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்களில் ஃபிளாட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.
ரெட்மி பிரான்டு சீன சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாத வாக்கில் சீன சந்தையில் அறமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய ரெட்மி நோட் 13 சீரிசில்- ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் என குறைந்தபட்சம் மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் பற்றிய புது விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது.

கோப்புப் படம்
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிசில், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 200MP பிரைமரி கேமரா, 4x ஜூம் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசைனை பொருத்தவரை ரெட்மி நோட் 13 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல்கள் ஃபிளாட் டிஸ்ப்ளேவும், நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் வளைந்த எட்ஜ் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
- எல்ஜி 27GR95QE OLED கேமிங் மானிட்டர் 27 இன்ச் அளவு கொண்ட QHD டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
- எல்ஜியின் புதிய கேமிங் மானிட்டர்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய பிரீமியம் கேமிங் மானிட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மாணிட்டர்கள் 45GR95QE மற்றும் 27GR95QE என்று அழைக்கப்படுகின்றன. இந்த மானிட்டர்கள் கேமிங் உலகில் தனித்துவம் மிக்க அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.
புதிய எல்ஜி 45GR95QE மாடல் சீரான கேமிங் அனுபவம், 140Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 0.03ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 800R கர்வேச்சர் டிசைன் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இத்துடன் வரும் ஸ்டான்ட் மானிட்டரை சவுகரியமாக வைத்துக் கொள்ள செய்கிறது.
கேமிங் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் பிளாக் ஸ்டேபிலைசர், டைனமிக் ஆக்ஷன் சின்க் உள்ளிட்டவை கேமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எல்ஜி 27GR95QE OLED கேமிங் மானிட்டர் 27 இன்ச் அளவு கொண்ட QHD டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் AGLR தொழில்நுட்பம், DCI-P3 98.5% கலர் கமுட், HDR10 சப்போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் அல்டிமேட் கான்டிராஸ்ட் ரேஷியோ மற்றும் OLED பிக்சல் டிம்மிங், 240Hz ரிப்ரெஷ் ரேட், 0.3ms GTG ரெஸ்பான்ஸ் டைம் வழங்குகிறது.
இந்த மானிட்டர் VRR, NVIDIA G-SYNC, FreeSync பிரீமியம், VESA அடாப்டிவ் சின்க் உள்ளிட்ட அம்சங்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை HDMI 2.1x2, டிஸ்ப்ளே போர்ட் 1.4 மற்றும் DSC x1, யுஎஸ்பி 3.0 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 4 பக்க, விர்ச்சுவல் பார்டர்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.
புதிய எல்ஜி 45GR95QE 45-இன்ச் WQHD வளைந்த OLED கேமிங் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதில் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 800R கர்வேச்சர் உள்ளது. இதில் DCI-P3 98.5% கலர் கமுட், HDR10 சப்போர்ட், 240Hz ரிப்ரெஷ் ரேட், 0.03ms GTG ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதிலும் HDMI 2.1 VRR (அடாப்டிவ் சின்க்), NVIDIA G-SYNC, AMD FreeSync பிரீமியம் உள்ளிட்ட அம்சங்களுக்கு சப்போர்ட் உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை HDMI 2.1x2, டிஸ்ப்ளே போர்ட் 1.4 மற்றும் DSC x1, யுஎஸ்பி 3.0 மற்றும் ஆடியோவுக்கு ஆப்டிக்கல் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
எல்ஜி 27GR95QE QHD OLED கேமிங் மானிட்டர் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மானிட்டர் ரூ. 84 ஆயிரத்து 498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
எல்ஜி 45GR95QE WQHD OLED கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் ஆகும். இது அமேசான் வலைதளத்தில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 997 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை பலமுறை வெளியிடப்பட்டு இருந்தது.
- ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்று காட்சியளிக்கிறது.
ஐகூ நிறுவனம் தனது Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக ஐகூ நிறுவனம் ஐகூ Z7 மற்றும் Z7S 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும், புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர்களை மட்டும் வெளியிட்டு வந்தது. எனினும், இதன் அறிமுக தேதி மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தது.

தற்போது ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் அதன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார். புகைப்படத்தின் படி ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சற்றே வளைந்த ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விவோ V29 லைட் 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்.
ரியல்மி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 5200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 240 வாட் சார்ஜிங் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதே ஸ்மார்ட்போனின் 240 வாட் சார்ஜிங் வசதி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி GT 5 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ரியல்மி மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனமும் 150 வாட் சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சொல்யுஷன் எனும் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக தெரிகிறது.
எனினும், இந்த ஸ்மர்ட்போனில் மிக குறைந்த திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி GT நியோ 5 மாடலின் 150 வாட் சார்ஜிங் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரியல்மி GT 3 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது.
- புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 12 அல்லது 13-ம் புதிய ஐபோன்களின் அறிமுக விழா நடைபெறும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவற்றின் லைவ் படங்கள் தற்போது லீக் ஆகி இருக்கின்றன.
அதன்படி புதிய படங்களில் ஐபோன் 15 ப்ரோ பேக் டிசைன், பக்கவாட்டு மற்றும் கீழ்புறத்தில் உள்ள பேனல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. அதில் புதிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஐபோன் 15 சீரிஸ் துவங்கி அனைத்து ஐபோன்களிலும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் மட்டும் ஐபோன் மாடல்கள் இசிம் வசதியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக ஆக்ஷன் பட்டன் மற்றும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இவைதவிர புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி கேமரா மாட்யுல், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் உண்மையில் ஐபோன் இன்றி அதன் டம்மி யூனிட் ஆக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Photo Courtesy: Ice Universe
- ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டுள்ளது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட A58 ஸ்மார்ட்போன் 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது A58 ஸ்மார்ட்போனினை சத்தமின்றி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6.72 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் குளோயிங் சில்க் டிசைன் உள்ளது. ஒப்போ குளோவின் புதுமைமிக்க டிசைன் மூலம் இது சில்க்-சாடின் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ஒப்போ A58 அம்சங்கள்:
6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
ARM மாலி-G52 2EEMC2 GPU
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு சார்ந்த கலர் ஒஎஸ் 13.1
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP போர்டிரெயிட் கேமரா
8MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
33வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ A58 ஸ்மார்ட்போன் குளோயிங் பிளாக் மற்றும் டேஸ்லிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ரூ. 1500 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய மானிட்டர் கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை குறைக்கும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
- இரண்டு புதிய மானிட்டர்களிலும் அதிகபட்சம் 100Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய மானிட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. வியூபினிட்டி S8 மற்றும் S9 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் தற்போது, வியூபினிட்டி S65UC மற்றும் வியூபினிட்டி S65VC மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு மானிட்டர்களும் கிரியேடிவ் துறையில் பணியாற்றுவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இரண்டு மானிட்டர்களிலும் 34 இன்ச் VC வளைந்த பேனல் மற்றும் 1000r ரேடியஸ் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் 3440x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் அதிகபட்சம் 100Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 வாட் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் டிஸ்ப்ளேக்களில் 1.07 பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக AMD FreeSync சப்போர்ட் வழங்கப்படுகிறது. இது கேம்பிளேவின் போது ஸ்கிரீன் ஸ்டட்டர் ஆவதை குறைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐ சேவர் மோட், ஃப்ளிக்கர் - ஃபிரீ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் கண்களில் சோர்வு ஏற்படுவது குறைக்கப்படுகிறது.
இத்துடன் பிக்சர்-இன்-பிக்சர் மற்றும் பிக்சர்-பை-பிக்சர் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இமேஜ்சைஸ், ஆஃப் டைமர் பிளஸ், HDR10 பிளஸ், ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ், அடாப்டிவ் பிக்சர் மற்றும் KYM ஸ்விட்ச் வசதிகள் வழங்கப்படுகின்றன.
கனெக்டிவிட்டிக்கு 1x 1.2EA டிஸ்ப்ளே போர்ட், 1x HMDI மற்றும் ஹெட்போன் போர்ட்கள் உள்ளன. இத்துடன் யுஎஸ்பி போர்ட்கள், யுஎஸ்பி சி போர்ட், மற்றும் LAN நெட்வொர்க் கனெக்ஷன் வசதியும் வழங்கப்படுகிறது. இரண்டு புதிய மானிட்டர்களும் இம்மாத இறுதியில் ஜெர்மனியில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சாம்சங் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி F34 5ஜி மாடலில் 6.46 இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், 13MP செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 1280 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு தலைமுறை ஒ.எஸ். அப்கிரேடுகள், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. மேலும் 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி F34 5ஜி அம்சங்கள்:
6.46 இன்ச் FHD+ 1080x2340 பிக்சல் சூப்பர் AMOLED 120Hz டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
எக்சைனோஸ் 1280 ஆக்டாகோர் பிராசஸர்
மாலி G68 GPU
6 ஜிபி, 8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
2MP மேக்ரோ கேமரா, எல்இடி பிலாஷ்
13MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
6000 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F34 5ஜி ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆகஸ்ட் 12 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.






