என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • மோட்டோ e13 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • மோட்டோ e13 மாடல் மூன்று வித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ e13 ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக மோட்டோ e13 மாடல் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்ற புதிய வேரியன்டில் கிடைக்கிறது. அந்த வகையில், இத்தகைய மெமரியுடன் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மாரட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெற்று இருக்கிறது.

     

    மோட்டோ e13 அம்சங்கள்:

    6.5 இன்ச் 720x1600 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்

    ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    2 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்)

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ e13 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன் மற்றும் கிரீமி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 16-ம் தேதி துவங்குகிறது.

    • வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவித்து இருக்கிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இவை வி அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    வி சுதந்திர தின சலுகை விவரங்கள்:

    ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட ரிசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50 ஜிபி வரையிலான டேட்டா.

    ரூ. 50, ரூ. 75, ரூ. 1449 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 099 ரிசார்ஜ்களுக்கு உடனடி தள்ளுபடி.

    வி செயலியில் "ஸ்பின் தி வீல்" பரிசு போட்டி நடைபெறுகிறது. இதில் பயனர்களுக்கு ரிசார்ஜ் சலுகைகள் அல்லது டேட்டா பேக், சோனிலிவ் சந்தா மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வி செயலியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

    • ரெட்மி பிரான்டின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • புதிய ரெட்மி பேட் SE மாடல் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரெட்மி பேட் SE விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த டேப்லெட்- விலை, அம்சங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தற்போது லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ரெட்மி டேப்லெட் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி பேட் SE மாடலில் ஸ்னாப்டடிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 11 இன்ச் 1200x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 8000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், ஹால் சென்சார் வழங்கப்படுகிறது.

    ரென்டர்களின் படி ரெட்மி பேட் SE மாடல் கிரே, கிரீன் மற்றும் பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் ரெட்மி பேட் போன்றே காட்சியளிக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

    பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் நிறம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது X (முன்னதாக டுவிட்டர்) தளத்தில் பயனர் ஒருவர் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதில் பிக்சல் 8 அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    குறிப்பாக புதிய அம்சம் ஆடியோ மேஜிக் இரேசர் என்று அழைக்கப்பட இருப்பது வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது. X தளத்தில் லீக் ஆகி இருக்கும் வீடியோ 14 நொடிகள் ஓடுகின்றன. அதில் நபர் ஒருவர் ஸ்கேட் போர்டில் செல்வதும், பிறகு ஆடியோ மேஜிக் இரேசர் என்ற பெயர் கொண்ட புதிய அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

     

    இந்த அம்சம் வீடியோ ஒன்றில் இருக்கும் ஆடியோவை மாற்றியமைக்கும் திறன் அல்லது அவற்றை மேம்படுத்தவோ அல்லது முழுமையாக நீக்குவதற்கான வசதியை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மென்பொருள் அப்கிரேடுகள் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மேஜிக் எடிட்டர், எமோஜி மற்றும் சினிமேடிக் வால்பேப்பர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் ஆடியோ மேஜிக் இரேசர் வரிசையில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 மாடலின் டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய பிக்சல் 8 மாடல் வளைந்த ஓரங்கள், மெல்லிய மற்றும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான பிக்சல் 7a மாடல் இதே போன்ற நிறத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் காரணமாக, இனி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
    • புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சத்திற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. அதன்படி பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் பல்வேறு அக்கவுன்ட்கள் இடையே ஸ்விட்ச் செய்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். தற்போது பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு இது பயன்தரும் அம்சமாக இருக்கும்.

    புதிய அம்சம் மல்டி-அக்கவுன்ட் என்று அழைக்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுன்ட்கள் இடையே மாற்றிக் கொள்ளலாம். இதனால் குளோன் செய்வது போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலையை இனிமேல் நாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் பற்றிய தகவலை Wabetainfo வெளியிட்டு உள்ளது.

     

    அதன்படி இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது. பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்த பிறகு, அவர்களுக்கு அம்சம் வழங்கப்பட்டு இருந்தால், அவர்களால் மற்றொரு அக்கவுன்டை சேர்க்க முடியும். மேலும் அந்த அக்கவுன்ட்-இன் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.

    மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு அக்கவுன்ட்-இலும் சொந்த சாட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் செட்டிங்கள் வழங்கப்படுகிறது.

    தற்போது இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: WaBetaInfo

    • ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • ஜியோவின் 5ஜி மொபைல் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ போன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த மொபைல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    அந்த வரிசையில், இரண்டு புதிய மொபைல் போன்களின் விவரங்கள் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுபற்றிய தகவல்களை டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது X (முன்பு டுவிட்டர்) அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். அதன்படி புதிய ஜியோ போன் மாடல்கள் நொய்டாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

     

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

    இரண்டு ஜியோ போன் மாடல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz LCD பேனல், 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் 4ஜி ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது.

    • விவோ நிறுவனத்தின் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • விவோ V29e ஸ்மார்ட்போன் 50MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய விவோ V29e சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கென அந்நிறுவனம் பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போனின் டிசைன் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் படங்கள் இடம்பெற்றுள்ளன. விவோ V29e ஸ்மார்ட்போனின் டீசர்களில் "தி மாஸ்டர்பீஸ்" (The Masterpiece) என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

     

    புதிய ஸ்மார்ட்போன் மெல்லிய, குறைந்த எடை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் 50MP செல்ஃபி கேமரா, 64MP பிரைமரி கேமரா, OIS வசதிகள் வழங்கப்படுகின்றன. முதல் முறையாக விவோ ஸ்மார்ட்போனில் "வெட்டிங் போர்டிரெயிட்" அம்சம் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய விவோ V29e ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி என இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 அல்லது ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. விவோ V29e மாடலை தொடர்ந்து விவோ நிறுவனம் விவோ V29 மற்றும் விவோ V29 ப்ரோ என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

    • ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மானிட்டர் டூயல் இன்புட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • புதிய மானிட்டர் அறிமுக சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ZEB EA122 22 இன்ச் அளவு கொண்ட HD+ எல்.இ.டி. மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பியூர் பிக்சல் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ராக்சர் 100 வாட் டி.ஜெ. ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மானிட்டர் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 எல்.இ.டி. மானிட்டரில் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் (1680x1050), அதிகபட்சம் 250 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட், 5ms ரெஸ்பான்ஸ் டைம், டிஸ்ப்ளேவில் VA பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ காரணமாக இந்த மானிட்டரை அலுவல் மற்றும் கேமிங் என இருவித பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் இன்புட் ஆப்ஷன்கள்: HDMI மற்றும் VGA வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு சாதனங்களை கனெக்ட் செய்ய முடியும்.

     

    ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் அம்சங்கள்:

    பியூர் பிக்சல், எல்.இ.டி. பேக்லிட் VA பேனல்

    வால் மவுன்ட் டிசைன்

    22 இன்ச் HD+ 1680x1050 பிக்சல் ரெசல்யூஷன்

    5ms ரெஸ்பான்ஸ் டைம், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    HDMI மற்றும் VGA கனெக்டிவிட்டி

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் ஆகஸ்ட் 14-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த மானிட்டர் ரூ. 4 ஆயிரத்து 699 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மை விலையான ரூ. 12 ஆயிரத்து 799-ஐ விட குறைவு ஆகும்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு.
    • இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் வெளியீடு.

    ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் தனது வியாபாரத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் இந்திய தலைவர் மாதவ் சேத் தலைமை வகிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த தகவல்களை உண்மையாக்கும் பட்சத்தில் ஹானர் மற்றும் மாதவ் சேத் இணைந்து நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தி உள்ளன.

    இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிரான்டாக ஹானர் இருந்தது. அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனம் மீது பிறப்பித்த வர்த்தக தடை காரணமாக, ஹானர் பிரான்டின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வியாபாரத்தில் கவனம் செலுத்த ஹானர் பிரான்டு முடிவு செய்தது.

     

    அதன்படி இந்திய ரி-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா பிரான்டு டீசர் ஒன்றை X தளத்தில் வெளியிட்டது. இதனை மாதவ் சேத் ரிடுவீட் செய்து இருந்தார். ரிஎன்ட்ரி பற்றி வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் ஹானர் பிரான்டிங்கில் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஹானர் பிரான்டு முதலில் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 90 என்ற பெயரில் அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது ஹானர் பிரான்டு தற்போது சீனாவில் விற்பனை செய்து வரும் வேரியன்டை விட அதிகம் ஆகும். சீன சந்தையில் ஹானர் 90 ஸ்மார்ட்போனின் விலை CNY 2499 இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 705 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    ஹானர் 90 அம்சங்கள்:

    6.7 இன்ச் AMOLED குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1

    200MP பிரைமரி கேமரா

    12MP வைடு ஆங்கில் லென்ஸ்

    12MP சென்சார்

    50MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    • ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பிரீபெயிட் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஜியோவின் புதிய வருடாந்திர சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை பலன்களை விட வித்தியாசமாக உள்ளது. ஜியோ சுதந்திர தின சலுகையின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

     

    ரூ. 2 ஆயிரத்து 999 ஜியோ சலுகை பலன்கள்:

    ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி

    யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி

    யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவீதம், அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி

    ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி

    ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி

    ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • புதிய நோக்கியா ஃபீச்சர் போன் மாடல்களில் வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி உள்ளது.
    • இரண்டு புதிய நோக்கியா ஃபீச்சர் போன்களும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 130 மியூசிக் (2023) மற்றும் நோக்கியா 150 (2023) மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா 130 மியூசிக் மாடல் அந்நிறுவனத்தின் நோக்கியா 130 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். நோக்கியா 130 மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 150 மாடல் 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    நோக்கியா 130 மியூசிக் மாடலில் சக்திவாய்ந்த பிராசஸர், MP3 பிளேயர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 32 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்ட மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள எப்எம் ரேடியோவை வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதில் உள்ள பில்ட்-இன் ஸ்டோரேஜ் 1450 எம்ஏஹெச் பேட்டரி 32 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வழங்குகிறது.

     

    நோக்கியா 130 மியூசிக் (2023) அம்சங்கள்:

    2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

    நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்

    4MB மெமரி

    மெமரியை நீட்டிக்கும் வசதி

    வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

    டூயல் பேன்ட் 900/1800MHz

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    1450 எம்ஏஹெச் பேட்டரி

    34 நாட்களுக்கு ஸ்டான்ட்பை டைம்

     

    நோக்கியா 150 மியூசிக் 2023 அம்சங்கள்:

    2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

    நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்

    4MB மெமரி

    மெமரியை நீட்டிக்கும் வசதி

    வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

    டூயல் பேன்ட் 900/1800MHz

    விஜிஏ கேமரா, எல்இடி பிளாஷ்

    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    1450 எம்ஏஹெச் பேட்டரி

    34 நாட்களுக்கு ஸ்டான்ட்பை டைம்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 130 மியூசிக் மாடல் டார்க் புளூ, பர்பில் மற்றும் லைட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் டார்க் புளூ மற்றும் பர்பில் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 1849 என்றும் லைட் கோல்டு நிற வேரியன்ட் விலை ரூ. 1949 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 150 (2023) மாடலின் சார்கோல், சியான் மற்றும் ரெட் நிற வேரியன்ட்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    • ஸ்மார்ட்போன்களுடன் புதிய ரியல்மி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11x 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அசத்தல் டீசர்களை ரியல்மி வெளியிட்டு உள்ளது. அதன்படி ரியல்மி 11 5ஜி மாடல் பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 67 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், ரியல்மி 11 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன், 108MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

     

    பிரீமியம் டிசைன் ஒன்றை உருவாக்குவதற்காக தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி துறைக்கான முதலீட்டை இருமடங்கு அதிகப்படுத்தி இருப்பதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. புதிய டிசைன் குலோரி ஹாலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுலை சுற்றி கோல்டன் ரிங் வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.

    ரியல்மி 11x 5ஜி மாடலுக்கான டீசர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இதன் விலை ரியல்மி 11 5ஜி மாடலை விட குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ரியல்மி 11 5ஜி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில், இரு சாதனங்களும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ×