என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்

மிகக் குறைந்த விலை.. கேப்சியுல் டிசைன் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி!

- இதே போன்ற வசதி ரியல்மி C55 மற்றும் ரியல்மி C33 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.
- ரியல்மி C51 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி C51 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய C சீரிஸ் மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர்களில் சாம்பியன் வருகிறது (Champion is coming) என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட சிறப்பானதாக இருக்கும் என்று ரியல்மி தெரிவித்து உள்ளது.
டீசர்களின் படி ரியல்மி C51 ஸ்மார்ட்போன் நாட்ச் மற்று்ம மினி கேப்சியுல் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இதே போன்ற வசதி ரியல்மி C55 மற்றும் ரியல்மி C33 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் ரியல்மி C51 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது.
தாய்வான் மட்டுமின்றி இந்தோனேசியா, கம்போடியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நடைபெற்று வருகிறது. ரியல்மி C51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ 90Hz LCD ஸ்கிரீன், 5MP பிரைமரி கேமரா, யுனிசாக் T612 பிராசஸர், 4 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி C51 மாடல் மின்ட் கிரீன் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
விற்பனை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத துவக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். இது பற்றிய சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.