என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்

240 வாட் சார்ஜிங் கொண்ட புதிய GT5.. வெளியீட்டை உறுதிப்படுத்திய ரியல்மி..!

- புதிய ரியல்மி GT5 மாடல் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 1 டி.பி. மெமரி கொண்டிருக்கும்.
- ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் ரியல்மி தனது ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி விட்டது. அதன்படி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற இருக்கும் ரியல்மி 5-ம் ஆண்டு விழாவில் புதிய ரியல்மி GT5 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டுமின்றி ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி அந்நிறுவன வளர்ச்சி பற்றியும் தெரிவித்து இருக்கிறார். ஐந்து ஆண்டுகளில் ரியல்மி நிறுவனம் வெற்றி மீது வெற்றி பெற்று வருவதாகவும், 21 நாடுகளில் தனது ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருவதாகவும், தற்போது உலகின் முதல் பத்து ஸ்மார்ட்போன் பிரான்டுகளில் ஒன்றாக ரியல்மி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மொபைல் பிரான்டாக ரியல்மி இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். ரியல்மியின் டேர்-டு-லீப் குறிக்கோளை வைத்துக் கொண்டு லீப்-ஃபார்வேர்டு மற்றும் ஐந்தாவது ஆண்டு விழாவுக்கான லீப்-அப் திட்டங்கள் மீது கவனம் செலுத்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய ஸ்மார்ட்போனை பொருத்தவரை, இந்த மாடல் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ரியல்மி GT5 மாடலில் 1.5K ஃபிளாட் AMOLED 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
இதுதவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம், 240 வாட் மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.