என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
    • இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz 10-பிட் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சைபர் மெக்கா டிசைன் மற்றும் எல்இடி லைட் எபெக்ட்களை கொண்டிருக்கும் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ, ஸ்மார்ட்போனில் இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும். இத்துடன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஒஎஸ் அப்டேட், இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்

    ARM G77 MC9 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    2MP டெப்த் சென்சார்

    32MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் பிடி 3.0 பாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சைபர் பிளாக் மற்றும் மிரேஜ் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • மிவி நிறுவனம் கடந்த மாதம் டுயோபாட்ஸ் K6 இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.
    • புதிய டுயோபாட்ஸ் D3 மாடலில் 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள் உள்ளன.

    மிவி நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் டுயோபாட்ஸ் D3 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் டுயோபாட்ஸ் k6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய டுயோபாட்ஸ் D3 மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய மிவி டுயோபாட்ஸ் D3 மாடலில் "ஸ்டேரி நைட் எபெக்ட்" வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ் தோற்றத்தை அழகாக காட்சியளிக்க செய்கிறது. இதில் உள்ள 13mm சக்திவாய்ந்த டிரைவர்கள், தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த இயர்பட்ஸ்-இல் டூயல் மைக் ஏ.ஐ., என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

    மிவி டுயோபாட்ஸ் D3 அம்சங்கள்:

    13mm டிரைவர்கள்

    டூயல் மைக் AI-ENC சிப்

    AI என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    50ms அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட்

    ப்ளூடூத் 5.3

    AAC, SBC கோடெக் சப்போர்ட்

    380 எம்ஏஹெச் பேட்டரி (கேஸ்), 40 எம்ஏஹெச் x2 பேட்டரி (இயர்பட்ஸ்)

    50 மணி நேரத்திற்கு பிளேபேக்

    ஸ்விப்ட் சார்ஜ் தொழில்நுட்பம்

    10 நிமிட சார்ஜில் 500 நிமிடங்கள் பயன்படுத்தலாம்

    IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மிவி டுயோபாட்ஸ் D3 மாடல் ஆர்க்டிக் புளூ, கோபால்ட் பிளாக், ஹசெல் கிரீன் மற்றும் லைம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது. விலை அறிமுக சலுகையாக ரூ. 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாளை (ஆகஸ்ட் 3) மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    • போக்கோ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது.
    • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய M6 ப்ரோ 5ஜி மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய டீசரில் போக்கோ பிரான்டு இந்த தகவலை தெரிவித்து இருக்கிறது. இது போக்கோ பிரான்டின் முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

    டீசர்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா சென்சார்கள் தோற்றத்தில் ரெட்மி 12 5ஜி மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களும் ரெட்மி 12 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

     

    ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் FHD+5 90Hz LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் போக்கோ எல்லோ என பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் விலை இதைவிட குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    • சாம்சங் மைக்ரோ எல்இடி டிவி பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
    • மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எல்இடி டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தொலைகாட்சி சந்தையில் முன்னணி நிறுவனமாக சாம்சங் விளங்கி வருகிறது. பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் புதிய மைக்ரோ எல்இடி டிவி முற்றிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

    மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவி பயனர்களுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வழக்கமான ஒஎல்டி பிக்சல்களை விட பத்தில் ஒருமடங்கு வரை அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் அளவு 24.8 மில்லியன் மைக்ரோமீட்டர் ஆகும். இதில் உள்ள மைக்ரோ எல்இடி-க்கள் சஃபயர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய சாம்சங் டிவியில் மைக்ரோ எல்இடி, மைக்ரோ கான்டிராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ HDR மற்றும் மைக்ரோ AI பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் அரினா சவுன்ட் அம்சம் டிவியில் 3D சவுன்ட் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் OTS ப்ரோ, டால்பி அட்மோஸ் மற்றும் Q சிம்பனி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் உள்ள மல்டி-வியூ அம்சம் அதிகபட்சம் நான்கு வெவ்வேறு தரவுகளை பார்க்க வழி செய்கிறது. மைக்ரோ எல்இடி டிவியுடன் சோலார் செல் ரிமோட் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ரிமோட்-இல் பேட்டரி போட வேண்டிய அவசியம் இல்லை. இந்திய சந்தையில் சாம்சங் மைக்ரோ எல்இடி டிவியின் விலை ரூ. 1 கோடியே 14 லட்சத்து 99 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் உள்ள எல்இடி லைட்டிங்-ஐ அந்நிறுவனம் ஆர்க் இன்டர்பேஸ் என்று அழைக்கிறது.
    • இந்தியாவில் டெக்னோ 5 ப்ரோ விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    டெக்னோ பிரான்டின் புதிய டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே டிசைன் கொண்டிருக்கிறது. டெக்னோ போவா 5 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி லைட்டிங்-ஐ அந்நிறுவனம் ஆர்க் இன்டர்பேஸ் என்று அழைக்கிறது.

    இதில் உள்ள எல்இடி லைட்கள் கேமிங்கின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அழைப்புகள், நோட்டிபிகேஷன், லோ பேட்டரி எச்சரிக்கை உள்ளிட்டவைகளுக்கு எல்இடி லைட்கள் எரியும். இந்த ஸ்மார்ட்போன் டார்க் இல்யூஷன் மற்றும் சில்வர் பேன்டசி என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

     

    டெக்னோ போவா 5 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏஐ கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

    16MP செல்பி கேமரா

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    68 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    சர்வதேச சந்தையில் டெக்னோ போவா 5 ப்ரோ மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டெக்னோ 5 ப்ரோ மாடலின் இந்திய வெளியீடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எனினும், அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய டெக்னோ போவா 5 ப்ரோ விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    • லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப் மாடல்கள் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
    • லெனோவோ LOQ சீரிஸ் கேமிங் லேப்டாப்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய LOQ கேமிங் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13th Gen இன்டெல் கோர் அல்லது ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர், NVIDIA ஜிஃபோர்ஸ் RTX4060 லேப்டாப் GPU வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் தான் லெனோவோ நிறுவனம் யோகாபுக் 9i மாடலை அறிமுகம் செய்து, லீஜியன் ப்ரோ சீரிஸ் மாடல்களை 13th Gen மற்றும் ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர்களுடன் அப்டேட் செய்தது.

    லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் அம்சங்கள்:

    15.6 இன்ச் WQHD 2560x1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட்

    13th Gen இன்டெல் கோர் i7 பிராசஸர்

    Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050 அல்லது Nvidia ஜிஃபோர்ஸ் RTX4060 GPU

    12th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர்

    Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050, RTX4060 அல்லது RTX3050 GPU

    ஏஎம்டி ரைசன் 7 ஆக்டா கோர் பிராசஸர்

    Nvidia ஜிஃபோர்ஸ் RTX3050 அல்லது RTX4050 GPU

    8 ஜிபி DDR5 ரேம், 512 ஜிபி PCIe NVMe SSD

    Nvidia G-Sync

    60 வாட் ஹவர் பேட்டரி

    சூப்பர் ரேபிட் சார்ஜ் சப்போர்ட்

    4-ஜோன் RGB பேக்லிட் கீபோர்டு

    வின்டோஸ் 11 ஹோம்

    2x2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    FHD 1080 பிக்சல் வெப்கேமரா

    லெனோவோ கேமிங் கீபோர்டு

    ப்ளூடூத் 5.1

    விலை மற்றும் விற்பனை விவரம்:

    லெனோவோ LOQ சீரிஸ் லேப்டாப்களின் விலை ரூ. 78 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லெனோவோ LOQ லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுதவிர லெனோவோ வலைதளம், தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது.

    • லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • லாவா யுவா 2 ஸ்மாரட்போன் மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய யுவா 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா யுவா மற்றும் யுவா ப்ரோ மாடல்கள் வரிசையில் புதிய யுவா 2 மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T606 பிராசஸர், 3 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆன்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா யுவா 2 மாடலில் ஒஎஸ் ஸ்டோரேஜை அதிகளவில் எடுத்துக் கொள்வதை தடுக்கும் புலோட்வேர் எதுவும் வழங்கப்படவில்லை. புதிய லாவா யுவா 2 மாடலுக்கு ஒரு ஆன்ட்ராய்டு அப்டேட், இரண்டு ஆண்டுகளுக்கு காலான்டு வாக்கில் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லாவா யுவா 2 அம்சங்கள்:

    6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்

    மாலி G57 MC2 650MHz GPU

    3 ஜிபி ரேம்

    64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 12 ஒஎஸ்

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா

    VGA இரண்டாவது கேமரா, எல்இடி பிளாஷ்

    5MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் கிளாஸ் புளூ, கிளாஸ் லாவென்டர், கிளாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பின்புறம் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு உள்ளது. விலை ரூ. 6 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • சியோமி நிறுவனம் புதிய ரெட்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
    • ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.83 இன்ச் 240x280 பிக்சல் LCD ஸ்கிரீன், 450 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்-இல் 24x7 இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி, 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 200-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டன்ட், அதிகபட்சம் 12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

     

    ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் அம்சங்கள்:

    1.83 அன்ச் 240x280 பிக்சல் LCD ஸ்கிரீன், 450 நிட்ஸ் பிரைட்னஸ்

    200-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள்

    ஹார்ட் ரேட் சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப்

    ப்ளூடூத் 5.3

    பில்ட்-இன் மைக்ரோபோன்

    ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப், ஸ்டிரெஸ் மானிட்டரிங்

    100-க்கும் ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்

    289 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் 12 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடல் பிளாட்டினம் கிரே மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்ஷனல் ஆலிவ் கிரீன் ஸ்டிராப் விலை ரூ. 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்குகிறது.

    • இரு ஸ்மார்ட்போன்களும் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிரான்டிங்கில் அறிமுகம் செய்து இருக்கிறது. ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    ரெட்மி 12 5ஜி மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்கள் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 12 மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 5ஜி மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று துவங்கி, டாப் என்ட் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்குகிறது.

    • மோட்டோரோலா G14 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.
    • புதிய மோட்டோ 50MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் FHD+ ஸ்கிரீன், யுனிசாக் T616 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார், அகர்லிக் பேக் மற்றும் மேட் பினிஷ், IP52 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

     

    மோட்டோ G14 அம்சங்கள்:

    6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    2Ghz யுனிசாக் T616 பிராசஸர்

    மாலி G57 GPU

    4 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    8MP செல்பி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    20 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோ G14 ஸ்மார்ட்போன் ஸ்கை புளூ, ஸ்டீல் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி துவங்க இருக்கிறது.

    • புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது.
    • டெக்னோ ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

    டெக்னோ நிறுவனத்தின் பிரபலமான ஸ்பார்க் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலில் உள்ள "லுமினஸ் இகோ-லெதர் தொழில்நுட்பம்," வழங்கப்பட்டு இருக்கிறது.

    முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கும், புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனின் நிறத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மஜென்டா நிறத்தில் கிடைக்கும் நிலையில், ஸ்பார்க் 10C மற்றும் ஸ்பார்க் 10 போன்ற மாடல்கள் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கின்றன.

     

    லுமினஸ் கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். லுமினஸ் இகோ லெதர் தொழில்நுட்பம், சாதனத்திற்குள் வெளிச்சத்தை உறிந்து கொண்டு விவிட் மஜென்டா நிறத்தை ஃபுளுரோசென்ட் குளோ நிறத்திற்கு மாற்றுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மீது வெளிச்சம் படும் போது, நிறம் மாறுவதை உணர முடியும்.

    புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மேஜிக் மஜென்டா எடிஷன் பிரைட் மற்றும் லைவ்லி பின்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இளம் தலைமுறையினரின் கற்பனை திறன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிறங்கள் இளைஞர்களை பெருமளவில் கவரும் என்று டெக்னோ பிரான்டு எதிர்பார்க்கிறது.

     

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:

    6.8 இன்ச், 1080x2460 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்

    16 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    32MP செல்பி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒஎஸ் 12.6

    4ஜி, ப்ளூடூத், வைபை

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

    • பயர் போல்ட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தி இருக்கிறது.
    • புதிய பயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன், ப்ளூடூத் காலிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    பயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், ஏராளமான உடல்நல மற்றும் ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், சுழலும் கிரவுன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன், வட்ட வடிவம் கொண்ட டயல் வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா மாடலில் உள்ள பேட்டரி அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

     

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்:

    1.28 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வட்ட வடிவம் கொண்ட டயல்

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன்

    சுழலும் கிரவுன், பிரீமியம் டிசைன்

    பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன்

    ப்ளூடூத் காலிங்

    உடல நல டிராக்கிங் அம்சங்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பில்ட்-இன் கேம்ஸ்

    ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

     

    விலை விவரங்கள்:

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று பயர் போல்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இதன் விலை ரூ. 21 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை பயர் போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்குகிறது.

    ×