search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் - ஒன்பிளஸ் அதிரடி அறிவிப்பு..!
    X

    பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு "லைஃப்டைம் செட்டில்மெண்ட்" - ஒன்பிளஸ் அதிரடி அறிவிப்பு..!

    • புதிய ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    • ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் இதில் பயன்பெற முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்கள் தொர்ச்சியாக தெரிவித்துவந்த "கிரீன் லைன்" (Green Line) பிரச்சினைக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட இந்திய பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் பயனர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஸ்கிரீன் வாரண்டி வழங்கப்படுகிறது.

    பல்வேறு ஒன்பிளஸ் பயனர்கள் AMOLED பேனல் கொண்ட தங்களது பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் "கிரீன் லைன்" பிரச்சினை இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதே பிரச்சினை பல்வேறு சாதனங்களில் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, ஒன்பிளஸ் நிறுவனம் இதனை சரிசெய்வதற்காக வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டியை வழங்குகிறது.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9R ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள், அவற்றில் "கிரீன் லைன்" ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்தற்கான கட்டணம் வாரண்டியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.

    வாழ்நாள் ஸ்கிரீன் வாரண்டி திட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் எக்ஸ்-க்ளூசிவ் சர்வீஸ் சென்டர்களில் ஒட்டப்பட்டு இருக்கும் நோட்டீஸ்களில், "கிரீன் லைன்" பிரச்சினை கொண்ட பயனர்கள் தங்களது சாதனத்திற்கு அப்கிரேடு முறையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பாதிக்கப்பட்ட சாதனங்களை கொடுத்து புதிய ஒன்பிளஸ் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும்.

    இதற்கு பயனர்கள் சாதனத்தை ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் வாங்க வேண்டும். இந்த அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் வாங்கும் போது, ரூ. 4 ஆயிரத்து 500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Photo Coutersy: OnePlus Community

    Next Story
    ×