2 புது ஸ்மார்ட்போன்கள்.. அசத்தல் டீசர் வெளியிட்ட ரியல்மி..!

ரியல்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஸ்மார்ட்போன்களுடன் புதிய ரியல்மி பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2 புது ஸ்மார்ட்போன்கள்.. அசத்தல் டீசர் வெளியிட்ட ரியல்மி..!
Published on

ரியல்மி நிறுவனம் ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11x 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அசத்தல் டீசர்களை ரியல்மி வெளியிட்டு உள்ளது. அதன்படி ரியல்மி 11 5ஜி மாடல் பெரிய கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 67 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், ரியல்மி 11 5ஜி மாடலில் 6.72 இன்ச் FHD+ 120Hz ஸ்கிரீன், 108MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

பிரீமியம் டிசைன் ஒன்றை உருவாக்குவதற்காக தனது ஆய்வு மற்றும் வளர்ச்சி துறைக்கான முதலீட்டை இருமடங்கு அதிகப்படுத்தி இருப்பதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. புதிய டிசைன் குலோரி ஹாலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யுலை சுற்றி கோல்டன் ரிங் வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.

ரியல்மி 11x 5ஜி மாடலுக்கான டீசர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இதன் விலை ரியல்மி 11 5ஜி மாடலை விட குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ரியல்மி 11 5ஜி மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில், இரு சாதனங்களும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com