என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் மாடல்.. லீக் ஆன புதிய புகைப்படங்கள்..!
    X

    கோப்புப் படம்

    டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் மாடல்.. லீக் ஆன புதிய புகைப்படங்கள்..!

    • ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது.
    • புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 12 அல்லது 13-ம் புதிய ஐபோன்களின் அறிமுக விழா நடைபெறும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இவற்றின் லைவ் படங்கள் தற்போது லீக் ஆகி இருக்கின்றன.

    அதன்படி புதிய படங்களில் ஐபோன் 15 ப்ரோ பேக் டிசைன், பக்கவாட்டு மற்றும் கீழ்புறத்தில் உள்ள பேனல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. அதில் புதிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஐபோன் 15 சீரிஸ் துவங்கி அனைத்து ஐபோன்களிலும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் ஐபோன் மாடல்களில் தொடர்ந்து சிம் கார்டு டிரே வழங்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் மட்டும் ஐபோன் மாடல்கள் இசிம் வசதியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக ஆக்ஷன் பட்டன் மற்றும் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய ஐபோன் 15 ப்ரோ தோற்றத்தில் ஐபோன் 14 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி கேமரா மாட்யுல், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. முன்புறம் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் உண்மையில் ஐபோன் இன்றி அதன் டம்மி யூனிட் ஆக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    Photo Courtesy: Ice Universe

    Next Story
    ×