என் மலர்
தொழில்நுட்பம்
- ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் நார்டு CE 3 5ஜி 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 3 5ஜி மற்றும் நார்டு 3 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் நார்டு 3 ஸ்மார்ட்போன் ஜூலை 15-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நார்டு CE 3 5ஜி மாடல் விற்பனை இதுவரை துவங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் இந்திய விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலின் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வங்கி சலுகைகள், எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவைகளை சேர்த்து ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மாடலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி அம்சங்கள்:
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 2412x1080 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட்
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
ஸ்னாப்டிராகன் 782ஜி பிராசஸர்
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்
அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
50MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
16MP செல்பி கேமரா
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 13.1
டூயல் சிம்
5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
- ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.
ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.

ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோபுக் அம்சங்கள்:
11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே
மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஜியோ ஒஎஸ்
2MP HD வெப் கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இன்பினிட்டி கீபோர்டு
ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை
I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்
ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்
4000 எம்ஏஹெச் பேட்டரி
8 மணி நேரத்திற்கு பேக்கப்
இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.
- ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் குளோபல் வேரியன்ட் சற்று வித்தியாசமான அம்சங்களை கொண்டுள்ளது.
- ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 11 5ஜி என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் சர்வதேச வெர்ஷனில் சில அம்சங்கள் சீன வேரியன்டில் இருந்ததை விட வித்தியாசமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரியல்மி 11 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 108MP பிரைமரி கேமரா, 6.72 இன்ச் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 11 5ஜி அம்சங்கள்:
6.72 இன்ச் Full HD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
8 ஜிபி ரேம்
விர்ச்சுவல் ரேம் வசதி
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
108MP பிரைமரி கேமரா
2MP லென்ஸ்
16MP செல்பி கேமரா
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை,ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் சார்ஜிங்
விலை விவரங்கள்:
ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 502 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டான் கோல்டு மற்றும் மூன் நைட் டார்க் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
- டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் உள்ளன.
- மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டுவிட்டர் தளத்தில் மாற்றங்கள் செய்வதை எலான் மஸ்க் தற்போதைக்கு நிறுத்த மாட்டார் என்றே தெரிகிறது. தற்போது X என்று மாறி இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என்பது தான்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து தளத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய அம்சம் பற்றிய தகவலை, டுவிட்டர் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் முதல் ஆப்ஷன், வழக்கமான வெள்ளை நிற பேக்கிரவுன்டை வழங்குகிறது. டிம் ஆப்ஷன் டுவிட்டர் தளத்தை சுற்றி இருள் சூழ்ந்ததை போன்று காட்சியளிக்கும் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது. லைட்ஸ் அவுட் ஆப்ஷனில் திரை முழுக்க கருப்பு நிற பேக்கிரவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய மாற்றம் அமலுக்கு வரும் வரையில், இந்த மூன்று ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
டுவிட்டர் தளத்தில் எழுத்துக்களின் அளவை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி எழுத்துக்களை எல்லோ, பின்க், பர்பில், ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டார்க் மோட் மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- ஐபோன் 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 1.5mm ஆக குறைக்கப்படுகிறது.
- ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஐபோன் 15 சீரிஸ் பற்றிய ஏராளமான விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஐபோன் 15 சீரிஸ் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இது பற்றி ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லோ-இன்ஜெக்ஷன் பிரெஷர் ஓவர் மால்டிங் எனும் புதிய உற்பத்தி தொழில்நுட்பம் (LIPO) காரணமாக இது சாத்தியமாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை சுற்றி இருக்கும் பெசல்கள் 2.2mm-இல் இருந்து 1.5mm ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களில் LIPO தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதே தொழில்நுட்பம் எதிர்கால ஐபேட் மாடல்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
மெல்லிய பெசல்கள் மட்டுமின்றி ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் பிரேம்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை தற்போதைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம்களை விட குறைந்த எடை, அதிக விலை கொண்டிருக்கின்றன. இதன் மூலம் நான்கு மாடல்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படும் பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தற்போதைய ஏ16 சிப்செட்-ஐ விட அதிவேகமாக இருக்கும். இந்த சிப்செட் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Photo Courtesy: 9To5Mac
- இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஒப்போ A78 4ஜி மாடல் அக்வா கிரீன், மிஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுன்டில் ஒப்போ A78 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் மாத துவக்கத்திலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ A78 4ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ A78 4ஜி அம்சங்கள்:
6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆன்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13.1
50MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
8MP செல்ஃபி கேமரா
4ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி போர்ட்
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
சமீபத்தில் இந்த ஒப்போ A78 4ஜி வெர்ஷன் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஒப்போ A78 4ஜி வெர்ஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஒப்போ A78 4ஜி மாடல் விலை ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் ஒப்போ A78 4ஜி மாடல் அக்வா கிரீன், மிஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது.
- டுவிட்டர் வலைதளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- உலகளவில் டுவிட்டர் வருவாய் பங்கீட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
எலான் மஸ்கின் X, முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் டுவிட்டர் அல்லது X புளூ சந்தா வைத்திருப்போருக்கு உலகளவில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவாய் ஈட்ட முடியும்.
அந்த வகையில், புதிய X தளத்தில் வருவாய் ஈட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இதற்கு கிரியேட்டர்கள் மற்றும் பயனர்கள் வைத்திருக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
1 - பயனர்கள் X புளூ சந்தா வைத்திருப்பது அவசியம் ஆகும். இதோடு கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 ஃபாளோவர்கள் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

2 - அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களை கடந்தபிறகு அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
3 - எதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ம் தேதியிட்ட வாரத்தில் இருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

4 - இந்த திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளை (Ads Revenue Sharing and Creator Subscriptions) செட்டப் செய்து கொள்ள வேண்டும்.
5 - புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியம் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க, இந்த திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.
- ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- ஹானர் பேட் X9 மாடல் மொத்தத்தில் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் தவிர ஹானர் பிரான்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹானர் பேட் X9 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டேப்லெட் மாடல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் பேட் X8 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஹானர் பேட் X9 மாடல் ரியல்மி பேட் 2, ஒப்போ பேட் ஏர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் டிஸ்ப்ளே, சுற்றிலும் சிமெட்ரிக்கல் பெசல்கள், 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹை-ரெஸ் ஆடியோ, மெட்டல் யுனிபாடி, 5MP சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, 7250 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஹானர் பேட் X9 மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக்யுஐ 7.1 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் X9 மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஹானர் பேட் X9 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 500 தள்ளுபடி, ஹானர் ப்ளிப் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
- போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட் உள்ளது.
- இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. புதிய போக்கோ பாட்ஸ் அம்சங்கள், ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது.
புதிய போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் பாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3, IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, டச் கன்ட்ரோல்கள், லோ-லேடன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் இந்த இயர்பட்ஸ்-ஐ 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

போக்கோ பாட்ஸ் அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3, எஸ்.பி.சி. கோடெக், கூகுள் பாஸ்ட் பேர்
12 மில்லிமீட்டர் டிரைவர்கள்
என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
60ms லோ-லேடன்சி கேமிங் மோட்
டச் கன்ட்ரோல்கள்
ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
இயர்பட்-இல் 34 எம்ஏஹெச் பேட்டரி
சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி
10 நிமிட சார்ஜில் 90 நிமிடங்களுக்கு பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போக்கோ பாட்ஸ் இயர்பட்ஸ் மிட்நைட் குரூவ் நிறத்தில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் 1,199 விலையில் வாங்கிட முடியும். விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.
- அதிவேகமாக விற்பனையான சோனி நிறுவன கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியுள்ளது.
- சோனியின் பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன.
சோனி நிறுவனம் கேமிங் கன்சோல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது. உலகம் முழுக்க பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் 40 மில்லியன் யூனிட்களை எட்டி அசத்தி இருக்கிறது. நவம்பர் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்த பிளே ஸ்டேஷன் 5, வெறும் எட்டு மாதங்களில் 10 மில்லியன் யூனிட்கள் விற்பனையை கடந்து அசத்தியது.
இதன் மூலம் சோனி நிறுவனம் தனது முந்தைய கேமிங் கன்சோல்களின் விற்பனை பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக விற்பனையான கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையில் 30 மில்லியன் யூனிட்களை கடந்தது. இது புதிய கேமிங் கன்சோல் உலகளவில் கேமர்களை கவர்ந்து வருவதை உணர்த்தி இருக்கிறது.

2022 துவக்கம் வரை சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 4 மற்றும் பிளே ஸ்டேஷன் 2 மாடல்களை முறையே 117 மில்லியன் மற்றும் 157 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. 100 மில்லியன் யூனிட்கள் எனும் எண்ணிக்கையை அடைய பிளே ஸ்டேஷன் 4 ஆறு ஆண்டுகளை எடுத்துக் கொண்ட நிலையில், பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லில் கிட்டத்தட்ட பாதியை மூன்று ஆண்டுகளுக்குள் எட்டியது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 மாடல் 100 மில்லியன் யூனிட்களை அதிவேகமாக கடந்துவிடும் என்று தெரிகிறது.
சந்தையில் அமோக வரவேற்பை பெற்ற நிலையிலும், பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
சமீபத்தில் தான் சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 மாடலின் டிஸ்க் வேரியன்டிற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவித்தது. இந்த தள்ளுபடி ஜூலை 25-ம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மிட் ரேன்ஜ் M சீரிஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸரை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறை.
- 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S21 சீரிசில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M44 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் லிஸ்டிங்கில் வெளியாகி உள்ளது. அதில் புதிய கேலக்ஸி M44 ஸ்மார்ட்போன் SM-M446K எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக சாம்சங் கேலக்ஸி M33 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1280 சிப்செட் உடன் கொரிய சந்தையில் ஜம்ப் 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் SM-M446K எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதால், இந்த மாடல் ஜம்ப் 3 எனும் பெயரில் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி M34 ஸ்மார்ட்போனும் எக்சைனோஸ் 1280 பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எக்சைனோஸ்-இல் இருந்து ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருக்கு மாறுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S21 சீரிசில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிட் ரேன்ஜ் M சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர்களை சாம்சங் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். சாம்சங் கேலக்ஸி M33 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புதிய கேலக்ஸி M44 மாடல் கொரியா தவிர மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- முந்தைய தகவல்களில் சாம்சங் நிறுவனம் FE எடிஷன் மாடல்களை ரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.
- கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் S-AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கான சாம்சங் மொபைல் பிரிவு துணை தலைவர் ஜஸ்டின் ஹூம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கேலக்ஸி A54 5ஜி மற்றும் கேலக்ஸி S23 இடையே உள்ள இடைவெளி பற்றி பேசி இருக்கிறார். அப்போது இரு சீரிஸ்-க்கும் இடையில் தான் FE எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று பதில் அளித்தார்.
மேலும் கேலக்ஸி S23 FE மாடல் வெளியீடு பற்றி மறைமுகமாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 FE மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது ஓரளவுக்கு தெரியவந்துவிட்டது. முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது FE எடிஷன் மாடல்களை ரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.

இதுவரை வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 FE மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன்படி இந்த காலாண்டிலேயே புதிய கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் செய்யப்படலாம். மற்ற நாடுகளில் மீதமிருக்கும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் S-AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 32MP செல்பி கேமரா, OIS, 50MP பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 2200 பிராசஸர், 6 ஜிபி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படலாம்.
Photo Courtesy: SmartPrix / OnLeaks






