என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் தனது புதிய போல்டபில் ஸ்மார்ட்போனிற்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இது ஒப்போ பைன்ட் N3 பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. ஒப்போ பைன்ட் N3 மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் முந்தைய பைன்ட் N மற்றும் பைன்ட் N2 போன்று சீன சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. புதிய பைன்ட் N3 விவரங்கள் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய சான்று அளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த மாடல் சீனாவை கடந்து மேலும் சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகி இருக்கிறது.

    ஒப்போ பைன்ட் N3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒப்போ பைன்ட் N3 மாடலில் 6.5 இன்ச் AMOLED FHD+ 120Hz ஸ்கிரீன், 8 இன்ச் AMOLED 2K 120Hz டிஸ்ப்ளே, 4805 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5x ரேம், 1 டிபி UFS 4.0 மெமரி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 48MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 32MP அல்லது 20MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்படலாம்.

    • புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக டுவிட்டர் நிறுவன லோகோ நீல பறவையில் இருந்து X ஆக மாற்றப்பட்டது.

    உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது. 

    இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

     

    மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

    எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     

    அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இதில் பிளாக்ஷிப் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடல்களும் இடம்பெற்று இருந்தது. தற்போது இவற்றின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    புதிய கேலக்ஸி டேப் S9 சீரிஸ் கிராபைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி டேப் S9 சீரிஸ் மாடலுக்கான முன்பதிவு சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

     

    கேலக்ஸி டேப் S9 சீரிஸ் விலை விவரங்கள்:

    கேலக்ஸி S9 128 ஜிபி வைபை மாடல் ரூ. 72 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 128 ஜிபி 5ஜி மாடல் ரூ. 85 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 256 ஜிபி வைபை மாடல் ரூ. 83 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 96 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி வைபை மாடல் ரூ. 90 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 பிளஸ் 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 256 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி வைபை மாடல் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999

    கேலக்ஸி S9 அல்ட்ரா 512 ஜிபி 5ஜி மாடல் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 999

    சாம்சங் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் டேப்லெட் சீரிஸ் மாடல்களை வாங்குவோருக்கு அப்கிரேடு போனஸ், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இவற்றின் விலை ரூ. 20 ஆயிரம் வரை குறைகிறது. அனைத்து டேப்லெட் மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்படுகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 5, Z போல்டு 5 இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
    • முந்தைய கேலக்ஸி Z ப்ளிப் 4 விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல்களை தென் கொரியாவில் நேற்று (ஜூலை 26) நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான இந்திய முன்பதிவும் துவங்கியது. தற்போது கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடல்களின் விலை விவரங்களை சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z போல்டு 5 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் லாவென்டர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி Z போல்டு 5 மாடல் ஐசி புளூ, கிரீம் மற்றும் பேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 5 ( 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 99 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z ப்ளிப் 5 ( 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 999

    இந்தியாவில் கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு சாம்சங் லைவ், அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • சாம்சங் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் கேலக்ஸி எஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
    • கேலக்ஸி டேப் S9 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன் கேலக்ஸி டேப் S9, டேப் S9 பிளஸ் மற்றும் டேப் S9 அல்ட்ரா மாடல்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸ் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டேப்லெட் மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

    இவற்றில் 14.6 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, HDR 10+, டைனமிக் ரிப்ரெஷ் ரேட், AKG சவுன்ட், டால்பி அட்மோஸ் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம் அதிக வெளிச்சமுள்ள பகுதிகளுக்கு ஏற்ப பிரைடன்சை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களுடன் கேலக்ஸி எஸ் பென் சப்போர்ட், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட வசதி வழங்கப்பட்டுள்ளது.

     

    அம்சங்கள்:

    டேப் S9: 11 இன்ச் டைனமிக் AMOLED 2x 120Hz டிஸ்ப்ளே, HDR 10+

    டேப் S9 பிளஸ்: 12.4 இன்ச் டைனமிக் AMOLED 2X 120 Hz டிஸ்ப்ளே, HDR 10+

    டேப் S9 அல்ட்ரா: 14.6 இன்ச் டைனமிக் AMOLED 2X 120Hz டிஸ்ப்ளே, HDR 10+

    8 ஜிபி+128 ஜிபி, 256 ஜிபி மெமரி (டேப் S9)

    12 ஜிபி+256 ஜிபி, 512 ஜிபி மெமரி (டேப் S9 பிளஸ்)

    12 ஜிபி+ 256 ஜிபி, 512 ஜிபி மெமரி (டேப் S9 அல்ட்ரா)

    16 ஜிபி+ 1 டிபி மெமரி (டேப் S9 அல்ட்ரா)

    டேப் S9: 13MP பிரைமரி கேமரா, 12MP செல்பி கேமரா

    டேப் S9 பிளஸ்: 13MP+8MP கேமரா, 12MP செல்பி கேமரா

    டேப் S9 அல்ட்ரா: 13MP+8MP கேமரா, 12MP+12MP செல்பி கேமரா

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர்

    5ஜி, எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளுடூத் 5.3

    குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், AKG சவுன்ட், டால்பி அட்மோஸ்

    சாம்சங் நாக்ஸ் செக்யுரிட்டி

    கைரேகை சென்சார்

    IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1.1

    டேப் S9: 8400 எம்ஏஹெச் பேட்டரி

    டேப் S9 பிளஸ்: 10900 எம்ஏஹெச் பேட்டரி

    டேப் S9 அல்ட்ரா: 11200 எம்ஏஹெச் பேட்டரி

    • சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • கேலக்ஸி Z போல்டு 5 மாடல் புளூ, பேன்டம் பிளாக் மற்றும் கிரீம் நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை தென் கொரியாவில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதில் 7.6 இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2x ஸ்கிரீன், 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 4MP அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்டிருக்கிறது.

    இத்துடன் 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 அம்சங்கள்:

    7.6 இன்ச் 2176x1812 பிக்சல் QXGA+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே

    120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    6.2 இன்ச் 2316x904 HD+ டைனமிக் AMOLED 2x கவர் டிஸ்ப்ளே

    120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர்

    12 ஜிபி LPDDR5x ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி UFS 4.0 மெமரி

    ஆன்ட்ராய்டு 13 மற்றும் ஒன் யுஐ 5.1.1

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ கேமரா

    10MP செல்பி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத்

    யுஎஸ்பி டைப் சி

    4400 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

    4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5 மாடல் புளூ, பேன்டம் பிளாக் மற்றும் கிரீம் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பல்வேறு அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    • சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலில் 3.4 இன்ச் அளவில் கவர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி Z ப்ளிப் 5, அடுத்த தலைமுறை ப்ளிப் போன் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ப்ளிப் போன் மாடலில் 6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளெக்ஸ் பிரைமரி டிஸ்ப்ளே, 1 முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் கவர் ஸ்கிரீன் முந்தைய Z ப்ளிப் 4 மாடலை விட 3.78 மடங்கு பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவர் ஸ்கிரீன் 3.4 இன்ச் அளவு கொண்டிருக்கிறது. இது சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 5 அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே

    1-120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட்

    3.4 இன்ச் 720x748 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    60Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பார் கேலக்ஸி பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி LPDDR5X ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1.1

    12MP வைடு கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10MP செல்ஃபி கேமரா

    5ஜி, 4ஜி, வைபை 6E, ப்ளுடூத் 5.3 LE

    யுஎஸ்பி டைப் சி

    வாட்டர் ரெசிஸ்டன்ட் IPX8

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    3700 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்

    வயர்லெஸ் பவர்ஷேர், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 5 ப்ளிப் போன் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவென்டர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் க்ளியர் கேட்ஜெட் கேஸ், பிளாப் இகோ லெதர் கேஸ், ப்ளிப்-சூட் கேஸ் மற்றும் ரிங் கொண்ட சிலிகான் கேஸ் போன்ற அக்சஸரீக்களும் கிடைக்கிறது. 

    • லெனோவோ நிறுவனம் தனது யோகாபுக் 9i மாடலை முதன்முதலில் 2023 CES-இல் அறிவித்தது.
    • புதிய யோகாபுக் 9i மாடலில் டூயல் டச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    லெனோவோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய யோகாபுக் 9i மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2023-இல் அறிவிக்கப்பட்ட யோகாபுக் 9i மாடல் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய லெனோவோ யோகாபுக் 9i மாடலில் இன்டெல் இவோ பிளாட்ஃபார்ம், புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் இரண்டு 13.3 இன்ச் 2.8K OLED பியூர்சைட் டிஸ்ப்ளே, டால்பி விஷன் HDR சப்போர்ட் உள்ளது. இதில் உள்ள டூயல் ஸ்கிரீன் தொழில்நுட்பம் லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட் என தேவைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. மெல்லிய டிசைன் கொண்டிருப்பதால், இந்த லேப்டாப் எங்கும் பயன்படுத்தலாம்.

     

    லெனோவோ யோகாபுக் 9i அம்சங்கள்:

    2x 13.3-இன்ச் 2.8K OLED டச் ஸ்கிரீன், 400 நிட்ஸ் பிரைட்னஸ்

    13th Gen இன்டெல் கோர் i7-1355U பிராசஸர்

    இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்

    16 ஜிபி LPDDR5X ரேம்

    1 டிபி PCIe Gen 4 SSD

    வின்டோஸ் 11 / வின்டோஸ் 11 ப்ரோ

    2x2 வாட் + 2x1 வாட் போவர்ஸ்&வில்கின்ஸ் ஸ்பீக்கர்

    டால்பி அட்மோஸ் சப்போர்ட்

    FHD IR+ RGB வெப்கேமரா

    பேஸ் பென் 4.0, ஃபோலியோ ஸ்டான்ட், ப்ளூடூத் கீபோர்டு

    3x USB C போர்ட்கள், ப்ளூடூத் 5.2, வைபை 6E

    80 வாட் ஹவர் பேட்டரி

    விலை மற்றும் முன்பதிவு விவரங்கள்:

    லெனோவோ யோகாபுக் 9i மாடல் டைடல் டியல் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் முன்பதிவு லெனோவோ வலைதளம் மற்றும் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    • சமீபத்திய டீசரில் போவா 5 ப்ரோ எல்இடி லைட்டிங் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்தது.
    • இன்பினிக்ஸ் மாடலின் எல்இடி லைட் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் புதிய போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி லைட்கள் அடங்கிய டிசைன் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் கான்செப்ட் நத்திங் போன் 2 போன்றே இருந்தாலும், தோற்றத்தில் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் புதிய போவா 5 ப்ரோ மாடலுக்கான எல்இடி லைட்டிங் சிஸ்டம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில் போவா 5 ப்ரோ மாடலில் அழைப்புகள் வரும் போது, மூன்று எல்இடி ஸ்ட்ரிப்கள் ஒரே புள்ளியில் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    டிசைன் அடிப்படையில் இது நத்திங் போன் 2 மாடலின் அச்சு அசலான காப்பி இல்லை என்ற போதிலும், கான்செப்ட் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்தது தான். மேலும் டெக்னோவின் இந்த செயலுக்கு நத்திங் டுவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது. டெக்னோ வெளியிட்ட டீசர் அடங்கிய டுவிட்டர் பதிவை ரிடுவீட் தெய்த நத்திங், "அடுத்த முறை எங்களின் வீட்டு பாடத்தை காப்பி அடுக்க விரும்பினால், எங்களிடம் கேளுங்கள்," என்று கூறி இருக்கிறது.

    டெக்னோ மட்டுமின்றி இன்பினிக்ஸ் நிறுவனமும் நத்திங் போன்ற டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் எல்இடி லைட்களும் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதோடு நிறங்களும் நத்திங் போன் 2 போன்று பிளாக், வைட் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் செயல்பாட்டுக்கு பதில் அளித்த நத்திங் நிறுவனர் கார்ல் பெய், "வழக்கறிஞர்களை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்து இருந்தார். நத்திங் நிறுவனம் இந்த பிரச்சினையை உண்மையில் சட்டரீதியாக அணுக முடிவு செய்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • நாய்ஸ் லுனா ரிங் குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் ரிங்-இல் பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி, டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லுனா ரிங் மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ரிங் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை லுனா ரிங் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் போட் நிறுவனம் தனது ஸ்மார்ட் ரிங் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மாடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் லுனா ரிங் மாடல் சவுகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

     

    பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும்.

    நாய்ஸ் லுனா ரிங் அம்சங்கள்:

    குறைந்த எடை கொண்ட மிக மெல்லிய டிசைன்

    70-க்கும் அதிக உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி

    BLE 5 தொழில்நுட்ரம்

    நாய்ஸ்பிட் ஆப் வசதி

    மேம்பட்ட சென்சார்கள்

    பில்ட்-இன் அல்காரிதம்கள்

    உடல்நல சென்சார்கள்

    ஐஒஎஸ் 14-க்கு பிந்தைய மற்றும் ஆன்ட்ராய்டு 6-க்கு பிந்தய ஒஎஸ் சப்போர்ட்

    வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    60 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    7 அளவுகள் மற்றும் 5 வித நிறங்களில் கிடைக்கிறது

    முன்பதிவு மற்றும் சலுகை விவரங்கள்:

    லுனா ரிங் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி Early Access பெற முடியும்

    - வெளியாகும் நாளிலேயே வாங்கும் போது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி

    - நாய்ஸ் i1 ஸ்மார்ட் ஐவேர் சாதனத்தை 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 4 ஆயிரத்து 499-க்கு வாங்கிட முடியும்

    - ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள காப்பீடு

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி, இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா டிசைன் வழங்கப்படும் என்றும் இது எதிர்கால தோற்றம், வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரன்ட் போட்டோ க்ரோமேடிக் ரியர் பேனல் டிசைன் வழங்கப்படுகிறது.

    இதுவரை உருவாக்கியதிலேயே சக்திவாய்ந்த மெஷின்களில் ஒன்றாக GT சீரிஸ் இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்து உள்ளது. இத்துடன் விளம்பரம் இல்லாத ஒஎஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

     

    முன்பதிவு சலுகைகள்:

    - முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ், கார்பன் பாக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி அல்லது எக்சேன்ஜ் முறையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி

    - ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை

    ×