என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடல் நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை ரூ. 13 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரிடெிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

    கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் ஃபார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கிறது. சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு எவ்வித எக்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி அம்சங்கள்:

    6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே

    120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ GPU

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 1 டிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1

    IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    200MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    10MP டெலிபோட்டோ லென்ஸ்

    10MP டெலிபோட்டோ லென்ஸ்

    12MP செல்ஃபி கேமரா

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    குறிப்பு: கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு எவ்வளவு காலம் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அந்த வகையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். 

    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.
    • குறுகிய கால சலுகையாக பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சோனி இந்தியா நிறுவனம் கேமர்களுக்கு நற்செய்தியை அறிவித்து இருக்கிறது. இன்று (ஜூலை 25) துவங்கி பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 5 விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை உயர்வுக்கு முன் இந்த கன்சோல்களின் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 49 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    சோனி பிளே ஸ்டேஷன் 5 சலுகை விவரங்கள்:

    பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் விலை ரூ. 47 ஆயிரத்து 490 என்று மாறி இருக்கிறது. இந்த விலை குறைப்பு டிஸ்க் எடிஷனுக்கு மட்டும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சோனி இந்தியா நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 வைத்திருப்போருக்கு அசத்தல் கேம்களை இந்த ஆண்டு வழங்க இருக்கிறது.

    அந்த வகையில், ஹாக்வர்ட்ஸ் லெகசி, பைனல் பேன்டசி XVI, மார்வல் ஸ்பைடர் மேன் 2, அசாசின்ஸ் கிரீட் மிரேஜ் மற்றும் ஆலன் வேக் 2 உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    சோனி இந்தியாவின் சிறப்பு சலுகை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை ரிடெயில் ஸ்டோர், ஆன்லைன் சேனல்கள், அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்அட்எஸ்சி, ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றிட முடியும்.

    • புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    • மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.

    டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    "நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.

    டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது  அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகள் வழங்கும் ஐகூ நிறுவன சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது.
    • ஐகூ நிறுவன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு.

    ஐகூ இந்தியா நிறுவனம் அமேசான் வலைதளத்தில் ஐகூ குவெஸ்ட் டேஸ் சேல்-ஐ அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகைகள், தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐகூ குவெஸ்ட் டேஸ் சேலில், ஐகூ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு உடனடி பெற முடியும். இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை ஜூலை 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 32 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 49 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 54 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 9 SE 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 28 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 9 SE 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 26 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • 2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச், 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. M2 சிப்செட்களின் மேம்பட்ட வெர்ஷனாக M3 பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் புதிய M3 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மாடல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட டாப் என்ட் மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்று தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட மேக் மினி மாடல் நிச்சயம் வெளியாகும் எனினும், இப்போதைக்கு இது வெளியாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

     

    2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவவர் தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, 13 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 24-இன்ச் ஐமேக் மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவித்து இருகிறார்.

    புதிய ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்றும் இது 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போதைய M2 சிப்செட்களை விட அதிக திறன் கொண்டிருக்கும். தற்போதைய M2 சிப்செட்கள் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
    • அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.

    புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

     

    முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
    • X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

    இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புதிய மோட்டோ G14 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    வெளியீட்டு தேதியுடன் மோட்டோ G14 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலில் 6.5 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் T616 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, மேக்ரோ கேமரா, நைட் விஷன் சப்போர்ட் வழங்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G14 ஸ்மார்ட்போன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    மேலும் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. மோட்டோ G14 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகிவிடும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • டுவிட்டரில் புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
    • டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரான்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரான்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளம் தான் திறக்கிறது. twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

    "வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

    இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • மிவி டுயோபாட்ஸ் K6 மாடலின் சார்ஜிங் கேஸ் 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
    • இதன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 500 நிமிட பிளேடைம் கிடைக்கிறது.

    மிவி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டுயோபாட்ஸ் K6 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டுயோபாட்ஸ் K6 மாடலில் பெபில் வடிவம், மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மெல்லிய இயர்பட்ஸ், கிளாசி பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்-இல் 13mm எலெக்ட்ரோபிலேட் செய்யப்பட்ட டீப் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் AI-ENC வசதி அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து, தெளிவான தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துகிறது. டூயோபாட்ஸ் K6 மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கிறது. இத்துடன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கிறது.

     

    மேலும் யுஎஸ்பி டைப் சி போர்ட், 50ms அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட், டூயல் கனெக்ஷன் மோட், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது.

    மிவி டுயோபாட்ஸ் K6 அம்சங்கள்:

    13mm டிரைவர்கள்

    AI-ENC சிப்

    AI என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    டூயல் கனெக்ஷன்

    ப்ளூடூத் 5.3

    லோ லேடன்சி கேமிங் மோட்

    AAC, SBC கோடெக் சப்போர்ட்

    பேட்டரி: 380 எம்ஏஹெச் (கேஸ்), 40 எம்ஏஹெச் (இயர்பட்ஸ்)

    ஸ்விப்ட் சார்ஜ் தொழில்நுட்பம்

    IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய மிவி டுயோபாட்ஸ் K6 மாடல்: புளூ, பிளாக், கிரீன் மற்றும் வைட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மிவி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. 

    • வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக பலன்களை வழங்கும் புதிய சேவையை அறிவித்து இருக்கிறது.
    • புதிய சேவையில் நான்கு சலுகைகள் பல்வேறு விலை பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு வி ஒன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பேக்கேஜ் போன்று சேவையை பெற விரும்புவோருக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பைபர் கனெக்ஷன், இலவச ரவுட்டர், இன்ஸ்டாலேஷன், பிரீபெயிட் மொபைல் மற்றும் ஒடிடி ஆப்ஸ் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

    தற்போது ரூ. 2 ஆயிரத்து 192 துவக்க விலையில் நான்கு சலுகைகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைக்கு இதில் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டேட்டா ரோல்-ஓவர் மற்றும் பின்ஜ் ஆல்நைட் இன்டர்நெட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச இண்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும்.

     

    வி ஒன் ரூ. 2 ஆயிரத்து 192 சலுகை பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 3 ஆயிரத்து 109 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - 90 நாட்களுக்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி, ஹங்காமா மியூசிக்

    - 90 நாட்களுக்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 93 நாட்கள் ஆகும்

     

    வி ஒன் ரூ. 8 ஆயிரத்து 390 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    வி ஒன் ரூ. 12 ஆயிரத்து 155 பலன்கள்:

    - அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் பிரீபெயிட் சிம்

    - 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் பைபர் பிராட்பேன்ட் சேவை

    - ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்

    - ஒரு வருடத்திற்கு சோனிலைவ் மொபைல், வி மூவிஸ் மற்றும் டிவி விஐபி

    - ஒரு வருடத்திற்கு ஜீ5 சந்தா

    - இந்த சலுகையின் வேலிடிட்டி 368 நாட்கள் ஆகும்

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் மேம்பட்ட உடல்நல டிராக் செய்யும் அம்சங்களை கொண்டிருக்கும்.
    • புதிய ஸ்மார்ட் ரிங் உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் பெயரில், புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருகிறது. இது உடல்நலம் டிராக் செய்வதற்காக மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ரிங் மாடல் ஆகும். புதிய அணியக்கூடிய சாதனம் பற்றிய தகவல்கள் தென் கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ரிங் மாடலுக்கான காப்புரிமை பெற்று இருக்கிறது.

    புதிய சாதனத்தை உருவாக்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மெய்கோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ரிங் மாடல், கேலக்ஸி வாட்ச் மாடலை விட உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வகையில் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய கேலக்ஸி வாட்ச் உற்பத்தி எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

     

    ஸ்மார்ட் ரிங் சாதனத்தை மோதிரம் போன்று அணிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் உடல்நலம் பற்றிய விவரங்களை சேகரிக்கும் திறன் கொண்டிருக்கின்றன. பயனர்கள் இவற்றை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பார்க்க முடியும். புதிய ஸ்மார்ட் ரிங், ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களை விட அதிக துல்லியமாக உடல்நல விவரங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது மட்டுமின்றி எக்ஸ்டென்டட் ரியாலிட்டி சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்ட ஸ்மார்ட் ரிங்-க்கு காப்புரிமை பெறுவதற்கான பணிகளில் சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்மார்ட் ரிங் தவிர, சாம்சங் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனங்களை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜூலை 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5, கேலக்ஸி Z ப்ளிப் 5 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மேலும் சில சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ×