என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    பார்க்க வேற மாதிரி இருக்கு.. விலை இவ்வளவு தானா? பயர் போல்ட் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
    X

    பார்க்க வேற மாதிரி இருக்கு.. விலை இவ்வளவு தானா? பயர் போல்ட் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

    • பயர் போல்ட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தி இருக்கிறது.
    • புதிய பயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன், ப்ளூடூத் காலிங் வசதிகளை கொண்டிருக்கிறது.

    பயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை 1.28 இன்ச் HD டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், ஏராளமான உடல்நல மற்றும் ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், சுழலும் கிரவுன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன், வட்ட வடிவம் கொண்ட டயல் வழங்கப்பட்டு இருக்கிறது. நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா மாடலில் உள்ள பேட்டரி அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்:

    1.28 இன்ச் TFT LCD டிஸ்ப்ளே, 240x240 பிக்சல் ரெசல்யூஷன்

    வட்ட வடிவம் கொண்ட டயல்

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன்

    சுழலும் கிரவுன், பிரீமியம் டிசைன்

    பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன்

    ப்ளூடூத் காலிங்

    உடல நல டிராக்கிங் அம்சங்கள்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    பில்ட்-இன் கேம்ஸ்

    ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    விலை விவரங்கள்:

    பயர் போல்ட் ப்லிசர்டு அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று பயர் போல்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இதன் விலை ரூ. 21 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை பயர் போல்ட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×