என் மலர்
புதிய கேஜெட்டுகள்
விரைவில் இந்தியா வரும் ரியல்மி 11 5ஜி.. லீக் ஆன சூப்பர் தகவல்!
- ரியல்மி நிறுவனத்தின் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- சமீபத்தில் ரியல்மி 11 5ஜி மாடல் தாய்வான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்னும் பத்து நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் தாய்வான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இதன் அம்சங்கள், டிசைன் மற்றும் இதர விவரங்கள் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட பெரிய கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. தோற்றத்தில் இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மற்ற ரியல்மி 11 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
ரியல்மி 11 5ஜி அம்சங்கள்:
6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
16MP செல்பி கேமரா
5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 5, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் புதிய ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.