என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    மிக குறைந்த விலை.. இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!
    X

    மிக குறைந்த விலை.. இரண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!

    • இரு ஸ்மார்ட்போன்களும் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிரான்டிங்கில் அறிமுகம் செய்து இருக்கிறது. ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரெட்மி 12 5ஜி மாடலில் 6.79 இன்ச் Full HD, LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எம்ஐயுஐ 14, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன்கள் மூன்ஸ்டோன் சில்வர், பேஸ்டல் புளூ மற்றும் ஜேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 12 மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி 12 5ஜி மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று துவங்கி, டாப் என்ட் மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 4-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×