search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் போக்கோ M6 ப்ரோ 5ஜி.. அசத்தல் டீசர் வெளியீடு..!
    X

    விரைவில் இந்தியா வரும் போக்கோ M6 ப்ரோ 5ஜி.. அசத்தல் டீசர் வெளியீடு..!

    • போக்கோ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது.
    • போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய M6 ப்ரோ 5ஜி மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய டீசரில் போக்கோ பிரான்டு இந்த தகவலை தெரிவித்து இருக்கிறது. இது போக்கோ பிரான்டின் முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

    டீசர்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா சென்சார்கள் தோற்றத்தில் ரெட்மி 12 5ஜி மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களும் ரெட்மி 12 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் FHD+5 90Hz LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் போக்கோ எல்லோ என பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    போக்கோ M6 ப்ரோ 5ஜி மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் குறைந்த விலை மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் விலை இதைவிட குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    Next Story
    ×