search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 1500 தள்ளுபடி விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன்.. ஒப்போ அசத்தல்..!
    X

    ரூ. 1500 தள்ளுபடி விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன்.. ஒப்போ அசத்தல்..!

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் கொண்டுள்ளது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட A58 ஸ்மார்ட்போன் 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் தனது A58 ஸ்மார்ட்போனினை சத்தமின்றி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6.72 இன்ச் FHD+ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒஎஸ் 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் குளோயிங் சில்க் டிசைன் உள்ளது. ஒப்போ குளோவின் புதுமைமிக்க டிசைன் மூலம் இது சில்க்-சாடின் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ஒப்போ A58 அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்

    ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்

    ARM மாலி-G52 2EEMC2 GPU

    6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு சார்ந்த கலர் ஒஎஸ் 13.1

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்பி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ A58 ஸ்மார்ட்போன் குளோயிங் பிளாக் மற்றும் டேஸ்லிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ரூ. 1500 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    Next Story
    ×