என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • டி.வி. வாங்கும் போது ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.
    • பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.

    சாம்சங் நிறுவனம் தனது டாப் என்ட் டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி சாம்சங் நியோ QLED, OLED, QLED மற்றும் 4K UHD டி.வி. மாடல்களை வாாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் கீழ் பயனர்கள் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை பரிசுகளாக பெற முடியும்.

    "தி ஃபியூச்சர் ஃபெஸ்ட்" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு விற்பனையில் சாம்சங் டி.வி. மற்றும் சவுன்ட்பார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இதில் சாம்சங்கின் பிரீமியம், 50 இன்ச் மற்றும் அதைவிட பெரிய திரை கொண்ட டி.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்த டி.வி. மாடல்கள் சினிமேடிக் ஆடியோ விஷூவல் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளன. இவற்றில் டால்பி அட்மோஸ், நியூரல் ஏ.ஐ. குவாண்டம் பிராசஸர் மற்றும் ஏ.ஐ. அப்ஸ்கேலிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    சலுகை விவரங்கள்:

    பெரிய திரை டி.வி. வாங்கும் போது ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன், ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டிவி, ரூ. 37 ஆயிரத்து 990 மதிப்புள்ள வயர்லெஸ் சவுன்ட் பார் உள்ளிட்ட நிச்சய பரிசுகள்.

    சாம்சங் 98 இன்ச் நியோ QLED 4K, QLED 4K டி.வி. வாங்கும் போது கேலக்ஸி S23 அல்ட்ரா இலவச பரிசாக வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட 50 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்ட நியோ QLED, OLED, QLED மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டி.வி. வாங்கும் போது சாம்சங் Q சீரிஸ் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    சாம்சங் 85 இன்ச் மற்றும் 75 இன்ச் நியோ QLED டி.வி. வாங்கும் போது ரூ. 69 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் 50 இன்ச் QLED 4K தி செரிஃப் டி.வி. வழங்கப்படுகிறது.

    சாம்சங் 65 இன்ச் மற்றும் 55 இன்ச் OLED மற்றும் QLED 4K டி.வி.-க்களை வாங்கும் போது ரூ. 15 ஆயிரத்து 990 மதிப்புள்ள சாம்சங் சவுன்ட்பார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 20 சதவீதம் வரை கேஷ்பேக், சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகைகள் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை முன்னணி விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இ ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
    • மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 91 மற்றும் ரூ. 288 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு சலுகைகளுடன் டேட்டா பலன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் வேலிடிட்டி எதுவும் வழங்கப்படவில்லை.

    இரண்டு சலுகைகளும் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. எனினும், இவை சென்னை வட்டாரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கிறது. அந்த வகையில், இந்த சலுகைகள் மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 91 சலுகையில் 600 எம்.பி. டேட்டா, 700 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. அந்த வகையில், பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்த சலுகையை கொண்டு இந்த சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 288 சலுகையில் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதன்பிறகு டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகை தினமும் அதிகளவு டேட்டா எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற ஒன்று ஆகும்.

    • இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.
    • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் பிரிவு மாடல் ஆகும். இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன், 8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த பிரிவில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வசதிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 64 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள்:

    6.6 இன்ச் 1612x720 பிக்சல், HD+ ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்

    IMG PowerVR GE 8320 GPU

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்.ஒஎஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், குவாட் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல் டிம்பர் பிளாக், ஷைனி கோல்டு, கேலக்ஸி வைட் மற்றும் ரெயின்போ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 15-ம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பரோடா வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    • மின்சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு.

    அமேசான் கிரேட் ரிபப்லிக் சேல் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என மின்சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இது அதன் உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு ஆகும்.

     


    இந்த சலுகை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. மேலும் இது, கேலக்ஸி S23 அல்ட்ரா பேஸ் வேரியண்டிற்கும் பொருந்தும். இதுதவிர கேலக்ஸி S23 அல்ட்ரா 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடலுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஃபேண்டம் பிளாக், கிரீன் மற்றும் கிரீம் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

    • அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியது.
    • அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததும் காரணம் என தகவல்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டாலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

     


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஒப்போ 11 சீரிஸ் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகள் அப்டேட் வழங்கப்படுகிறது.
    • ரெனோ 11 ப்ரோ மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரெனோ 11 சீரிஸ் மாடல்களில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED ஃபிலெக்சிபில் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெனோ 10 போன்றே ரெனோ 11 மாடலிலும் டிமென்சிட்டி 7050 பிராசஸர், ரெனோ 11 ப்ரோ மாடலில் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கும் மூன்று ஒ.எஸ். அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

    புகைப்படங்களை எடுக்க 32MP டெலிபோட்டோ லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 11 மாடலில் 50MP கேமராவும், ப்ரோ மாடலில் 50MP IMX890 சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ மாடல்களில் முறையே 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஒப்போ ரெனோ 11 அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ 2412x1080 பிக்சல் FHD+ OLED கர்வ்டு டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஒ.எஸ். 14

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

     


    ஒப்போ ரெனோ 11 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ 2412x1080 பிக்சல் FHD+ AMOLED HDR 10+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர்

    மாலி G610 MC6 GPU

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த கலர் ஒ.எஸ். 14

    50MP IMX890 பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    80 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போன் வேவ் கிரீன் மற்றும் ராக் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெனோ 11 ப்ரோ மாடல் பியல் வைட் மற்றும் ராக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இரு மாடல்களின் முன்பதிவு ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ரெனோ 11 ப்ரோ மாடலின் விற்பனை ஜனவரி 18-ம் தேதியும், ரெனோ 11 ப்ரோ விற்பனை ஜனவரி 25-ம் தேதியும் துவங்குகிறது.

    • போன் 2 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
    • தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகளும் அறிவிப்பு.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரிபப்ளிக் டே 2024 சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகை விற்பனை ஒரு நாள் முன்னதாகவே துவங்க உள்ளது. இந்த நிலையில் நத்திங் நிறுவனம் தனது போன் 2 மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    அதன்படி நத்திங் போன் 2 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நத்திங் போன் 2 மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி போன்ற வேரின்ட்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சலுகையின் படி நத்திங் போன் 2 மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 34 ஆயிரத்து 999 என மாற இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு ஆகும். தள்ளுபடி மட்டுமின்றி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரமும், பழைய சாதனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 3 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி பெறலாம்.

    இதே போன்று 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 39 ஆயிரத்து 999, ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 65 வாட் CMF சார்ஜர் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இது அதன் உண்மை விலையை விட ரூ. 2 ஆயிரம் குறைவு ஆகும்.

     


    நத்திங் போன் 2 அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ OLED 1-120 Hz LTPO ஸ்கிரீன்

    அதிகபட்சம் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அதிகபட்சம் 12 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP 114 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 4cm மேக்ரோ ஆப்ஷன்

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    4700 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • ப்ளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்குகிறது.

    அமேசான் வலைதளத்தில் கிரேட் ரிபப்ளிக் டே சேல் (Great Republic Day Sale) சிறப்பு விற்பனை ஜனவரி 13-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குடியரசு தினத்திற்கு முன்பு துவங்கும் சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு மட்டும் முன்கூட்டியே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது.

    கிரேட் ரிபப்ளிக் டே சேலில் பயனர்கள் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த பலன்களை பெற முடியும். அமேசானுக்கு கடும் போட்டியாளராக பார்க்கப்படும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 14-ம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    சிறப்பு விற்பனை குறித்து அமேசான் வெளியிட்டுள்ள தகவல்களில், அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போருக்கு இந்த விற்பனை 12 மணி நேரம் முன்னதாகவே துவங்கிவிடும். இத்துடன் ஏராளமான பொருட்களை ஒன்று அல்லது இரண்டே நாட்களில் டெலிவரி பெறும் வசதியும் வழங்கப்படுகிறது.

    எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து அமேசான் இதுவரை முழு தகவல்களை வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். பொருட்கள் மட்டுமின்றி அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் சேவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படலாம்.

    தற்போதைய தகவல்களின் படி அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களை வாங்கும் போது அதிகபட்சம் 75 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. 

    • விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

     


    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ சீரிஸ் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இதன் டாப் என்ட் வேரியண்டில் 24 ஜி.பி. ரேம் உள்ளது.

    அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 8 ப்ரோ சீரிஸ் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. இதில் 6.78 இன்ச் FHD+ AMOLED HDR டிஸ்ப்ளே, 165 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 15 சதவீதம் மெல்லியதாகவும், எடை குறைவாகவும், மெல்லிய பெசல்களையும் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP 3x டெலிபோட்டோ லென்ஸ், பில்ட்-இன் OIS, 32MP அல்ட்ரா வைடு செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் செல் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் ஹைப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     


    அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம்

    1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரோக் யு.ஐ.

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    65 வாட் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ மாடலின் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 999 என்றும் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஏரோ ஆக்டிவ் கூலர் எக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 999 ஆகும்.

    • சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    கேலக்ஸி S24 சீரிசில் - கேலக்ஸி S24, கேலக்ஸி S24 பிளஸ் மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், இவை பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக லீக் ஆகி வருகின்றன. அதன்படி கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளன.

    இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களில், இந்தியாவில் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சாம்சங் நிறுவனம் ஜனவரி 18 அல்லது 19-ம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போனின் வினியோகம் ஜனவரி 24-ம் தேதியே துவங்கும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி S24 பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999 அல்லது ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 999 என துவங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • காரை மேடைக்கு கொண்டுவந்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
    • மேடைக்கு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    சோனி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அஃபீலா எனும் பெயரில் உருவாகும் இந்த கார் உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ்-இல் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ். 2024) நிகழ்வில் சோனி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. சோனியின் எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும் என்பதை விட, அந்நிறுவனம் காரை எப்படி மேடைக்கு கொண்டுவந்தது என்ற விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

     


    தற்போது வரை கான்செப்ட் வடிவில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலை சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் 5 டூயல் சென்ஸ் கண்ட்ரோலர் மூலம் மேடைக்கு கொண்டு வந்தது. கன்ட்ரோலர் மூலம் இயக்கப்பட்ட நிலையில், சோனியின் எலெக்ட்ரிக் கார் ரிமோட் முறையில் மேடைக்கு வந்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    சோனியின் எலெக்ட்ரிக் காரில் உண்மையில் இதுபோன்ற வசதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது. மேலும் இதுபோன்ற வசதி பயனர்களுக்கு வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் சோனி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


     

    மூன்று ஆண்டுகளாக தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி இந்த ஆண்டின் டெக் நிகழ்விலும் பங்கேற்ற அஃபீலா கார் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சோனி மற்றும் ஹோண்டா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த கார் அன்ரியல் என்ஜின் 5.3 பயன்படுத்துகிறது.

    இன்டர்நெட் சார்ந்த மெட்டா டேட்டா கொண்டு பயனர்கள் 3டி மேப், விர்ச்சுவல் ஸ்பேஸ் மற்றும் ஆக்மென்டெட் ரியாலிட்டி வியூ போன்றவற்றை இயக்க முடியும். காரில் பயணிக்கும் போதும், கார் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பயணிகள் பொழுதுபோக்கிற்காக சோனியின் மீடியா கேட்டலாக் வழங்கப்படுகிறது.

    அஃபீலாவில் உள்ள மல்டி கேமரா டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம்களை தயார்ப்படுத்தும் வகையில் செயற்கை சுற்றுச்சூழல்களை அன்ரியல் என்ஜின் உருவாக்குகிறது. குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட்-இன் அஸ்யூர் கம்ப்யூட்டிங், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியோடு இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன.



    ×