என் மலர்
தொழில்நுட்பம்
- மோட்டோ G34 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மோட்டோ G32 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் கட்-அவுட், இரட்டை கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோ G34 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். கொண்டிருக்கும் மோட்டோ G34 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, PDAF, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 3.5mm ஆடியோ ஜாக், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை மோட்டோ G34 5ஜி மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் ஐஸ் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மோட்டோ G34 5ஜி மாடலின் விற்பனை ஜனவரி 17-ம் தேதி துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளங்கள் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட் 8 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் 13MP கேமரா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்டராக்டிவ் மேஜிக் ரிங், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் வழங்கப்படுகிறது. இதன் கேமராவுடன் போர்டிரெயிட் மோட் மற்றும் ஏ.ஆர். ஷாட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் பின்புறம் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இத்துடன் 8MP செல்ஃபி கேமரா மற்றும் முன்புறம் ஃபிளாஷ் லைட் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒ.எஸ். 13, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ரெயின்போ புளூ, ஷைனி பிளாக், டிம்பர் பிளாக் மற்றும் கேலக்ஸி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் விலை ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
- ஆப்பிள் ஐபோனுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- ஐபோன் மாடலுக்கான சிறப்பு சலுகைகள் குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு விஜய் சேல்ஸ்-இல் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு சலுகை விற்பனை 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர், ஆன்லைன் வலைதளத்தில் நடைபெறுகிறது.
சிறப்பு விற்பனை காரணமாக 128 ஜி.பி. மெமரி கொண்ட ஐபோன் 13 விலை ரூ. 51 ஆயிரத்து 820 என மாறியுள்ளது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 900 ஆகும். ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 61 ஆயிரத்து 160 ஆக மாறி இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 490 என துவங்குகிறது.

ஐபோன் 15 சீரிஸ் சலுகை விவரங்கள்:
ஐபோன் 15 பேஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரத்து 990
ஐபோன் 15 பிளஸ் பேஸ் மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 820
ஐபோன் 15 ப்ரோ 128 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 900 (வங்கி சலுகைகள் சேர்த்து)
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி. ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 990 (வங்கி சலுகைகள் சேர்த்து)
- ஸ்மார்ட்வாட்ச்-இன் சில்வர் எடிஷன் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது.
- வாட்ச் ப்ரோ சில்வர் எடிஷன் விற்பனை இந்த மாதமே துவங்க இருக்கிறது.
சி.எம்.எஃப். பை நத்திங் பிராண்ட் கடந்த ஆண்டு வாட்ச் ப்ரோ பெயரில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் டார்க் கிரே மற்றும் மெட்டாலிக் கிரே என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிராண்ட் தனது ஸ்மார்ட்வாட்ச்-இன் சில்வர் எடிஷன் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
மினிமலிஸ்ட் டிசைன் அடிப்படையில் உருவாகி இருக்கும் சில்வர் எடிஷனில் அலுமினியம் அலாய் வாட்ச் ஃபிரேம் உள்ளது. இத்துடன் லைட் கிரே நிற ஸ்டிரைப்கள் உள்ளன. புதிய எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் சில்வர், ஆரஞ்சு, டார்க் கிரே மற்றும் ஆஷ் கிரே போன்ற நிறங்களில் ஒன்றை தேர்வு செய்யும் ஆப்ஷன் கிடைத்திருக்கிறது.

இந்திய சந்தையில் சி.எம்.எஃப். வாட்ச் ப்ரோ சில்வர் எடிஷன் விற்பனை இந்த மாதமே துவங்க இருக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் ஜெனரல் டிரேட் உள்ளிட்ட தளங்களில் நடைபெற இருக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை சி.எம்.எஃப். வாட்ச் ப்ரோ மாடலில் பாலிஷ்டு மெட்டல் ஃபிரேம், பக்கவாட்டில் டயல், பிளாஸ்டிக் பேக் உள்ளது. இத்துடன் 1.96 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 24 மணி நேர ஹெல்த் டிராக்கிங், ரியல் டைம் ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்சிஜன் சேச்சுரேஷன் மானிட்டரிங், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கிங் போன்ற வசதிகள் உள்ளன.
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் வாட்ச் ப்ரோ மாடல் ப்ளூடூத் காலிங் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 340 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. மேலும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.
- மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டையொட்டி ஐகூ நிறுவனம் தனது ஐகூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐகூ நியோ 7 5ஜி ஏராளமான அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 31 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை குறைப்பை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ 7 5ஜி மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் ஐகூ நியோ 7 5ஜி விரைவில் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு 15 அப்டேட்-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
- மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது.
- சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X6 சீரிஸ் மற்றும் M6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி 11-ம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை அந்நிறுவனம் ஒவ்வொன்றாக டீசர் வடிவில் அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், போக்கோ X6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் பற்றிய தகவலை அந்நிறுவனம் டீசராக வெளியிட்டு உள்ளது. அதன்படி போக்கோ X6 ப்ரோ 5ஜி மாடலில் சியோமியின் ஹைப்பர்-ஒ.எஸ். வழங்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஒ.எஸ். கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சாதனமாக இது இருக்கும்.
இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து போக்கோ F5 மாடலுக்கும் ஹைப்பர்-ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதே போன்று சியோமி மற்றும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் புதிய ஒ.எஸ். அப்டேட் வழங்கப்பட உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை போக்க X6 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராஸர் வழங்கப்படுகிறது. இதன் பேக் பேனலில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mm2 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சேம்பர் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
- சாட்பாட்கள் மனிதர்களை போன்ற உரையாடல்களை மேற்கொண்டு அசத்துகின்றன.
- கூகுள் அசிஸ்டன்ட்-க்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. வழங்கப்படலாம்.
ஒபன்-ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி.பி.டி. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் உள்ளிட்டவை அதிக பிரபலமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு சேவைகளான சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை பழையதாகிவிட்டன. சமீபத்திய சாட்பாட்கள் மனிதர்களை போன்ற உரையாடல்களை மேற்கொண்டு அசத்துகின்றன.
மேலும் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன. ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் உள்ள டீஃபால்ட் அசிஸ்டன்ட்களுக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. செயலி மாறி வருகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் சேவைக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. சேவை விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சாட்-ஜி.பி.டி. ஆண்ட்ராய்டு செயலியின் சமீபத்திய வெர்ஷனில் உள்ள கோட்-களில் இருந்து, இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனத்தில் டீஃபால்ட் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட சாட்-ஜி.பி.டி. வெர்ஷன் 1.2023.352-இல் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய ஆக்டிவிட்டியில் 'com.openai.voice.assistant.AssistantActivity' இடம்பெற்றுள்ளது.
இந்த ஆக்டிவிட்டி தானாக டிசேபில் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை எனேபில் செய்ய முடியும். இதனை எனேபில் செய்ததும், திரையில் தற்போதைய சாட்-ஜி.பி.டி. அனிமேஷன் போன்றே காட்சியளிக்கும். இது மற்ற செயலிகளின் மேல் தோன்றும். அந்த வகையில், பயனர்கள் எந்த ஸ்கிரீனில் இருந்து கொண்டும் சாட்-ஜி.பி.டி.-யுடன் பேச முடியும்.
தற்போது சாட்-ஜி.பி.டி. சேவையை பயன்படுத்த பிரத்யேகமாக செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த சேவை டீஃபால்ட்-ஆக வரும் பட்சத்தில் பயனர்கள் தனியே செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
- இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஸ்டான்டர்டு கிளாஸ் பேக் வெர்ஷனும் அறிமுகமாகிறது.
ஐகூ நிறுவனம் தனது நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து புதிய தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் ஐகூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐகூ நியோ 9 ப்ரோ மாடலில் டூயல் டோன் டிசைன், பிரீமியம் வீகன் லெதர் ஃபினிஷ், பிரத்யேக சதுரங்க வட்ட வடிவ கேமரா, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டான்டர்டு கிளாஸ் பேக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ 9 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K LTPO AMOLED ஸ்கிரீன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், சோனி IMX920 சென்சார், OIS, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா மற்றும் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் இந்த ஸ்மார்ட்போனை 9 நிமிடங்களில் 1-இல் இருந்து 40 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். மற்ற ஐகூ ஸ்மார்ட்போன்களை போன்றே ஐகூ நியோ 9 ப்ரோ மாடலும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- விவோ X100 சீரிசில் இரு மாடல்கள் இடம்பெற்று உள்ளன.
- விவோ X100 ப்ரோ மாடலில் 100 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ X100 மற்றும் X100 ப்ரோ என்ற பெயரில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றில் 6.78 இன்ச் 1.5K, 120Hz Curved 8T LTPO AMOLED ஸ்கிரீன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 50MP கஸ்டமைஸ் செய்யப்பட்ட IMX920 VCS பயோனிர் பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X100 ப்ரோ மாடலில் 50MP கஸ்டமைஸ் செய்யப்பட்ட IMX989 VCS பயோனிக் பிரைமரி கேமரா, OIS, 50MP செய்ஸ் சூப்பர் டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

விவோ X100 மற்றும் X100 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LPTO AMOLED ஸ்கிரீன்
டிமென்சிட்டி 9300 பிராசஸர்
இமார்டலிஸ் G720 GPU
12 ஜி.பி., 16 ஜி.பி. LPDDR5X ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி. UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14
டூயல் சிம் ஸ்லாட்
விவோ X100 - 50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு கேமரா
64MP டெலிபோட்டோ கேமரா
விவோ X100 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு லென்ஸ்
50MP டெலிபோட்டோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ஃபை ஆடியோ
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
விவோ X100 - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
விவோ X100 ப்ரோ - 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
100 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
விவோ X100 மாடல் ஆஸ்டிராய்டு பிளாக் மற்றும் ஸ்டார்டிரெயில் புளூ நிறங்களில் கிடைக்கிறது. விவோ X100 ப்ரோ மாடல் ஆஸ்டிராய்டு பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
விவோ X100 மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 63 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவோ X100 ப்ரோ விலை ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும்.
- ரெட்மி நோட் 13 5ஜி மாடலில் 100MP கேமரா உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிசுடன் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
6 ஜி.பி., 8 ஜி.பி., 12 ஜி.பி. LPDDR4X ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. UFS 2.2 மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 14
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
100MP பிரைமரி கேமரா, OIS
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
33 வாட் சார்ஜிங்
ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வைட், ஸ்டெல்த் பிளாக் மற்றும் ப்ரிசம் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களில் 200MP கேமரா உள்ளது.
- ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் 6.67 இன்ச் 1.5K 120Hz OLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசஸர், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 7200 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெப்பத்தை கையாள ப்ரோ மாடலில் 9000mm² கூலிங் சொல்யூஷனும், ப்ரோ பிளஸ் மாடலில் 4000mm² VC ஹீட் டிசிபேஷன் ஷீட் உள்ளது. இரு மாடல்களிலும் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி உள்ளது.

ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
6.67 இன்ச் 2712x1220 பிக்சல் 1.5K OLED 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
நோட் 13 ப்ரோ - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசஸர், அட்ரினோ 710 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. LPDDR4X ரேம்
128 ஜி.பி., 256 ஜி.பி. UFS 2.2 மெமரி
நோட் 13 ப்ரோ பிளஸ் - டிமென்சிட்டி 7200 அல்ட்ரா பிராசஸர், மாலி G610 MC4 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. LPDDR5 ரேம்
256 ஜி.பி., 512 ஜி.பி. UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14
டூயல் சிம் ஸ்லாட்
200MP பிரைமரி கேமரா, OIS
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
நோட் 13 ப்ரோ - 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் சார்ஜிங்
நோட் 13 ப்ரோ பிளஸ் - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 ப்ரோ மாடல் ஆர்க்டிக் வைட், கோரல் பர்ப்பில் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 27 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடல் ஃபியுஷன் வைட், ஃபியுஷன் பர்ப்பில் மற்றும் ஃபியுஷன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் மற்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 33 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 35 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- வங்கி சார்ந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் அதிவேகமான 33 வாட் சூப்பர் வூக் சார்ஜிங் வசதி, 4 ஜி.பி. ரேம், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டைனமிக் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C67 5ஜி மாடல் தற்போது விசேஷ சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சார்ந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
பயனர்கள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஜனவரி 31-ம் தேதிக்குள் ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடியுடன், தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

ரியல்மி C67 5ஜி அம்சங்கள்:
6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர்
Arm மாலி - G57 MC2 GPU
4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
2MP போர்டிரெயிட் கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டகி
33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்






