என் மலர்
தொழில்நுட்பம்
- இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும்.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வு சான் ஜோஸ் நகரில் நடைபெற உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதும், அதன் இந்திய முன்பதிவு பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், இந்திய பயனர்கள் புதிய கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய முடியும். புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோரில் மேற்கொள்ளலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பயனர்கள் தற்போது செலுத்தும் முன்பதிவு கட்டணம் ரூ. 1999, ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதன் விலையில் இருந்து தானாக குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் முடிவை மாற்றிக் கொள்பவர்கள், தாங்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற முடியும்.
- போக்கோ X6 சீரிசில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது.
- போக்கோ X6 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
போக்கோ பிரான்டு தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் போக்கோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியான நிலையில், தற்போது இந்த தகவல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய போக்கோ X6 சீரிசில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று போக்கோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இது ரெட்மி ஸ்மார்ட்போனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த மாடல் போக்கோ X6 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடலில் 6.67 இன்ச் 1.5K OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- ரெட்மி நோட் 12 4ஜி விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
- வங்கி சலுகைகளாக ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி.
இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சீரிசில் அனைத்து மாடல்களும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நோட் சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், ரெட்மி நோட் 12 4ஜி விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ரெட்மி நோட் 12 4ஜி விலை தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

விலை குறைப்பின் படி ரெட்மி நோட் 12 4ஜி விலை தற்போது முறையே ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டு விட்டது. இதுதவிர ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ. மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன்படி ரெட்மி நோட் 12 4ஜி விலை ரூ. 10 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 499 என்று மாறிவிடும். இந்த ஸ்மார்ட்போன் லூனார் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் ஐஸ் புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் மாடல்களுக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு முறை புதிய மாடல் அறிமுகமாகும் போதும், அதனை உடனே வாங்க தனி ரசிகர் பட்டாளமும் ஐபோனுக்கு எப்போதும் இருக்கும். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
அறிமுகமான ஒரே வாரத்தில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அறிமுகமான சமயத்தில் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 79 ஆயிரத்து 990 என்றும் 256 ஜி.பி. விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜி.பி. விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 7-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகைகளை பயனர்கள் 130 விஜய் சேல்ஸ் ஸ்டோர்கள் மற்றும் வலைதளத்தில் பெற முடியும்.
விஜய் சேல்ஸ்-இல் ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. ரூ. 70 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ. 12 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஐபோன் 15 ப்ரோ 1 டி.பி. விலை ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலின் இதர வெர்ஷன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிது.
- இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- விலை குறைப்பு தவிர வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A54 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி A54 5ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A54 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போதைய விலை குறைப்பின் படி கேலக்ஸி A54 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 36 ஆயிரத்து 999-க்கும் 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 38 ஆயிரத்து 999-க்கும் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் வைட், ஆசம் லைம், ஆசம் வைலட் மற்றும் ஆசம் கிராஃபைட் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A54 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 5.1, டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இத்துடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP டெப்த் சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
- டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. விற்பனை விரைவில் துவங்க இருப்பதை ஒட்டி, ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலின் உற்பத்தி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஷன் ப்ரோ 2 மாடல் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன.
அதன்படி இரண்டாம் தலைமுறை விஷன் ப்ரோ மாடலில் சற்றே அதிநவீன மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அதிக பிரகாசமான மற்றும் அதிக திறன் கொண்ட மைக்ரோ OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது ஒவ்வொரு கண்களிலும் வழக்கமான 4K டிவி மாடல்களில் இருப்பதை விட அதிக பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தென் கொரிய செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், ஆப்பிள் விஷன் ப்ரோ 2 மாடலில் RGB OLEDoS டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டிஸ்ப்ளேக்கள் தற்போதைய WOLED டிஸ்ப்ளேக்களை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது RGB OLEDoS ரக டிஸ்ப்ளேக்களை வினியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக சாம்சங் உள்ளது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய விஷன் ப்ரோ மாடலின் டிஸ்ப்ளே மாற்றுவதில் உறுதியாக இருந்தால், சாம்சங் டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் மாடல்களில் பயன்படுத்தப்படும் OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைன் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
தற்தோதைய விலை குறைப்பு ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் என இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். முன்னதாக ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் குறைந்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர், மாலி G57 10-கோர் GPU, 50MP OIS பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத், யு.எஸ்.பி. டைப் சி போன்ற வசதிகள் உள்ளன.
- டீசரில் "தி அல்டிமேட் பிரிடேட்டர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
- இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ நிறுவனம் தனது போக்கோ X6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர்களில் "தி அல்டிமேட் பிரிடேட்டர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
டீசருடன் போக்கோ வெளியிட்டுள்ள வீடியோவில் போக்கோ விளம்பர தூதர் ஹர்திக் பான்டியா இடம்பெற்று இருக்கிறார். டீசர் வீடியோவில் வேட்டை துவங்குகிறது என்பதை குறிக்கும் காட்சிகள் மட்டும் இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர வேறு தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனினும், மீடியாடெக் டிமென்சிட்டி 8300 அல்ட்ரா பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக போக்கோ X6 சீரிஸ் இருக்கும் என்று போக்கோ உறுதிப்படுத்தி இருக்கிறது. இதே பிராசஸர் ரெட்மி K70E மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் போக்கோ பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K70E மாடலில் 6.67 இன்ச் 1.5K OLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி, கிளாஸ் பேக், பிளாஸ்டிக் ஃபிரேம் வழங்கப்படுகிறது.
இத்துடன் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன்.
- ஒன்பிளஸ் 12R இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் 12R மாடல் அந்நிறுவனம் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஐயன் கிரே மற்றும் கூல் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இடதுபுறத்தில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படுகிறது.

சீனாவை தொடர்ந்து ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக R பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் சேன்ட் கோல்டு நிறத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. / 16 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ் 12R ல்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 கொண்டிருக்கலாம். இத்துடன் 6.78 இன்ச் OLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
- மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.
அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
- டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.
- இந்த ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் அறிமுகமாகும்.
ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய A70 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரியுடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், புதிய ஐடெல் A70 ஸ்மார்ட்போன் நான்குவித நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் அளவில் பெரிய நாட்ச் வழங்கப்படுகிறது. மேலும் இது ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷனிலும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் தடிமனான பெசல்கள், அகலமான டிஸ்ப்ளே நாட்ச், முன்புறம் எல்.இ.டி. ஃபிளாஷ், பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறமாகவும், இடதுபுறம் சிம் டிரே வழங்கப்படுகிறது. ஐடெல் A70 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக ஐடெல் நிறுவம் தனது A05s ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஐடெல் A05s 4 ஜி.பி. வெர்ஷனின் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் கடந்த அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
விவோ X100 சீரிஸ் இந்திய வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோ வெளியிட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றையும் விவோ இந்தியா உருவாக்கி இருக்கிறது.
முன்னதாக விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தன. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X100 சீரிஸ் இந்திய வேரியண்ட்களிலும் இதே பிராசஸர் மற்றும் 8T LTPO டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்காக வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆஸ்டிராய்டு பிளாக், ஸ்டார்டிரெயில் புளூ மற்றும் சன்செட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபன்டச் ஒ.எஸ். 14, செய்ஸ் பிரான்டு கேமராக்கள், IP68 சான்று கொண்டிருக்கும் என்று உறுதியாகி இருக்கிறது.
விவோ X100 சீரிஸ் அறிமுகமாகும் அதே நாளில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.






