search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள அபாயம்"

    • பேச்சிப்பாறை அணை 42 அடியை எட்டியது
    • பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் 1500-க்கு மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பியுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிற்றாறு அணைகள் நிரம்பியதை யடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டது. தற்பொழுது அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்ப டும். அணை நீர்மட்டம் இன்று காலை 42.02 அடி யாக உயர்ந்தது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    கோதையாறு, திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். எப்பொ ழுது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படும் பட்சத்தில் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதை கண் காணித்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.72 அடியாக உள்ளது. அணைக்கு 382 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலை யோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குளச்சல், இரணியல், குழித் துறை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. இரணியலில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும், அணைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகு படி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    6500 ஹெக்டேரில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து வேளாண் துறை அதிகாரி கள் அவர்களுக்கு தேவை யான விதை நெல்களை தங்குதடையின்றி வழங்கி வருகிறார்கள்.

    • திடக்கழிவு மேலாண்மையை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
    • 2026-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அந்தக் குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வெ.திருப்புகழ் சமர்ப்பித்தார். 690 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களுக்கு நீர் வந்து செல்லும் பாதைகளை உருவாக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்ளிட்ட 14 துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மையை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ள காலங்களில் வெள்ள நீர் வெளியேறும் வழிதடங்களை உறுதி செய்யும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தினால் சென்னையில் மழை நீர் தேங்காது. மழைநீர் வடிகால் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

    போரூர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், திரு.வி.க. நகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை தொடர் பணிகளாக மேற்கொள்ள வேண்டும்.

    போரூரில் இருந்து வெள்ளநீர் வெளியேறும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் வெள்ளநீர் வெளியேறும் பாதையை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    இறுதி அறிக்கையில் 12 அத்தியாயங்கள் உள்ளன. அதில் 365 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. ஆலோசனைக் குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த பிறகு சென்னையில் 11 இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும், 460 நாட்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கையாலும், அரசு எடுத்த நடவடிக்கையாலும் வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    2026-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
    • அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அக்குழுவினர் சென்னை பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை ஆலோசனைக் குழுத் தலைவர் வெ.திருப்புகழ் சமர்ப்பித்து, அறிக்கையின் விவரங்களை எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

    ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க, அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன் பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. நானும், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்த நிலையில் வெள்ளத் தடுப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்தன. அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.

    அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் கமிட்டியின் செயல்பாடுகள். இதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்திட்ட திருப்புகழ், குழுவின் உறுப்பினர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    முதலமைச்சர் என்ற முறையில் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய அரசு உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் நீங்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், சென்னை வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    • உதவி கலெக்டர் எச்சரிக்கை
    • அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாண்டஸ் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர் வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அவர் பேசுகையில் கால்வாய்களில் அடைப்புகள் காணப்பட்டாலோ, ஏரிகளின் மதகுகள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டலோ அவை குறித்து விரிவான அறிக்கையினை அந்த பகுதி தாசில்தாருக்கும், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியான மீட்பு பணிகள் மேற்கொளவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தாசில்தார் சிவப்பிரகாசம், உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • வெள்ளப்பெருக்கால் வட மாவட்டங்களில் அதிக பாதிப்பு.
    • 58 மீட்புக் குழுக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    புவனேஸ்வர்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஜார்க்கண்டில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்படுவதால், வட ஒடிசாவில் அனைத்து ஆறுகளிலும் நீர்மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் ஒடிசா வட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    தேசிய பேரீடர் மீட்பு படையினர், மாநில பேரீடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அடங்கிய 58 மீட்புக் குழுக்கள் பாலசோர் மற்றும் மயூர்பாஞ்ச் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 763 கிராமங்களில் 5 லட்சம் பேர் மாயமாகி உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 

    மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சிண்டா பகுதியில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், அது விரைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஒடிசாவைக் கடந்து விட்டதால் நேரடி பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ×