search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் ஒப்பந்தம்"

    • பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, மனு தாக்கல் செய்தார்.
    • பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுைவ சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    ரபேல் போர் விமாங்கள் கேம் சேஞ்சராக திகழும், ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa
    புதுடெல்லி :

    பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை, ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் ஒரு கேம் சேஞ்சர் என இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரான்சிடம் வாங்கும் ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கவுள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இவை இரண்டும் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரித்து கேம் சேஞ்சராக திகழும்.

    36 ரபேல் விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுகோய் 30 விமானத்தை தர 3 ஆண்டும், ஜாகுவார் விமானத்தை தர 5 ஆண்டும் தாமதம் செய்தது. எனவே அதற்கு பதிலாக ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa 
    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனில் (சிவிசி) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று மனு அளித்துள்ளனர். #Rafale #Congress #CVC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மனு அளித்தது.

    இந்நிலையில், மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்த காங்கிரஸ் குழு, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தியதாகவும் மத்திய அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சவுத்திரியிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு தந்தனர். மேலும், இந்த விஷயத்தில் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பொய்கள் கூறி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த ஷர்மா, கபில் சிபில், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் தன்கா, பர்மோத் திவாரி மற்றும் பிரனாவ் ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பில் இருந்துள்ளனர்.
    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், “ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்” என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #Rafale #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:-

    ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என விளக்கம் அளித்திருந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. 30-ம் தேதி ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டே சர்ச்சை கருத்தை வெளியிடுகிறார். இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டவை போல தோன்றுகிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் காணப்படுகின்றன. 



    ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர். 

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, தான் முன்பு கூறியதை உடனே மறுக்கிறார். அவர் இரண்டாவதாக அளித்த பேட்டியில், “ ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது. இது குறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என, குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.

    ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

    என அருண் ஜெட்லி பேசினார்.
    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கணக்காய்வு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிஏஜியை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #RafaleDeal #CAG #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க அதனை மறுத்து வருகிறது.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இருகட்சிகள் இடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது. 

    இந்நிலையில், மத்திய கணக்கு தணிக்கை தலைவரை இன்று சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  ஆனந்த் சர்மா, ரன்தீப் சுர்ஜேவாலா, கமல்நாத், கபில் சிபல் உள்ளிட்டோர் இவ்விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். 

    விமான கொள்முதல் விவகாரத்தில் நேரிட்டுள்ள முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள அவர்கள், இதுதொடர்பாக முழு விசாரணையை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டனர்.

    “ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிஏஜியிடம் தாக்கல் செய்துவிட்டோம். ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டு, தனியார் நிறுவனம் எவ்வாறு சேர்க்கப்பட்டது குறித்து விளக்கியுள்ளோம். விரைவில் சிஏஜி அறிக்கை அளிப்பார்கள் என நம்புகிறோம்” என ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். 
    ×