search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் முகாம்"

    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணாகுகை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தபோதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அடர்ந்த வனப்பகுதியின் நடுவே குளிர்ந்த காற்றுடன் ஏரிப்பகுதியில் பயணம் மேற்கொள்வது புத்துண ர்ச்சியை தருகிறது. பேரிஜம் ஏரிக்கு செல்ல மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். வனப்ப குதியை ஒட்டி யுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதி யில் முகாமிட்டு வருகின்றன.

    குறிப்பாக யானைகள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று பேரிஜம் ஏரியில் தடை விதிக்கப்பட்டது. யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரி வித்தனர்.

    • வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
    • மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.

    இதையொட்டிய வனப்பகுதியான வண்ணாத்திப்பாைற, சுருளியாறு உள்ளிட்ட இடங்களில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.

    குறிப்பாக யானைகள் கூட்டமாக முகாமிட்டு ள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்கு வனத்துறை அலுவலக குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பகுதியிலேயே நீண்ட நேரம் காத்திருக்கிறது.

    வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் இங்கு முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 2 யானைகளும் முகா மிட்டுள்ளதால், வனப்பகு தியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
    • வனத்தை யொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜ கடை வனப்பகுதியில், ஆந்திரா மாநில எல்லையில் உள்ள வனப்பதியாகும். இந்த வனப்பகுதியில் ஏற்கனவே 5 யானைகள் முகாமிட்டுள்ளன.

    அந்த யானைகள் அடிக்கடி வனத்தை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள் விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் தமிழக எல்லை வனப்பகுதியான, கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்தது.

    இந்த யானைகளை வனத்துறையினர், வேறு வனப்பகுதிக்கு விரட்ட முயன்ற போது, அவை மகாராஜகடை வனப்பகுதிக்கு வந்துவிட்டது. ஏற்கனவே 5 யானைகள் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 2 யானைகளும் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    இதனிடையே, வனத்தையொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

    • வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, வனத்தை யொட்டிய மலை கிராமங்க ளில் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து கணுவாய் வழியாக மருதமலை அடிவாரத்திற்கு குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன.

    இந்த காட்டு யானைகள் மருதமலை அடிவாரம், பாரதியார் பல்லைக்கழகம், ஐ.ஓ.பி.காலனி, யானை மடுவு உள்ளிட்ட பகுதியிலேயே 2 நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

    நேற்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதியில் 20 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதுபற்றிய தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்டு யானைகள் யானைமடுவு பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வலம் வருகின்றன.

    மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் அந்த யானைகள் ஊருக்குள் நுழைந்து விடாத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.
    • அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பலா மரங்களில் ஏராளமான பிஞ்சுகள் காய்த்துள்ளன. இதை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு வந்து, இங்குள்ள வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை முள்ளூர் கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் அங்கு வீடுகள் உள்ளதால், கிராமத்துக்குள் யானை நுழைந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனா். மேலும் காட்டு யானை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 80 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
    • விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடே துர்கம், சானமாவு ஆகிய வனப்பகுதிகளில் புகுந்து முகாமிட்டு உள்ளன.

    இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரங்களில் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இதனிடையே சானமாவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் 80 யானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    அப்போது வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 80 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவனத்தம் வனப்பகுதி சூரப்பன் குட்டை என்ற பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள் பாலேகுளி, திம்மசந்திரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.

    இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், ஜவளகிரி வனச்சரக அலுவலர் சுகுமார் ஆகியோர் தலைமையில் 40 பேர் கொண்ட வனக்குழுவினர் சூரப்பன்குட்டையில் இருந்து யானைகளை திம்மசந்திரம், நொகனூர் வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள், விவசாயிகள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம், இரவு நேரங்களில் வனப்பகுதியை யொட்டி விவசாய விளைநிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

    • விவசாயிகள் அச்சம்
    • தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே தமிழக எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரா மாநில பகுதியில் 15 யானைகள் கொண்ட கூட்டம் சாலையின் குறுக்கே இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு கடந்து சென்றுள்ளது.

    இதனால் குடியாத்தம் பலமநேர் சாலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நின்று ஒலி எழுப்பி யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினர்.

    குறிப்பாக முசலமடுகு காலவபல்லி பகுதியில் நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கடந்து வந்து சென்றுள்ளது.

    தமிழக வனப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆந்திர மாநிலம் எல்லையோரம் உள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோர்தானா கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் யானைகள் கூட்டம் மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.
    • அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதைத் தவிர கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி, சான மாவு, போடூர்பள்ளம், ஊடேதுர்க்கம் என பல வனப்பகுதிகளில் பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகின்றன.

    இந்த ஆண்டும் வழக்கம் போல 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அவை விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.

    அவற்றுடன் தற்போது வந்துள்ள கர்நாடக யானைகளில் இருந்து 20 பிரிந்து அங்கு சென்றுள்ளன. இந்த 70 யானைகளும் அய்யூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை சாமஏரியில் தண்ணீர் குடித்தும், குளித்தும் மகிழ்கின்றன. சாமஏரியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டத்தை அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.

    மேலும் சிலர் செல்போன்களில் படம் பிடித்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்துள்ளன.

    சானமாவு காப்பு காட்டில் பாலேகொண்டா ஏரி பகுதியில் 50 யானைகள்

    முகாமிட்டுள்ளன. அவை அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன. இந்த யானைகள் எந்த நேரமும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    மேலும் யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்பதால் யானைகளின் நடமாட்டத்தை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்கள்.

    வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் ஆடு, மாடுகளை மேய்க்க வர வேண்டாம். மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காவலுக்கு யாரும் இருக்க வேண்டாம் என்றனர்.

    • யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். 

    • குன்னூர் பகுதியில் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன.
    • யானைகள் விளையாடி மகிழ்வது சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.

    ஊட்டி, ஜூன்.10-

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. கூடலூர், குன்னூர் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    தற்போது பலாப்பழ சீசன் நடப்பதால் யானைகள் பலாப்பழத்தின் வாசனை அறிந்து அவற்றை தேடி வந்து உட்கொள்கின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இவற்றில் காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன. குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள் கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் சுற்றித்திரிகின்றன.

    சாலையை ஒட்டியுள்ள மண்மேட்டில் புரண்டு அந்த யானைகள் உற்சாகத்தில் திளைக்கின்றன. மேலும் ஒரு யானையை மற்றொரு யானை விரட்டியும் விளையாடிய படி உள்ளன. இந்த காட்சிகளை சுற்றுலாபயணிகள் ரசித்தபடி பார்த்து செல்கிறார்கள்.

    அவ்வப்போது அந்த யானைகள் சாலையையும் கடந்து வந்து விடுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையை கவனத்துடன் கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுற்றுலாபயணிகள் ஆர்வத்தில் செல்போனில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், யானைகளுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×