search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மாநகராட்சி"

    • பதில் மனு தாக்கல் குறித்து மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
    • அபராத தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

    இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால் இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.

    மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை நகரில் 100 வார்டுகள் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாள்தோறும் இங்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றது. இதனை அப்புறப்படுத்த வார்டு வாரியாக நிரந்தர மற்றும் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சியில் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள தொகையை உடனே வழங்கக்கோரி மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் அலுவலக நுழைவாயிலில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து மரணமடைந்த தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

    • குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மதுரையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் நாளை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்து பேசுகிறார்.

    மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ரெயில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின் இன்று காலை தென்காசி சென்றடைந்தார்.

    ரெயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பின்னர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வருகிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் காரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் தே. கல்லுப்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து வழிநெடுகிலும் தி.மு.க. வினர் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று மாலை மதுரை வரும் மு.க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (9-ந் தேதி) காலை 10 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார்.

    அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொன்விழா நினைவு நுழைவாயிலை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    பின்னர் காரில் புறப்படும் மு.க.ஸ்டாலின் தல்லாகுளம், கோரிப்பாளையம், வில்லாபுரம் வழியாக பெருங்குடி வருகிறார். மதுரை விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ந் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
    • மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை மறுநாள் (7-ந் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் வண்டி உரிமையாளர் சங்கம், அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்கள் பிரச்சினையை தெரிந்து கொள்ள மென்பொருள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும்.

    மதுரை

    மதுரை மகபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாப்பாளையம் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஜுவாகிருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3-வது தளத்தில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மையத்தில் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சேவைைய தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியின் பொது மக்களுக்கான சேவையில், இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமான பணி. இதற்கு ஒரு கட்டமைப்பு அமைய வேண்டியது முக்கியம். மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நிறைவேறாத பிரச்சினைகள்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

    பொது மக்களும் கோரிக்கை மீதான நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும். மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிய கமிஷனருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் புகாருக்கான தனி அடையாள எண் பெறுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அடுத்தபடியாக கவுன்சிலர்கள் வாரம் ஒரு முறை மென்பொருள் சேவை மூலம் பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மாநகராட்சி கூட்டம்: சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையிலும், கமிஷனர் சிம்ரன் ஜித் காலோன் முன்னிலையிலும் நடந்தது. பெரும்பாலான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால், குறை வான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, தெற்கு தொகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருப்பதால் கழிவுநீர் வெளி யேறி ரோட்டில் செல்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    ×