search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஜு ஜனதா தளம்"

    • ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
    • பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
    • வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதையடுத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இன்று இணைந்தார்.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகின்றது. மாலை 6 மணியளவில் இதன் மீதான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீர்மானம் மீதான விவாதம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அப்படி, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஒட்டெடுப்பு நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் புறக்கணித்துள்ளதால், மெஜாரிட்டி எண் குறைந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தை சிவசேனா மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சி புறக்கணித்துள்ளது.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க 249 எம்.பி.க்கள் போதும். பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 331 பேர் இருக்கின்றனர்.

    தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ், திரினாமுல், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 154 பேர் இருக்கின்றனர். இதனால், பாஜக எளிதாக தீர்மானத்தை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
    பிஜு தனதா தளம் கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் பைஜயந்த் பாண்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.

    அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. 
    ×