search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jal jeevan mission"

    • மோடி, ஒடிசாவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
    • முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே அழைப்பு விடுக்கிறேன்.

    பெர்காம்பூர்:

    ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும் (21 தொகுதி), சட்டசபை தேர்தலும் (147 இடங்கள்) இரண்டு கட்டங்களாக வருகிற 13 மற்றும் ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பெர்காமில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஒடிசாவின் கடலோர பொருளாதாரத்தில் எங்கள் கவனம் உள்ளது. முதல் முறையாக மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்கினோம். படகுகள் தயாரிக்க மானியம் வழங்கினோம். கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கினோம். மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கிேனாம்.

    ஒடிசாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று நாட்டில் சக்தி வாய்ந்த அரசு அமைவதாகும். மற்றொன்று ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைவதற்கான மாற்றம்.

    ஜூன் 4-ந்தேதியுடன் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாகி விடும். இங்கு முதல் முறையாக இரட்டை என்ஜின் அரசாங்கம் விரைவில் அமைய உள்ளது. இது உங்களின் உற்சாகத்தில் இருந்து தெரிகிறது.

    பிஜு ஜனதா தளம் அரசு காலாவதி யாகும் நாளில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி யார்? என்பது அறிவிக்கப்படும்.புவனேஸ்வரில் ஜூன் 10-ந்தேதி அவர் முதல்-மந்திரியாக பதவிஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இங்கு தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளது. இருப்பினும் ஒடிசா மக்கள் ஏழைகளாக இருப்பது ஏன்?

    காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்தது தான் மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளம் கட்சியில் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

    பிஜு ஜனதா தளம் அரசு ஆயுஷ்மான் பாரத் யோ ஜனா திட்டத்தை (மத்திய அரசின் பொது சுகாதார காப்பீடு திட்டம்) செயல்படுத் தாததால் ஒடிசா மாநிலம் பலன் அடையவில்லை.

    'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் ஒடிசாவுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால் பிஜு ஜனதா தள அரசு பணத்தை சரியாக செலவழிக்கவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இந்த மாத இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
    • கடந்த செப்டம்பர் மாதமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டம் எனப்படும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஒப்பந்தப் பணியில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்நிலையில், ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும்.
    • கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின் (CGF) கீழ் ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான அண்ணாமலை நகர் பேரூராட்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் பரங்கிபேட்டை, நகராட்சி, குமாராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் பரங்கிபேட்டை, குமராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, நக்கரவந்தன்குடி, டி.எஸ்.பேட்டை, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலாபாடி, பெராம்பட்டு, சிவபுரி மற்றும் வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 2 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் 2,078 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கூடிய கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் ரூ.255.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் 14.12.2022-ல் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகின் தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற்றது.
    • குஜராத் மற்றும் லட்சத்தீவு பகுதி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, குஜராத் மக்களின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளார். அனைவருக்கும் குடிநீர் வழங்கும் இயக்கத்திற்கு ஆதரவளித்த குஜராத் மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


    இதேபோல் லட்சத்தீவில் உள்ள மினிக்காய், துண்டி, கட்மாட் ஆகியவை தூய்மையான கடற்கரைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் முத்திரை இந்த கடற்கரைகளுக்கும் கிடைத்துள்ளது. இதற்காக லட்சத்தீவு பகுதி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மந்திரி பூபேந்திர யாதவின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இது மகத்தானது குறிப்பாக, இந்த சாதனைக்காக லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் கடற்கரைகள் சிறப்பானது. கடற்கரை தூய்மையை அதிகரிக்க மக்களிடையே உள்ள ஆர்வம் மிகப் பெரியதாகும் என்று கூறியுள்ளார்.

    • மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் கோவா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    பனாஜியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

    சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பாஜக அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது.

    10 கோடி மைல்கல்லை எட்டியது நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தபோது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர்.

    இவ்வளவு பெரிய மக்கள் தொகை போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, பங்குதாரர்களின் கூட்டு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவையே காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×