search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி வாலிபர் கைது"

    • வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடி வந்தது தெரியவந்தது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் மற்றும் காடையாம்பட்டி, தாளபையனூர், தொட்டி பாளையம், ஜம்பை, சன்னி யாசிபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் டெம்போ, டிராக்டர், பள்ளி வாகனம் மற்றும் லாரிகளில் உள்ள பேட்டரி மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக போலீ சாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கோபால், கிரைம் போலீஸ் ஸ்ரீரங்கன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி மஞ்சள் பட்டி பொன்னம்பட்டியான் காடு பகுதியை சேர்ந்த சூர்யா (27) என்பதும் என்ஜி னீயரிங் படித்து விட்டு சிலிண்டர் கடையில் பணி யாற்றி வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்க ப்பட்ட வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரி டம் இருந்து 62 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள 11 பேட்டரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது.
    • பொள்ளாச்சியில் இருந்து காரை திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. அப்ேபாது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அந்த காரையும், காருக்குள் இருந்த ஒரு வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். மேலும் அவர் போதையில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவரிடமிருந்த அடையாள அட்டைகளை வைத்து பார்த்தபோது அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதிைய சேர்ந்த விஜய்(22) என தெரியவந்தது.

    பி.எஸ்.சி ஐ.டி படித்து வந்த இவர் பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளார். கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான விஜய் அதன்பிறகு லாரி டிரைவராக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சொந்த வீடு கட்டுவதற்காக ரூ.8லட்சம் வங்கி கடன் வாங்கினார்.

    நிரந்தர வருமானம் இல்லாததால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன்பிறகு பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திற்கு வேலை தேடி சென்றார். அங்கு வாகனங்கள் கன்சல்டிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    அங்கிருந்த பதிவு செய்யப்படாத புதிய மாருதி காைர திருடி அதை விற்பதற்காக கொடைக்கானல் எடுத்து வந்தார். கொடைக்கானலுக்கு செல்ல வழி தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்றார். காக்காதோப்பு பிரிவில் கார் வந்தபோது பெட்ேரால் இல்லாமல் நின்றுவிட்டது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் போன் செய்து உதவி கேட்டுள்ளார். அப்போதுதான் போலீசாரிடம் விஜய் சிக்கி கொண்டார்.

    இந்த கார் பொள்ளாச்சியில் இருந்து திருடிவந்ததையடுத்து உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் விஜய் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.

    மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்ட தாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மவுலானா ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகைராஜா. இவருடைய மகள் ராஜலட்சுமி என்ற செல்வி (வயது 21). பட்டதாரியான இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த திருமால் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலமாக மாறியது.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அஜித்குமார் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என்னை திருமணம் செய்ய அஜித்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருமணம் ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.

    ×