search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி சுரங்கம்"

    • சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.

    மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.

    நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

    விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

    இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை நிறுத்தினர்.

    பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். போலீசார் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை நிறுத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு வழங்கப்பட்ட அதே நீதி கடலூர் மாவட்ட உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
    • உழவர்களும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு நாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் கத்தாழை பகுதியில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை ஒட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.

    கம்மாபுரம், கத்தாழை பகுதிகளில் உள்ள நிலங்களை அளப்பதற்காகவும், அறிவிக்கை ஒட்டுவதற்காகவும் வாரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால், அப்பகுதி உழவர்களும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு நாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் தரக்கூடியவை. அவை கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக அவதிப்பட வேண்டியிருக்கும். காவிரிப் பாசன மாவட்ட உழவர்களுக்கு ஒரு நீதி.... கடலூர் மாவட்ட உழவர்களுக்கு ஒரு அநீதி கூடாது. இரு பகுதிகளின் உழவர்களும் தமிழ்நாடு அரசு என்ற தாய்க்கு பிள்ளைகள் தான். காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு வழங்கப்பட்ட அதே நீதி கடலூர் மாவட்ட உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ள அனைத்து பணிகளையும் கைவிட அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான ஏலத்தை நடத்தி இருக்கிறது.
    • 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    பல்லடம் :

    மத்திய அரசு தமிழ்நா ட்டை பாலைவனம் ஆக்க பார்க்கிறது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசின் நிலக்கரித்துறை கடந்த 29-3-2023 அன்று தமிழ்நா ட்டில் புதிதாக வீராணம் நிலக்கரி திட்டம், பாளை யங்கோட்டை நிலக்கரி திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி என 5 இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான ஏலத்தை நடத்தி இருக்கிறது. ஏற்கனவே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நிலக்கரி சுரங்கங்கள் இல்லாமல், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுரங்கங்களுக்காக 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.ஒட்டுமொத்தமாக இந்திய அரசு காவிரி டெல்டாவை அழிப்ப தற்கான திட்டங்களை நிலக்கரி எடுப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவித்தி ருக்கிறது.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் இதயமான தஞ்சை மாவட்டம் வடசேரியிலும், காவிரி டெல்டாவிற்குள் 4 சுரங்கங்களையும், காவிரி டெல்டாவை ஒட்டிய பகுதியில் ஒரு சுரங்கம் என ஐந்து சுரங்கங்களை அமைப்ப தற்காக செய்துள்ள அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவி க்கப்பட்ட தஞ்சையில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இந்திய அரசு முன் வருவது, மாநில அரசின் சட்ட, திட்டங்களை மதிக்காத செயலாகும். இந்திய அரசு திட்டத்தை அறிவித்தாலும் நிலம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசினுடைய துறையாக இருப்பதால், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த இயலாது.

    இந்த வேளையில் தமிழ்நாடு முதல்வர் மாநில அரசை கலந்து ஆலோசனை செய்யாமல் இது போன்ற திட்டங்களை அறிவிப்பது சரியானது அல்ல என்று கருத்து தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நிலம் என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் வரக்கூடிய துறையாக இருப்பதால், இது போன்ற பேரழிவு திட்டங்களை செயல்படு த்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆலோ சனை செய்யவில்லை என்று தெரிவித்திருப்பது பொருத்தமானது அல்ல.மின்சார தேவைக்கு நிலக்கரியை எடுக்கிறோம் என்கிற பெயரில் இது போன்ற பேரழிவு திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருப்பது பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டுக்கு அளித்த பேரழிவு பரிசாகவே தமிழ்நாடு இதை கருதுகிறது.

    புதை வடிவ எரிபொ ருட்கள் பயன்படுத்துவதை 2030-ம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் குறைக்க போகிறோம் என்பதை உலக அளவில் இந்திய அரசு அறிவித்து விட்டு, சுற்றுச்சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படுத்தக்கூடிய அனல் மின்சார உற்ப த்தியை ஊக்குவிப்பதற்காக 101 நிலக்கரி வயல்களை ஏலம் விட்டு இருப்பது சுற்றுச்சூ ழலுக்கு மிகப்பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும். மரபுசாரா எரிசக்தியான காற்றாலை, சூரியஒளி மின்சாரம் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டிய இந்திய அரசு தற்போது பேரழிவு பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அதானி சுரங்கம் அமைத்து, நிலக்கரி எடுத்து மின்சாரத்தை தயாரித்து பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். உலக வங்கி உலகம் முழுவதும் உள்ள மின்சார கட்டமை ப்புகளை ஒரே கட்டமை ப்பாக உருவாக்க வேண்டும் என உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து பல்வேறு திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள அம்பானி, அதானி போன்ற தனியார் பெரு நிறுவனங்களையும், இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து, இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும்.சுற்றுச்சூழலை அழிப்பதற்காகவும், தனியார்கள் இயற்கை வளத்தை கொள்ளை அடிப்பதற்காகவும் வழி வகுக்கக் கூடிய திட்டத்தை இந்திய அரசு உருவாக்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் நடந்து கொண்டிருக்க கூடிய சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு இந்த திட்டங்களை செயல்படு த்துவதற்கு ஒப்புதல் வழங்காது எனவும், திட்டங்களை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தீர்மான த்தை நிறைவேற்றி அனுப்பி ட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்கி றது. அதே சமயம் இந்திய அரசு தமிழ்நாட்டை அழிக்க கூடிய நாசக்கார நிலக்கரி சுரங்க திட்டங்களை உடனடியாக ரத்து செ ய்யாவிடில், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று, போராடி தமிழ்நா ட்டை காக்கிற பணியில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் இந்திய அரசு புரிந்து கொண்டு திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் .இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    • காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

    இதற்காக ஒரத்த நாடு அருகே உள்ள வடசேரி, அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல் பட்டி, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்போகும் உள்ள தகவல் தெரிந்தும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    அனைத்து அரசியல் கட்சியினரும் இதை கடுமையாக எதிர்த்தது அறிக்கை வெளியிட்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை கை விட வேண்டும் என்றும் இதற்காக அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி சுரங்கம் டெண்டரையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் மத்திய மந்திரி ஜோஷி வெளியூரில் இருந்ததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதற்கு மத்திய மந்திரி கூறுகையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் உங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

    இந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் பேசும் போது, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

    அப்போது இது தொடர்பாக பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதம் பற்றி விரிவாக பேசி விளக்கம் அளித்தார். அதோடு காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

    இதே சமயத்தில் டெல்லி சென்று இருந்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் நிலக்கரி துறை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்து தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார். அவரிடமும் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இது தொடர்பாக நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூட்டாட்சியின் உணர்விலும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் 3 நிலக்கரி சுரங்க ஏலத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். இதற்கு அண்ணாமலையும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் அவர் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஜோஷியும் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டு இருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி உள்ளார்.

    • தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
    • டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தருணத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது. சுரங்க ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள, சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் வருகின்றன.

    சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளிலும் நிலக்கரி இருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிக்கொணரப்பட்டது.

    இதனால், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படும்; டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சுரங்க ஏலம் விடப்படுகிற பட்டியலில் இருந்து சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 பிளாக்குகளையும் நீக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக பா.ஜ.க. சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்.

    இந்த தகவலை அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியா முழுவதும் 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் தோண்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி. சுரங்கத்தால் 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் டெல்டா பகுதியில் புதிதாக மூன்று சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தான் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

    தற்போது இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. 38 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாதது ஏன்? இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே சட்டமன்றத்தில் மட்டும் பேசினால் போதாது. பாராளுமன்றத்திலும் பேசி இதை ரத்து செய்ய முழு மூச்சோடு தி.மு.க. எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது.
    • மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன், சிவகங்கை மிக வறட்சியான மாவட்டமாக உள்ளது.

    இங்குள்ள விவசாயிகளின் நீர் ஆதாரம் நிலத்தடி நீர் தான். விவசாயத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேர மின்சாரம் என்பது 24 மணி நேரம் மும்முனை மின்சாரமாக வழங்கப்பட வேண்டும்.

    மேலும் விவசாய காலத்தில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம், அருகில் இருக்கும் நிலத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளதால் அதற்கு கட்டணம் கட்டுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர், எனவே அது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, '24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவில் பணி முடிந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

    மேலும், சிவகங்கை தொகுதியில் 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்' என்றார்.

    • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
    • தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இதுபோன்ற திட்டங்களை அரசு அனுமதிக்காது

    சென்னை:

    காவிரி டெல்டா பகுதிகளான ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு ஆகிய 3 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.

    தமிழக அரசிடம் கேட்காமல் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டது காவிரி டெல்டா பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து பல இடங்களில் போராட்டமும் நடந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். இதில் டி.ஆர்.பி. ராஜா (தி.மு.க.), முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.), செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), வானதி சீனிவாசன் (பா.ஜனதா) ஆகியோர் பேசினார்கள்.

    இவர்கள் அனைவருமே காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலக்கரி எடுக்க அனுமதிக்கக்கூடாது என்றனர்.

    வானதி சீனிவாசன் பேசும்போது, "தமிழகத்தில் டெண்டர் கோரப்பட்ட பகுதிகளில் நிலக்கரி எடுப்பதில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும்" என்று நிலக்கரி துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

    இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

    இதுதொடர்பாக நேற்று முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தின் நகலை டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் மத்திய நிலக்கரி துறை அமைச்சருக்கு கொடுத்தனுப்பி இருக்கிறார்.

    மத்திய மந்திரி வெளியூரில் உள்ளதால் இது தொடர்பாக அவரிடம் டி.ஆர்.பாலு தொலைபேசியில் பேசி மேல் நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தி உள்ளார்.

    பாராளுமன்றத்திலும் தி.மு.க. எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் நின்றுவிடாமல் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

    எனவே எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஒருபோதும் இதுபோன்ற திட்டங்களை அரசு அனுமதிக்காது" என்றார்.

    இந்த செய்தி வந்தவுடன் நீங்களெல்லாம் எப்படி அதிர்ச்சி அடைந்தீர்களோ, அதேபோல் நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன். இந்த செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி அதற்கு பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

    அந்த கடிதத்தின் நகலை பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் காரணத்தால் டெல்லியில் உள்ள பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு பிரதியை அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

    இங்கே தொழில்துறை அமைச்சர் சொன்னதுபோல் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் வெளியூரில் இருந்த காரணத்தால் நேரடியாக சந்திக்க முடியாததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

    அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் அனுப்பி இருக்கிற கடிதத்துக்கு நாங்கள் நிச்சயம் மதிப்பு அளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்கிற உத்தரவாதத்தை ஒன்றிய அமைச்சர் சொன்னதாக டி.ஆர்.பாலு செய்தி சொல்லியுள்ளார்.

    ஆகவே நிச்சயமாக சொல்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாக்காரன். எனவே இதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்களைப் போல் நானும் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது... அளிக்காது... அளிக்காது.

    இவ்வாறு அவர் உறுதிபட தெரிவித்தார்.

    • சென்னையை சுற்றி 32 கிலோமீட்டர் பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய எம்.எல்.ஏ.க்கள் பலர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு பட்டா கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    சென்னையை சுற்றி 32 கிலோமீட்டர் பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பட்டா வழங்குவது இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. இப்போது பல ஆண்டுகளாக அங்கு குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்கு வதில்லை.

    எனவே பெல்ட் ஏரியா என்கின்ற அந்த சட்டத்தை எடுக்க வேண்டும். அல்லது புதிதாக சட்ட விதிகளை உருவாக்கி பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு எம்.எல். ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

    இந்த பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ளது. சென்னையிலும் 32 கி.மீ பெல்ட் ஏரியாவாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பும் அதை உறுதி செய்வதாக தான் உள்ளது.

    இதை எப்படி செய்யலாம், எப்படி பட்டா வழங்கலாம், எத்தனை வருடம் வாழ்கிறவர்களுக்கு வழங்கலாம், புதிதாக குடியிருப்பவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்து சாதக பாதகங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    அவசர கோலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை அல்ல, பொறுமையாக தான் எடுக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரிடம் பேசி சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலக்கரி சுரங்க திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
    • ஏல அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

    சென்னை:

    நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நிலக்கரி சுரங்க திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

    வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

    ஏல அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

    எதிர்காலத்தில மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை அறிவிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல்.
    • மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது.

    சென்னை:

    நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    நிலக்கரி எடுப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.காமராஜ் கூறினார்.

    நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. நிலக்கரி சுரங்கம் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் செயல். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

    நிலக்கரி சுரங்கம் அமைக்கும் டெண்டரை உடனடியாக நிறுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் செய்வது கண்டனத்துக்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    இவ்வாறு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது.

    ×