search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal mines"

    • 5 இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான ஏலத்தை நடத்தி இருக்கிறது.
    • 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    பல்லடம் :

    மத்திய அரசு தமிழ்நா ட்டை பாலைவனம் ஆக்க பார்க்கிறது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தெரிவித்தார். இது குறித்து அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:- இந்திய அரசின் நிலக்கரித்துறை கடந்த 29-3-2023 அன்று தமிழ்நா ட்டில் புதிதாக வீராணம் நிலக்கரி திட்டம், பாளை யங்கோட்டை நிலக்கரி திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி என 5 இடங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான ஏலத்தை நடத்தி இருக்கிறது. ஏற்கனவே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நிலக்கரி சுரங்கங்கள் இல்லாமல், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுரங்கங்களுக்காக 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.ஒட்டுமொத்தமாக இந்திய அரசு காவிரி டெல்டாவை அழிப்ப தற்கான திட்டங்களை நிலக்கரி எடுப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவித்தி ருக்கிறது.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் இதயமான தஞ்சை மாவட்டம் வடசேரியிலும், காவிரி டெல்டாவிற்குள் 4 சுரங்கங்களையும், காவிரி டெல்டாவை ஒட்டிய பகுதியில் ஒரு சுரங்கம் என ஐந்து சுரங்கங்களை அமைப்ப தற்காக செய்துள்ள அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவி க்கப்பட்ட தஞ்சையில் நிலக்கரி சுரங்கம் அமைக்க இந்திய அரசு முன் வருவது, மாநில அரசின் சட்ட, திட்டங்களை மதிக்காத செயலாகும். இந்திய அரசு திட்டத்தை அறிவித்தாலும் நிலம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசினுடைய துறையாக இருப்பதால், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த இயலாது.

    இந்த வேளையில் தமிழ்நாடு முதல்வர் மாநில அரசை கலந்து ஆலோசனை செய்யாமல் இது போன்ற திட்டங்களை அறிவிப்பது சரியானது அல்ல என்று கருத்து தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நிலம் என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் வரக்கூடிய துறையாக இருப்பதால், இது போன்ற பேரழிவு திட்டங்களை செயல்படு த்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆலோ சனை செய்யவில்லை என்று தெரிவித்திருப்பது பொருத்தமானது அல்ல.மின்சார தேவைக்கு நிலக்கரியை எடுக்கிறோம் என்கிற பெயரில் இது போன்ற பேரழிவு திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருப்பது பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டுக்கு அளித்த பேரழிவு பரிசாகவே தமிழ்நாடு இதை கருதுகிறது.

    புதை வடிவ எரிபொ ருட்கள் பயன்படுத்துவதை 2030-ம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் குறைக்க போகிறோம் என்பதை உலக அளவில் இந்திய அரசு அறிவித்து விட்டு, சுற்றுச்சூழலுக்கு மாபெரும் கேடு ஏற்படுத்தக்கூடிய அனல் மின்சார உற்ப த்தியை ஊக்குவிப்பதற்காக 101 நிலக்கரி வயல்களை ஏலம் விட்டு இருப்பது சுற்றுச்சூ ழலுக்கு மிகப்பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும். மரபுசாரா எரிசக்தியான காற்றாலை, சூரியஒளி மின்சாரம் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டிய இந்திய அரசு தற்போது பேரழிவு பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து அதானி சுரங்கம் அமைத்து, நிலக்கரி எடுத்து மின்சாரத்தை தயாரித்து பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். உலக வங்கி உலகம் முழுவதும் உள்ள மின்சார கட்டமை ப்புகளை ஒரே கட்டமை ப்பாக உருவாக்க வேண்டும் என உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து பல்வேறு திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள அம்பானி, அதானி போன்ற தனியார் பெரு நிறுவனங்களையும், இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து, இந்தியாவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும்.சுற்றுச்சூழலை அழிப்பதற்காகவும், தனியார்கள் இயற்கை வளத்தை கொள்ளை அடிப்பதற்காகவும் வழி வகுக்கக் கூடிய திட்டத்தை இந்திய அரசு உருவாக்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் நடந்து கொண்டிருக்க கூடிய சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு இந்த திட்டங்களை செயல்படு த்துவதற்கு ஒப்புதல் வழங்காது எனவும், திட்டங்களை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தீர்மான த்தை நிறைவேற்றி அனுப்பி ட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்கி றது. அதே சமயம் இந்திய அரசு தமிழ்நாட்டை அழிக்க கூடிய நாசக்கார நிலக்கரி சுரங்க திட்டங்களை உடனடியாக ரத்து செ ய்யாவிடில், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று, போராடி தமிழ்நா ட்டை காக்கிற பணியில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் இந்திய அரசு புரிந்து கொண்டு திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் .இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    ×