search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமூர்த்திமலை"

    • தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது.
    • மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

    இக்கோவிலில் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    மேலும் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி, காலையில் அருவியில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்திமலையில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். மாட்டு வண்டிகளின் வருகையால் உடுமலை- திருமூர்த்திமலை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தளி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இன்று காலை பக்தர்கள் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பாலாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுத்தனர்.

    • மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.
    • அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன் பூங்கா என பல்வேறு சுற்றுலா அம்சங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், விடுமுறை காலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.

    அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்துக்கு தனியாக உதவி சுற்றுலா அலுவலர் நியமிக்கப்பட்ட பிறகு திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தி வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகியுள்ளது. இந்தாண்டும் கோடை விழா குறித்த எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன.
    • யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன வில ங்குகள் நீர், உணவு தேடி மலையடிவார பகுதி கிராம ங்களுக்கும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் அதிகாலை, குட்டியுடன் கூடிய, யானை க்கூட்டம் திருமூர்த்தி மலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

    வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்ப ட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்து, உள்ளே நுழைந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன. தொடர்ந்து உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டை கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், பயிர்கள் மற்றும் குழாய், மோட்டார், போர்வெல் உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை சேதப்படு த்தியுள்ளன.இது குறித்து தகவல் கிடைத்ததும், உடு மலை வனத்துறையினர் ஆய்வு செய்ததோடு, யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகை யில், பெரிய தந்தங்களுடன் கூடிய ஆண் யானை, சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கொண்ட கூட்டம், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருமூர்த்திமலை கோவில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் வந்துள்ளன. குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை அவற்றை விரட்ட முடியாது.விவசாய பயிர்கள், கட்டமை ப்புகள் சேதம டைவதோடு உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • உடுமலை அருகே மேற்கு த்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்திமலை.
    • நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றிலும் போதியவருவாய் கிடைப்பதில்லை.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு த்தொடர்ச்சி மலை அடிவா ரத்தில் அமை ந்துள்ளது திருமூர்த்திமலை. அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, படகு சவாரி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் என ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு மையமாக இப்பகுதி உள்ளது.திருமூ ர்த்திமலையில் சுற்றுலாவை அடிப்படையாகக்கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்க ளுக்கு சுற்றுலா பயணி களின் வாயிலாக கிடைக்கும் வருவாயே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் திருமூர்த்திமலையில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது, மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுற்றுலா பயணி யருக்காக மலைவாழ் கிராம பெண்கள் உள்ளடக்கிய மகளிர் சுய உதவிக்கு ழுவினர்இயக்கும் படகுகள், கோடை விடுமு றையிலும் காட்சி ப்பொருளாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதே போல் நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றிலும் போதியவருவாய் கிடைப்பதில்லை. இப்பி ரச்சினைகளுக்கு தீர்வாக கோடை விடுமுறை கால த்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்,திருமூர்த்தி மலையில் கோடை விழா நடத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி க்கை விடுக்கப்பட்டு வருகி றது.கோடைவிழா நடத்தப்படும்போது மாநிலம் முழுவதும் எளி தாக திருமூர்த்திமலையின் சுற்றுலா அம்சங்கள் குறித்த தகவல்கள் அனைவருக்கும் கிடைக்கும். பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைப்பதால் உள்ளூர் மக்களும்பயன்பெ றுவார்கள்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. பள்ளி வேலை நாட்களில் நடத்த ப்படும் இவ்விழாவால் சுற்றுலா மேம்பாடு அடைவதில்லை.மாறாக பெயரளவிற்கு அரசுத்துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு 2 நாட்களில் அகற்ற ப்படுகின்றன. இதை மாற்றி கோடை விடுமுறை கால த்தில் முற்றிலும் சுற்றுலா த்துறை சார்பில் மலர் கண்காட்சி உட்பட மக்களை கவரும் அரங்குகளை அமைத்து விழா நடத்தி னால், திருமூர்த்திமலையின் சிறப்புகள்மாநிலம் முழுவதும்எளிதாக சென்று சேரும்.சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அதிகரிக்கும்.மேம்பாட்டுப்பணிகளையும் மேற்கொள்ள முடியும். எனவே இந்தாண்டாவது கோடை விழா நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உடுமலை பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. 

    • மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    உடுமலை :

    வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம் மலையும் மலை சார்ந்த இடமும், அதனுள் உற்பத்தியாகின்ற ஆறுகளும் உயிர்வாழ் வனவிலங்குகளும்தான். இயற்கையோடு இரண்டறக் கலந்த ரம்மியமான ,எழில் மிகுந்த ,மனதை விட்டு நீங்காத சூழல் மண் மற்றும் மூலிகை நிறைந்த காற்றை சுவாசித்து அனுபவிப்பதற்கு இத்தலைமுறையில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதனால் தான் சுற்றுலா என்றதும் ஒவ்வொருவரின் முதல்,முதன்மை, முத்தான தேர்வாக சட்டென நினைவில் வருவது மலை வாழிடங்கள்.

    சுற்றுலாக்களில் பலவகை இருந்தாலும் அதில் இயற்கை சுற்றுலாவே முதலிடம் பிடிக்கிறது.அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனைத்து வளங்களையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்து அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    தென்கையிலாயம் என்று அழைக்கப்படும் தோணிநதி தவழ்ந்து வருகின்ற பாலாற்றின் கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள குன்றில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய கடவுள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். படைத்தல்,காத்தல், அழித்தல் என்ற முத்தொழில் புரிந்து வரும் மும்மூர்த்திகள் ஒருசேர சுயம்புவாக அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய அற்புதக் காட்சியாகும். குன்றின் மீது உப்பு,குருமிளகு, சந்தனம் வீசி பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.1968-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்ற இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளிலும் அபிராமி,மகேசுவரி, கௌமாரி,காளி, வாராகி,அயிராணி,இந்திராணி ஆகிய சப்த கன்னிகள் ஒரே கல்லில் ஒன்றாக அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு முன்பு கார்த்திகை திருவிழாவன்று ஜோதி ஏற்றக்கூடிய 30 அடி உயரம் கொண்ட ஜோதிக்கம்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இதன் அடிப்பாகத்தில் அஷ்ட திக்குகளையும் நோக்கியவாறு பத்திரகாளி, வனதுர்க்காதேவி, விசாலாட்சி ஆகிய மூன்று சக்தி மூர்த்தங்களும் கூத்தாண்டவர், அகோரவீரபத்திரர் ஆகிய சிவ மூர்த்தங்களும் ராம அவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் மூன்று வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது சமய ஒற்றுமை சைவ, வைணவ ஒற்றுமையை குறிக்கும் சான்றாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு முன்பு வரலாற்றை விவரிக்க கூடிய அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் எழுந்தருளி இருக்கும் எட்டுகால் மண்டபமும் பக்தர்கள் தங்கி இளைப்பாறும் வகையில் கட்டப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபமும் இன்றளவும் தன்னிலை குறையாது கம்பீரத்துடன் காட்சி அளித்து வருகிறது.

    குருமலை வனப்பகுதியில் உற்பத்தியாகும் தோணிநதி தென்னாறு,பாலாறு ஆகியவற்றுடன் இணைந்து உழுவியாறு,கொட்டையாரு,பாரப்பட்டி யாரு,உப்புமண்ணம்ஓடை,கிழவிபட்டி ஓடை உள்ளிட்டவற்றை உள்வாங்கி தவழ்ந்து வந்து பஞ்சலிங்கங்கள் எழுந்தருளியுள்ள கூடுதுறையில் ஒன்றிணைந்து நீர்வீழ்ச்சியாக உருமாறி மூலிகைத் தண்ணீரால் எண்ணற்றோரின் மனப்பிணி,உடல் பிணியைப் போக்கி மும்மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைகின்றது பஞ்சலிங்க அருவி.

    பஞ்சபூதங்களும் ஒன்றாக இணைந்து பஞ்சலிங்கேஸ்வரராக காட்சியளிக்கும் மலைமீது உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால் திருவையாறு, திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வழிபட்ட பாக்கியத்தை பெறலாம்.பஞ்சலிங்கங்களை வழிபடுவதற்கு மாதந்தோறும் வருகின்ற பிரதோஷ தினத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.பஞ்சலிங்க அருவியும் அதன் பராமரிப்பும் இன்று வரையிலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    மும்மூர்த்திகள் குன்றில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளதால் கோபுரம் அமைக்கப்படவில்லை.இதனால் கோபுர வடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை மாசி மாத மகாசிவராத்திரியன்று பூலாங்கிணர் பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குன்றின் மீது வைக்கப்பட்டு விடிய விடிய ஆன்மீகம்,கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் விழா நடத்தப்படுகிறது.அதுதவிர பிரதோஷம், கிருத்திகை,ஆடி,தை புரட்டாசி உள்ளிட்ட விசேச அமாவாசை நாட்கள், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமாவாசை நாட்களில் பாலாற்றின் கரையில் பொதுமக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருகின்ற வழியில் சிறுவர்பூங்கா,நீச்சல் குளம்,வண்ணமீன் காட்சியகம்,படகு இல்லம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் சுதந்திரபோராட்ட வரலாற்றை நினைவு கூறத்தக்க வகையில் தளி பாளையப்பட்டு அரசர் எத்தலப்ப நாயக்கரின் திருவுருவங்களும் போர் முறைகளும் காண்டூர் கால்வாய் அருகே சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.இங்கு தமிழக அரசால் எத்தலப்ப நாயக்கருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.மேலும் கடந்த 2013 - ம் ஆண்டு முதல் தமிழர்களின் வீரம்,கலை,கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகவும் அரசுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து ஆடிப்பெருக்கு விழாவை நடத்தி வந்தது.கொரோனாவிற்கு பின்பு விழா நடத்தப்படவில்லை.

    பல்வேறு சிறப்புகளும் பெருமையும் வாய்ந்த திருமூர்த்தி மலையில் இன்றளவும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2000 ல் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதன் பின்பு நடவடிக்கை எடுக்கவில்லை.ஆனாலும் 2006-ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் சார்பில் 2.5 லட்சமும் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதை மற்றும் பக்கவாட்டு இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டது.மேலும் பஞ்சலிங்க அருவிக்கு முன்பு 1991-ம் ஆண்டில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் சேதம் அடைந்து உள்ளது. அதனுடன் சேர்த்து அருவிக்கு செல்லும் பாதை, பக்கவாட்டு கம்பி வேலி, இரும்புகைப்பிடி, சுகாதார வளாகம் கட்டுவதற்கு கருத்துரு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி கிடைத்த பின்பு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.அதுதவிர கோவில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி,புறக்காவல் நிலையம்,பேருந்து நிறுத்தம்,பார்க்கிங் வசதி,ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைவது மூலமாக குருமலை, குளிப்பட்டி,பூச்சகொட்டாம்பாறை, திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்,பொதுமக்கள்,சுற்றுலாபயணிகள் பயனடைவார்கள்.

    சிறுவர்களைக் கவரும் விதமாக அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவும் அதில் உள்ள பொழுதுபோக்கு உபகரணங்கள், விலங்குகளின் சிலைகள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்தும் வருகின்றது. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதே போன்று 1991-ம் ஆண்டு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட படகுத்துறையும் அணைப்பகுதியில் இயங்கி வந்த படகும் பல்வேறு காரணங்களால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து காட்சிப் பொருளாக மாறி உள்ளது. அதை புதுப்பித்து இயக்குவதற்கு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அதற்கு விரைவில் செயல் வடிவம் கொடுத்து படகு சவாரியை துவக்க வேண்டும்.

    அதே போன்று சுற்றுலா பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது தொலைத்தொடர்பும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும். இதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியமாகும். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் திருமூர்த்தி அணையின் நுழைவு வாயிலில் இருந்து ஷட்டர்கள் வரையிலான 2 கிலோ மீட்டர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.அதுவும் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. நாடி வந்து வணங்குவோர்க்கு முக்தியளிக்கும் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள திருமூர்த்திமலையை சுற்றுலா தளமாக அறிவித்து அனைத்து தரப்பட்ட மக்களையும் கவரும் விதம் அங்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

    • 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.
    • 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும் திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன்காட்சியகம், காண்டூர் கால்வாய் என சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமூர்த்தி அணையின் கரையில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்படுகிறது.கடந்த 2007ல் முதன்முறையாக அணைக்கரையில், பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பினர். பின்னர் பல கட்டங்களாக இக்கருத்துரு மாற்றியமைக்கப்பட்டது.முதற்கட்டமாக அணை கரையில் 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. முதலில் 45 லட்சம் ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

    ஆனால் பூங்கா அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பணியும் இதுவரை துவங்கவில்லை.திருமூர்த்திமலையில் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொலிவிழந்து வருகிறது. சுற்றுலா சார்ந்த வர்த்தகம் முடங்கி அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அணையை ஒட்டிய பகுதி தரிசு நிலம் போல மாறியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவியது.

    அதற்கேற்ப மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் தலைமையில் ஒரு குழுவினர் பல முறை, திருமூர்த்திமலையில் ஆய்வு செய்தனர்.தன்னார்வலர்களை உள்ளடக்கிய சுற்றுலா வளர்ச்சிக்குழுவும் கடந்தாண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரே ஒரு தகவல் பலகை மட்டும் காண்டூர் கால்வாய் அருகே வைக்கப்பட்டது. இவ்வாறு திருமூர்த்தி அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் திட்டம் அரசுத்துறைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாடு குறித்து தேர்தல் வாக்குறுதி வழங்குவது, தவறாமல் நடக்கிறது. தேர்தல் வெற்றிக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை.பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருமூர்த்திமலை வந்த அமைச்சர்களும் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவது தொடர்கதையாக உள்ளது.

    உடுமலை வட்டாரத்தை `இது திருமூர்த்திமலை மண்ணு'என பிற பகுதியினர் குறிப்பிடும் அளவுக்கு பெயர் பெற்ற திருமூர்த்திமலையின் மேம்பாட்டில் இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதே போல் அமராவதி அணைக்கரையிலும் பூங்கா பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையங்களான திருமூர்த்திமலை, அமராவதி அணை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
    • மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அணை அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. கடந்த 1972ல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து இப்பகுதிக்கு அம்மக்கள் இடம் பெயர்ந்தனர்.கடந்த 1984ல் அரசு சார்பில் 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன.

    இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பில், போதியளவு தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் இரவு குடியிருப்பில் காட்டுப்பன்றிகள் புகுந்துள்ளது. அங்கு, தென்னை ஓலை தடுப்புகளால் அமைந்த வீடுகளில், காட்டுப்பன்றிகள் புகுந்து அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தியுள்ளன.அரிசி மற்றும் இதர உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர பாத்திரங்களை சிறிது தூரம் இழுத்து சென்று வீசியுள்ளன.

    இதை பார்த்த மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும் பல மணி நேரம் குடியிருப்பை விட்டு காட்டுப்பன்றிகள் வெளியேறவில்லை. கன்னியம்மாள், சுப்பிரமணி, பழனியம்மாள், கண்ணப்பன் உள்ளிட்டோர் வீடுகளில், அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வாககுடியிருப்புகள் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது.
    • அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையாகவும் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் நகரில் எப்போதும் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நகரில் பெய்யும் மழை காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வெள்ளம் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசன திட்டங்கள் மற்றும் இறவைப்பாசனம் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப நீர் நிலைகள் நிரம்பி இரு கரைகளையும் தொட்டுச்சென்று வேளாண்மை செழிக்க செய்யும் நீர் நிலைகளுக்கும், விதைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், கிராமங்களில் முளைப்பாரி இட்டு, ஆடிப்பெருக்கு அன்று, ஆறுகள், கால்வாய்களுக்கு எடுத்து வந்து, சுவாமியை வணங்கி, ஆறுகளில் முளைப்பாரி விட்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு காரணமாக கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றுதல், கன்னிப்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக நீரிலும், நிலத்திலும் விளையாடி மகிழும் விழாவாகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும் திருமூர்த்தி அணையில் பஞ்சலிங்கம் அருவி, மும்மூர்த்திகள் எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், அணை என சுற்றுலா மையமாக உள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் 'ஆடிப்பெருந்திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் பெரிய அளவிலான அரங்கு அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.அதோடு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதோடு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை. நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி, 'ஆடி 18' வருவதால் நடப்பாண்டு திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
    • மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மலைவாழ் மக்களிடம், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு மலைவாழ் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு டவர் லைன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    மேலும் குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, மாவடப்பு உள்ளிட்ட அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர்.திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதியில் ஆய்வு செய்த போது 17வது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி, குடியிருப்பு தலைவர் கோபால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    திருமூர்த்தி மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில், வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலையாறு மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால் பாம்பாற்றிலும், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் பெய்யும் மழையால், தேனாற்றிலும், வால்பாறை மலையின் கிழக்கு பகுதியில் பெய்யும் மழையால் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, கடந்த மாதம், 27-ம் தேதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம், 87.70 அடியாக இருந்தது. நீர் வரத்து, வினாடிக்கு, 2,750 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, 2,650 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து மூன்று நாட்களாக உபரி நீர் திறக்கப்படுவதோடு, அணையின் துணை ஆறுகள் மற்றும் ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர் வரையிலுள்ள, அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு, 6 ஆயிரம் கன அடி வரை நீர் செல்கிறது. வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்தி மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதோடு, பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் நேற்று திருமூர்த்திமலை கோவில் நடை சார்த்தப்பட்டு பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. மலைப்பகுதியில் பெய்த அதி கன மழையால் நேற்று மதியம், 2 மணிக்கு, திடீரென பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து ஆர்ப்பரித்து ஓடியது.

    திருமூர்த்தி அணையில் காலை நிலவரப்படி மொத்தமுள்ள, 60 அடியில் 55.05 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. திருமூர்த்திமலையில் பெய்யும் மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காண்டூர் கால்வாய் வழியாக அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்தது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் எந்நேரமும்அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது.

    இன்று 2-வது நாளாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து வருவதால் அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ×