பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையாகவும் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் நகரில் எப்போதும் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

நகரில் பெய்யும் மழை காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வெள்ளம் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com