search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள் சீரமைப்பு"

    • சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் புயல் மழையால் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    வெள்ளத்தில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்களை தொழிலாளர்கள் சரி செய்தனர்.

    சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.

    ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார் சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார். 

    • ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
    • பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.

    ராஜபாளையம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.

    அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.

    பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.

    கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.

    மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.

    நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.

    • காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.
    • உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் எனவே அப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் குறைகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.

    அப்பொழுது உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன், கிளை செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர துணைச் செயலாளர் முனிராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹரிநாராயணன், அசோகன், மற்றும் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது.
    • உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    உடுமலை,நவ.30-

    உடுமலை மத்திய பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மாலைமலரிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக பஸ் நிலைய பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி தலைவர் மத்தீன் உத்தரவிட்டார். இதையடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது. அதனை நகராட்சி தலைவர் மத்தீன் பார்வையிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
    • முடிவில் ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரன் நன்றி கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளபொங்கலூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் அபிராமி சோகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்ட்):

    வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக மசநல்லாம்பாளையம் வரை செல்லும் தார் சிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து அரிஜன காலனிகளிலும் காங்கிரீட் சாலைகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து சிரமம் ஏற்படுகிறது. எனவே இதனை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.

    பாலகிருஷ்ணன்(தி.மு.க):

    அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து மழைநீர் செல்லும் பாலம் ஒன்றும் உள்ளது. இந்த நீர்வழிப் பாதையை தனியார் ஆக்கிரமித்து மண் கொட்டப்பட்டு வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் மழைக்காலங்களில் திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்குவதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுப்பிரமணி (தி.மு.க):

    நல்லகாளிபாளையத்தில் இருந்து பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    வக்கீல் எஸ்.குமார் (ஒன்றிய குழு தலைவர்):

    ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசுவின் கோரிக்கையான வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக மசநல்லாம் பாளையம் வரை செல்லும் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மண் கொட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நீர் வழி பாதையும், மழைநீர் செல்ல பாலமும் உள்ளது. இதனை தடுத்து மண் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் ரூ.10 லட்சம் வரை பணிகள் செய்ய பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து பட்டியல் தரப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலுசாமி, லோகுபிரசாந்த், ஸ்ரீ பிரியா, துளசிமணி, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரன் நன்றி கூறினார்.

    ×