என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்.
மாலைமலர் செய்தி எதிரொலி - உடுமலை பஸ் நிலையத்தில் சாலைகள் சீரமைப்பு
By
மாலை மலர்30 Nov 2022 11:05 AM IST

- சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது.
- உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
உடுமலை,நவ.30-
உடுமலை மத்திய பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மாலைமலரிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உடனடியாக பஸ் நிலைய பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி தலைவர் மத்தீன் உத்தரவிட்டார். இதையடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது. அதனை நகராட்சி தலைவர் மத்தீன் பார்வையிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story
×
X