search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roads repair"

    • மதுரை சாலைகள் பற்றி ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது.
    • நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

    மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சாலைகள் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது. இதுவரை வந்ததிலேயே கடுமையான விமர்சனம் இது.

    நிதி பற்றாக்குறையால் திணறும் மதுரை மாநகராட்சிக்கு சாலைகளை மேம்படுத்த நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.
    • இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மழைக்காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்ட வடிவத்தை அப்பெண் முன்னெடுத்துள்ளார்.

    பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    "சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாகவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி இதுவாகும்" என்று அப்பெண் தெரிவித்தார்.

    • சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது.
    • உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    உடுமலை,நவ.30-

    உடுமலை மத்திய பஸ் நிலையம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.மாலைமலரிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உடனடியாக பஸ் நிலைய பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி தலைவர் மத்தீன் உத்தரவிட்டார். இதையடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மூடி சீரமைக்கும் பணி நடந்தது. அதனை நகராட்சி தலைவர் மத்தீன் பார்வையிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×