search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் மறியல்"

    • சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
    • சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

    தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
    • கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

    மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    • தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பொடுகம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக சாலைவசதி கிடையாது. தற்போது மதுரை-நத்தம்-திண்டுக்கல்லுக்கு 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பரளி டோல்கேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • பயணிகள் கடும் அவதி

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த தப்பூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டிடம் பழுதானதால் அதனை கோவிந்தாங்கள் பகுதியில் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரம் அடைந்த தப்பூர் கிராம மக்கள் வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து ஆயில் அன்வர்திக்கான் பேட்டைசாலையில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது ஊராட்சி மன்ற கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர். இந்த மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இதனால் வாகன ஓட்டிகள் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
    • அரசு பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன படியனூர், பெரிய படியனூர், சின்ன வடவள்ளி, வடவள்ளி, பொகலூர், பேரம்பாளையம், குமரன்குன்று, தென் பொன்முடி, பஞ்சனூர், தாத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை தேரம்பாளையம் பகுதியில் திடீரென அரசு பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை அறிந்து காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. நேரம் காலம் பார்க்காமல் வெடி வெடிப்பதால் வீடுகள் சேதம் அடைந்து வருகிறது.

    மேலும் காற்று மாசு அடைந்து நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கண்பார்வை பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் பாரம்பரியமாக வாழ்ந்து மக்கள் ஊரை காலி செய்து செல்கின்றனர் என்றனர்.

    அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர்.

    சாலை மறியலால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் பஸ்கள் குமரன்குன்று வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வரும் பஸ்கள் 4 ரோடு வழியாக காரமடைக்கும் போலீசார் பஸ்களை திருப்பி விட்டனர். 

    • கம்பிளியம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகள் நடந்து வருகிறது.
    • சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இன்று திடீரென ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டி ஆண்டிப்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக கிராமத்தில் மின்கம்பங்கள் ஊன்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படும்.

    எனவே மாற்றுவழியில் மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீரென ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த காவனியாத்தூர் கிராமத்திற்கு செல்லும் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை இடிந்து தரமட்டமானது. இந்த நிலையில் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை நேரங்களிலும் மற்றும் வெயில் காலங்களிலும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வந்தவாசி ஒரத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த திமுக மாவட்ட செயலாளர் தரணிவேந்தனை பொதுமக்கள் முற்றுகையிட்டு பஸ் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என்று முறையிட்டனர்.

    இதையடுத்து பயணிகள் நிழற்குடை கட்டித் தரப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் பொதுமக்களிடம் உறுதியாக கூறிய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.

    இதனால் வந்தவாசி ஒரத்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 2 வயது குழந்தையை கடித்து குதறியது
    • பல்வேறு இடங்களில் பிடிக்கும் குரங்குகளை இங்கு விட்டு செல்வதாக குற்றச்சாட்டு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் தமிழக ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் 400-க்கும் அதிகமான வீடுகள் உள்ளது ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் வனப் பகுதியை ஒட்டியபடி உள்ளதால் அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்தில் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் அதேபோல் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக வந்து இந்த கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும் தின்பண்டங்களை எடுத்துச் சென்று தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றன.

    இதனால் கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த பொருட்களையும் குரங்கு கூட்டம் எடுத்துச் செல்வதால் கடை சுற்றியும் வலையடித்து வியாபாரம் செய்கின்றனர் .

    ேமலும் வீடுகளில் குரங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இரும்பு கதவுகள் பொருத்தியுள்ளனர் இருப்பினும் கடந்த சில நாட்களாக குரங்குகள் உணவு தேடி கிராமத்திற்குள் படையெடுத்து கிராம மக்களை கடித்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம் சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்தி என்பவரது 2 வயது பெண் குழந்தையை வீட்டிற்கு வெளியே இருந்தபோது பாய்ந்து வந்த குரங்கு கூட்டம் திடீரென அந்த சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது இதில் தலை முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அந்த சிறுமியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குரங்கு கூட்டம் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கும் சம்பவத்தையடுத்து அந்த குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என நேற்று மாலையில் திடீரென கார்த்தி தனது உறவினர்கள் கிராம மக்களுடன் சைனகுண்டா வனத்துறை செக் போஸ்ட் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறை சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    சாலை மறியல் நடந்து கொண்டிருந்தபோதே வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன அப்போது குரங்கு கூட்டம் அந்த வாகனங்கள் மீது ஏறி குதித்தது.

    வெளியூரில் பிடிக்கப்படும் குரங்குகள் இக்கிராமத்தில் விடப்படும் அவலம்

    குரங்குகள் கூட்டமாக வருவது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் குரங்குகள் இரவு வேலைகளில் இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் விட்டுவிட்டு சென்று இருக்கின்றனர். இதனால் அந்த குரங்குகள் கிராம மக்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்குகிறது மேலும் குரங்குகளுக்கு உணவு அளிக்கிறோம் என்ற ரீதியில் நிறைய பேர் வாகனங்களில் பழம் பிஸ்கட் போன்றவை கொண்டு வந்து சைனகுண்டா கிராமம் முதல் ஆந்திர மாநில எல்லை வரை சாலையில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை தருகின்றனர்.

    இதனால் இந்த குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. தின்பண்டங்கள் கிடைக்காத போது கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளில் புகுந்து சேதத்தை விளைவிக்கிறது இந்த குரங்குகளால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.
    • பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் செல்லும் சாலையில் அயலம்பட்டி கிராமத்தின் அருகே சுமார் 200 மீட்டர் தூர அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. அயலம்பட்டி, பாரண்டபள்ளி, சின்னபாரண்டபள்ளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மக்கள் விடுபட்ட இடத்தில் புதிய தார் சாலை அமைத்துக்கொடுக்க வேண்டி அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.

    இந்நிலையில் சின்ன பாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    இதையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

    ×