என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
    X

    போச்சம்பள்ளி அருக உள்ள அயலம்பட்டி பகுதியில் விடுபட்ட தார் சாலை அமைக்கக்கோரி கல்லாவி-போச்சம்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    போச்சம்பள்ளி அருகே சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்

    • அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.
    • பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் செல்லும் சாலையில் அயலம்பட்டி கிராமத்தின் அருகே சுமார் 200 மீட்டர் தூர அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. அயலம்பட்டி, பாரண்டபள்ளி, சின்னபாரண்டபள்ளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மக்கள் விடுபட்ட இடத்தில் புதிய தார் சாலை அமைத்துக்கொடுக்க வேண்டி அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.

    இந்நிலையில் சின்ன பாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    இதையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    Next Story
    ×