search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers picket against"

    • தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பொடுகம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக சாலைவசதி கிடையாது. தற்போது மதுரை-நத்தம்-திண்டுக்கல்லுக்கு 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே தங்கள் கிராமத்திற்கும் சாலை அமைக்க வேண்டும் என 4 வழிச்சாலை நிர்வாகத்தினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பரளி டோல்கேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
    • அரசு பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் உற்பத்தி தொழிற்சாலை உள்பட 15-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த நிலையில் பெள்ளாதி மொங்கம்பாளையம் கிராமம் குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 4 கல்குவாரிகள், சிக்காரம் படியனூர் கிராமத்தில் ஒரு கல்குவாரி என 5 கல்குவாரிகள் அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன படியனூர், பெரிய படியனூர், சின்ன வடவள்ளி, வடவள்ளி, பொகலூர், பேரம்பாளையம், குமரன்குன்று, தென் பொன்முடி, பஞ்சனூர், தாத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை தேரம்பாளையம் பகுதியில் திடீரென அரசு பஸ்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை அறிந்து காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. நேரம் காலம் பார்க்காமல் வெடி வெடிப்பதால் வீடுகள் சேதம் அடைந்து வருகிறது.

    மேலும் காற்று மாசு அடைந்து நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கண்பார்வை பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் பாரம்பரியமாக வாழ்ந்து மக்கள் ஊரை காலி செய்து செல்கின்றனர் என்றனர்.

    அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர்.

    சாலை மறியலால் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் பஸ்கள் குமரன்குன்று வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வரும் பஸ்கள் 4 ரோடு வழியாக காரமடைக்கும் போலீசார் பஸ்களை திருப்பி விட்டனர். 

    ×