என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பயணிகள் நிழற்குடை கேட்டு கிராம மக்கள் மறியல்
- மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த காவனியாத்தூர் கிராமத்திற்கு செல்லும் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை இடிந்து தரமட்டமானது. இந்த நிலையில் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை நேரங்களிலும் மற்றும் வெயில் காலங்களிலும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வந்தவாசி ஒரத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த திமுக மாவட்ட செயலாளர் தரணிவேந்தனை பொதுமக்கள் முற்றுகையிட்டு பஸ் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என்று முறையிட்டனர்.
இதையடுத்து பயணிகள் நிழற்குடை கட்டித் தரப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் பொதுமக்களிடம் உறுதியாக கூறிய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் வந்தவாசி ஒரத்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






