என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
    X

    கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

    • சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
    • கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.

    மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×