search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து சமய அறநிலையத்துறை"

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    • கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர்.
    • கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகா பலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    ஆனால் இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆவணங்களை நேரடி ஆய்வு செய்தபோது அதிகமான பல்வேறு சொத்துகள் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டும் பட்டா வழங்கப்பட்டும் உள்ளது கண்டறியப்பட்டது.

    அதன் பின் இந்த ஆய்வு அறிக்கை திருச்சி இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என இணை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த கோவில் சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் உண்டியல் வைத்து வசூல் செய்வது, ஆன்லைனில் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்தும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலில் தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட கோவிலில் அன்னதானம் வழங்க உண்டியல் வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அவை அகற்றப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதி, கோவில்களில் தனி நபர்கள் உண்டியல் வைத்தது சம்பந்தமாக விசாரணை செய்து அது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.
    • கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:-

    * ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை.

    * அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.

    * கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

    • கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தஞ்சை பெரிய கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    தஞ்சை:

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பவுர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.


    இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளிமாநில பக்தர்கள் ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் " டிரஸ்கோடு" என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோவில் நுழைவு வாயில், காலணி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை பார்த்த சமூக ஆர்வலர்கள், இது வரவேற்கத்தக்கது என்றும் பக்தர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    • விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் ஏழை எளியோருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முயற்சியால் இதுவரை 1098 திருமணங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து இன்று மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் கற்பகாம்பாள் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து 2 ஜோடிகளுக்கும் திருமாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    மணமக்களுக்கு முதலில் மாலைகள் எடுத்து கொடுத்ததும் இரு மணமக்களும் மாலை மாற்றிக்கொண்டனர். அதன் பிறகு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.

    மணமக்களுக்கு தாய் வீட்டு சீதனமாக கட்டில், மெத்தை, ஸ்டவ் அடுப்பு, குக்கர், மிக்சி, கிரைண்டர், சில்வர் பாத்திரங்கள், பூஜை தட்டு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நல்ல பல காரியங்களை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது 1100-வது திருமணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் நடத்தி நிறைவேற்றி வைத்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் ஆகியோர் விநாயகர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
    • நத்தக்காடையூர். காங்கயம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகில் உள்ள பரப்புமேடு என்ற இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி பொறியாளர் கே. ஆர். கோபாலகிருஷ்ணன், வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன் ஆகியோர் விநாயகர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நத்தக்காடையூர். காங்கயம் ஆகிய பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.
    • வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதற்கு மாத வாடகையாக ரூ.2 ஆயிரத்து 500 என்றும், அதில் கட்டிடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்கு சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி 2013-ம் ஆண்டு மதுரை ஆதீனம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்லால் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை.

    எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்து உள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன்படி கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம். அதை விசாரணை செய்த இணை இயக்குனர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பகவர்லால் ஆணையரிடம் முறையீடு செய்தார். அது நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது. கோவில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம். அதேபோல தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கோவில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
    • ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் இதுவரை ரூ.3000 ஆகும்.

    "கோவில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும், "ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500 குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.
    • “எச்.ஆர்.சி.இ.” என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், சுவர்ணதாபனேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் 23.88 ஏக்கர் புன்செய் நிலம் மற்றும் 2.33 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளன. புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு "எச்.ஆர்.சி.இ." என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.28 கோடியாகும்.

    மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 10.98 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபகோவிலான கோனாபுரம், லட்சுமி நாராயணசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்றிருப்பதை அறிந்து திருப்பூர் மாவட்ட வருவாய் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கோவில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருப்பூர் மண்டல இணை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியோடு கோவில்களின் நிலம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.11.28 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2022-2023-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 20 கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள வரைவோலைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் முகமது நசிமுத்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகவளாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில், 10,600 சதுர அடி கட்டிட பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    இவ்வளாகத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவல கங்களான தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகியவை அமையப் பெற்றுள்ளன.

    • ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
    • கழக ஆட்சி மலர்ந்த பிறகு, கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று காலை கோவில்கள் சார்பில் 34 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்றார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 34 இணைகளுக்கு நமது அனைவரின் வாழ்த்துக்களோடு இங்கே மணவிழா நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது.

    திருக்கோவில்கள் சார்பில் மிக சிறப்பாக இந்த திருமண நிகழ்ச்சியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தி இருக்கிறார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

    குறிப்பாக, கல்வி-தொழில்-பொருளாதாரம்-சமூகம்-சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

    எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக்கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.

    இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது.

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான். நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது.

    அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    கோவில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான்.

    கோவில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதில் தலைவர் கலைஞர் எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

    தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலம் என்பது அனைத்துத் துறைகளிலும் பொற்காலமாக இருந்ததைப் போலவே, இந்து சமய அற நிலையத் துறையிலும் இன்றைக்கு ஒரு பொற் காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    கழக ஆட்சி மலர்ந்த பிறகு, கோவில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. பழமையான கோவில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குட முழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

    கோவில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழி முறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 கோவில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் கோவில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோவில்கள் மற்றும் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

    நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோவில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

    ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோவில்களுக்கு திருகுட முழுக்கு, 764 கோவில்களில் அன்னதானம், 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோவில்களில் மருத்துவ மையம், 15,000 கோவில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம்.

    இதன் மூலமாக கோவில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இது தான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.

    மறைந்த பெரியவர்-தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 'கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்' என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன.

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோவில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

    இந்தத் துறைக்கு இந்து சமயத் துறை என்று பெயரல்ல, இந்து சமய அறநிலையத் துறை என்று பெயர். அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் செஞ்சி மஸ்தான், மயிலை த.வேலு எம்.எல்.ஏ. மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×