search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும்- இந்து சமய அறநிலையத்துறை தகவல்
    X

    52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும்- இந்து சமய அறநிலையத்துறை தகவல்

    • தொன்மையான திருக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 45 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.
    • வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று தொன்மையான திருக்கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 45 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில், கிண்டி ஸ்ரீ பவானி முத்துமாரியம்மன் கோவில், சிந்தாரிப்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோவில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் முத்துக்குமார சுவாமி கோவில், சுந்தரவீர ஆஞ்சநேயசுவாமி கோவில், திருக்குவளை வரதராஜப் பெருமாள் கோவில், ஆய்மூர் பசுபதீஸ்வரர்சுவாமி கோவில், திருவாரூர் கோமல், ராஜகோபாலசுவாமி கோவில், அலிவலம் கரியமாணிக்கப் பெருமாள் கோவில், மன்னார்குடி நல்லமெய்க அய்யனார் கோவில், தஞ்சாவூர் திருவிடைமருதூர் ஆபத்சாகாயேஸ்வரர் கோவில், கும்பகோணம் செந்தில் அழகர் கோவில், மயிலாடுதுறை அகரகீரங்குடி பிடாரியம்மன் கோவில், குத்தாலம் வனதுர்க பரமேஸ்வரி கோவில், சீர்காழி அய்யனார் கோவில், கோவை, ராமநாதபுரம் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோவில், சுந்தராபுரம் முத்து விநாயகர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×