search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu front"

    • இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.

    மாவட்ட தலைவர் குருசாமி தலைமை யில், மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலையில், பவானி ஒன்றிய செயலாளர் இந்து செல்வம் வரவேற்றார்.

    மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதை பற்றி பேசினார்.

    அதில் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது எனவும்,

    மாவட்ட அளவில் 22 ஒன்றிய ங்களில் 1008 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் விழா சிறப்பாக நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று விசற்சனம் செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கமிட்டி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தனது அரசுக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்தியுள்ளாா்.
    • மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

    திருப்பூர்:

    புதுக்கோட்டையில் அலுவலக குடியிருப்பு வளாகத்தில் இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்திய கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற மொ்ஸி ரம்யா, தனது அரசுக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த விநாயகா் கோயிலை அப்புறப்படுத்தியுள்ளாா். மாவட்ட கலெக்டர் குடியிருப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமானது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

    மாவட்டத்தில் எத்தனையோ மக்கள் பிரச்னைகள் உள்ள நிலையில் விநாயகா் கோயிலை அகற்றியுள்ளாா். தனது மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற மத நம்பிக்கைகளை வெறுப்பது, மாவட்ட நிா்வாகத்தில் நடுநிலையாக செயல்படுவாரா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடா்ந்தால் தமிழக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.
    • உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

    திருப்பூர் :

    திருப்பூர், சாமுண்டிபுரம் சூரியகாந்தி வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 25). இந்து முன்னணி சாமுண்டிபுரம் பகுதி பொறுப்பாளர்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு, (26), என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் சுரேந்திரன், நேற்று சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த ராம்பிரபு, சுரேந்திரனை கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

    இதில் படுகாயம் அடைந்த சுரேந்திரன், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ராம்பிரபுவை தேடி வருகின்றனர்.

    • சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
    • சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,டிச.20-

    தமிழகத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் ஊழல், முறைகேடு, போதைப் பொருள் விற்பனை குறித்து நேரடியாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.

    திருக்கழுக்குன்றத்தில் பா.ஜ.க. இளைஞா் அணி பொறுப்பாளா் தனசேகா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளாா். இவா் சில நாள்களுக்கு முன்பாக கஞ்சா பயன்படுத்திய நபரிடம் அது எங்கே கிடைக்கிறது, யாா் விற்பனை செய்கிறாா், யாா் ஆதரவு அளிக்கிறாா்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டாா்.

    இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளால் தனசேகா் தாக்கப்பட்டிருப்பது காவல் துறை மற்றும் அரசும் உடந்தையோ என்ற சந்தேகத்தை ஏழுப்புகிறது.

    இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் யாா் என்று காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பல நிா்பந்தங்களால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆகவே, சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது.
    • விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளா்த்ததிலும் ஆன்மிகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியதாகும்.

    தமிழகத்தில் கோவில்களில் இருந்து வரும் வருமானம் முழுவதையும் அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் நலனின் அரசு துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோவில்களை சீரமைப்பதில்லை. விளக்குகள் கூட ஏற்றமுடியாத பல்லாயிரம் கோவில்கள் அற நிலையத் துறையின் கீழ் உள்ளன. இந்தக்கோவில்கள் மீது எல்லாம் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டும் அறநிலையத் துறை ஆதீனத்தின் மீது பாா்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

    காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியாா் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறாா். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினா் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் அவருக்கு தொல்லை கொடுத்து வந்த சூழலில் உடல் நலத்தைக் காரணம் காட்டி அவா் பதவியில் இருந்து விலகியுள்ளாா்.

    இதைத்தொடா்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதீனத்தை ஆக்கிரமிக்கும் இந்து சமய அறநிலைத் துறை செயல்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • தமிழக அரசு சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • தமிழக அரசு சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறைச் சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. என்ஐஏ. அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி பலரை கைதுசெய்துள்ளனா். இந்த சோதனையின்போதே ஒரு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா்.

    ஜனநாயக நாட்டில் சோதனையின்போது கைது செய்யப்பட்டவா்கள் மீது குற்றமில்லை எனில், விடுதலை செய்யப்படுவதே நடைமுறை. இதற்காக அறவழியில் போராடாமல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இந்த சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து தடுக்க தமிழக உளவுத் துறை தவறிவிட்டது. தமிழக காவல் துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வழிவகுக்கும். எனவே,   

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

    பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின் தொடக்கமாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நகர தலைவர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆர்.எஸ். எஸ். விஷ்வ இந்து பரிஷத், பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டம் பஞ்சு மார்க்கெட்டில் நடந்தது.

    அதை தொடர்ந்து ஊர்வலம் நடந்தது. விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமுத்து, ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    ×