ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.இதில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலை பிரதிஷ்டை
Published on

கவுந்தப்பாடி:

ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.

மாவட்ட தலைவர் குருசாமி தலைமை யில், மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலையில், பவானி ஒன்றிய செயலாளர் இந்து செல்வம் வரவேற்றார்.

மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதை பற்றி பேசினார்.

அதில் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது எனவும்,

மாவட்ட அளவில் 22 ஒன்றிய ங்களில் 1008 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் விழா சிறப்பாக நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று விசற்சனம் செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கமிட்டி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com