search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரஞ்சு எச்சரிக்கை"

    • மலைப்பாங்கான கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை கேரள மாநிலத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழையாக நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 சூறாவளி சுழற்சிகள் இணைந்திருப்பதால் வியாழக்கிழமை வரை மழையின் தாக்கம் இருக்கும் என்பதால், மலைப்பாங்கான கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பு டன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொல்லம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் இந்த மழை அதிக அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது. மேலும் ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
    • கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

    மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

    பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில், தங்கமணி என்பவர் உயிர் இழந்தார்.

    கனமழை காரணமாக மத்திய கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பல மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தப்படி உள்ளன.

    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    கனமழை நீடிப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு, முத்திரபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும், மேலும் ஒன்பது மாவட்டங்களில் செவ்வாய்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்பது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும்.

    கேரளா-லட்சத்தீவு-கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை.
    • வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    கடும் வெப்பம் காரணமாக தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மைதானத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறியதாவது:

    வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம்.

    டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் கடும் வெப்பம் நிலவி வருகிறது. 44 முதல் 47 டிகிரி வரை செல்சியஸ் மாறுபடுகிறது. இன்னும் 4 நாட்களுக்கு இது தொடரும். வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

    ×