search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி ஆசிரியர்கள்"

    • இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
    • புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.

    இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா். 

    • தொடக்கக்கல்வி துறையின் கீழ் 3,312 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
    • அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 8 -ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து மாறுதல் கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இதன்மூலம் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,111 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,777 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.

    இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×