search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodambakkam"

    கோடம்பாக்கத்தில் மின்சார ரெயில் மோதி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை மார்க்கமாக வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓட்டேரி-கோடம்பாக்கத்தில் 3 வீடுகளை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி பாஷியம் 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). சேத்துப்பட்டில் ஏசி டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (27). இவர் ஓட்டேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.

    அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை, 100 கிராம் வெள்ளிக் கொலுசு, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

    பின்னர் அதே கொள்ளையர்கள் பக்கத்தில் வசிக்கும் நந்தகுமார் என்பவரின் வீட்டு பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

    இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டில் திடீரென்று 25 பவுன் நகை திருட்டுபோனது. இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    சீனிவாசன் வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த மாலா என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார். அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. மாலாவை போலீசார் கைது செய்தனர்.

    கோடம்பாக்கம் அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் அடுத்த ரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. பாண்டிச்சேரியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    கடந்த 3-ந் தேதி மதுமதியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்23 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடம்பாக்கத்தில் 2 வீடுகளில் 70 பவுன் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    கோடம்பாக்கத்தில் ரங்கநாதபுரத்தில் ரகுகுமார் என்பவது வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மதுமதி என்ற ஆசிரியர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளும், கொள்ளையடிக்கப்பட்டன. தியாகராஜன் வீட்டில் ½ கிலோ வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

    கோடம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இரண்டு பேரை வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துருபிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சூளைமேடு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, ராமு என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட லட்சுமி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோடம்பாக்கம்-தி.நகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் வசித்து வருபவர் இக்னேசியஸ். இவர் தனது வீட்டு முன்பு தனக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல கோடம்பாக்கத்தில் கால்டாக்சி டிரைவர் சூரியபிரகாஷ், தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினார். அவரது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் திருடப்பட்டன. இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று இரவு காரில் புறப்பட்டார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே முதன்மை வணிக மேலாளர் பிரியம்வதா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பயணிகளின் தேவைகளுக்காக முன்பதிவு இல்லா ரெயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய ரெயில்வே துறை சார்பில் யூ.டி.எஸ். ‘ஆப்’ கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நேற்று முதல் அதன் பயன்பாட்டாளர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை 27-ந் தேதி பாரம்பரிய நீராவி ரெயில் என்ஜின் காலை 10 மணிக்கு இயக்கப்படும். இதில் ரெயில் என்ஜினுடன் 40 பயணிகள் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி இணைக்கப்படும். பாரம்பரிய ரெயிலில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 27-ந் தேதி காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். பயணக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.650 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.500 செலுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மை வணிக மேலாளர் (பயணிகள் மேலான்மை) வினயன், மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பாரம்பரிய ரெயிலில் பயணிகள் பயணம் செய்ய உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×