என் மலர்
செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலிருந்து மகன் தமிழரசு இல்லத்துக்கு சென்றார்
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
சென்னை:
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று இரவு காரில் புறப்பட்டார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார். #karunanidhi #Tamilarasu
Next Story






