என் மலர்

  நீங்கள் தேடியது "Tirupur murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் புதுப்பெண் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் காந்தி நகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.

  வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் வசதிக்காக பனியன் உரிமையாளர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள தோட்டத்தில் 10 வீடுகளை கட்டி கொடுத்துள்ளார்.

  இதில் பூட்டியிருந்த 4-வது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது.

  இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  விசாரணையில் பிணமாக கிடந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி (வயது 21) என்பது தெரியவந்தது. இவரும் அதே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த விக்னேஷ் (22) என்பவரும் காதலித்தனர். பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு கணவன்- மனைவியாக வாழ்ந்தனர்.

  கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கயல்விழி தற்கொலை செய்து கொண்டபின்னர் விக்னேஷ் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டாரா? அல்லது கயல்விழியை கொலை செய்து விட்டு வீட்டை பூட்டிச்சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மேலும் விக்னேஷ் குறித்து பனியன் நிறுவனத்தில் விசாரித்தபோது அவர் எந்த ஊர்? என்பது குறித்து எந்த விபரமும் இல்லை. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் 15. வேலம்பாளையம் கண்மணி கார்டனில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் 15. வேலம்பாளையம் கண்மணி கார்டனில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

  அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது வாலிபர் தலை சிதைந்து இறந்து கிடந்தார். அருகே ரத்தக்கறையுடன் பாறாங்கல் மற்றும் மதுபாட்டில்கள் கிடந்தன. பாறாங்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது.

  இது குறித்து தகவல் கிடைத்ததும் 15.வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார் ? கொலை செய்த நபர்கள் யார் ? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நேற்று பட்டப்பகலில் கிளி ஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

  இன்று அதிகாலையில் மற்றொரு கொலை நடந்திருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்பூர்:

  திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவரது நண்பர் ஆறுமுகம் (20). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

  நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இருவரும் அறையில் இருந்தனர். மதியத்திற்கு மேல் முருகன் மட்டும் வெளியே சென்றார். பின்னர் அவர் அறைக்கு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் எந்த பதிலும் இல்லை.

  இந்த நிலையில் நேற்று இரவு வசந்தம் நகர் பகுதியில் உள்ள வீதியில் முருகன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலின் பல்வேறு இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் குத்திய காயங்கள் இருந்தது.

  தகவல் கிடைத்து அங்கு சென்ற ஆறுமுகம் தனது நண்பர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

  அது கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது முருகன் தனது நண்பர் சசிகுமாரின் தங்கை உறவு முறை பெண்ணை தவறாக பேசியதால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகனை சசிகுமார் மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணை தவறாக பேசியது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார் வசந்தம் நகர் பகுதிக்கு முருகனை அழைத்து வந்து கத்தியால் கழுத்தை அறுத்தும் குத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது.

  இது தொடர்பாக போலீசார் சசிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். சாக்கு மூட்டையில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
  திருப்பூர்:

  திருப்பூர் ஊத்துக்குளி மானூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மகன் ஆனந்த்(26). இவர்களுக்கு காங்கயம், குன்னம்பாளையம் பகுதிகளில் தேங்காய் எண்ணை மில் உள்ளது. குன்னம்பாளையத்தில் உள்ள எண்ணை மில்லை ஆனந்த் நிர்வகித்து வந்தார்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்த் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை திருமலைசாமி, ஆனந்தின் செல்போனை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது. பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

  இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேடினர். ஆனாலும் ஆனந்த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இந்நிலையில் திருமலைசாமி ஊத்துக்குளி போலீசில் இன்று காலை தனது மகன் ஆனந்த்தை காணவில்லை என்று புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தும், அதே பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரும் நண்பர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மானூர் பகுதியில் உள்ள பாலகுரு வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வரவே போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

  அப்போது ஆனந்த்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் பணம் தர மறுத்ததால் கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஆனந்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டின் ஒரு அறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

  இதையடுத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சாக்கு மூட்டையில் இருந்து ஆனந்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு உதவிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ×