search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body recover"

    • தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர்.

    கோவை,

    திருச்சியை சேர்ந்தவர் பரம தயாளன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம்

    கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் இல்லை. எனவே வெளியே அறை எடுத்து தரும்படி கேட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆகாசுக்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு தங்கி இருந்து ஆகாஷ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறை உரிமையாளரை தொடர்பு கொண்டு அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர்.

    உடனடியாக அறை உரிமையாளர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து தூர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அறை உரிமையாளர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஆகாஷ் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து 3 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை பீளமேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    திருப்பூரில் தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்டார். சாக்கு மூட்டையில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி மானூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மகன் ஆனந்த்(26). இவர்களுக்கு காங்கயம், குன்னம்பாளையம் பகுதிகளில் தேங்காய் எண்ணை மில் உள்ளது. குன்னம்பாளையத்தில் உள்ள எண்ணை மில்லை ஆனந்த் நிர்வகித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்த் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை திருமலைசாமி, ஆனந்தின் செல்போனை தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் என்று வந்தது. பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேடினர். ஆனாலும் ஆனந்த்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் திருமலைசாமி ஊத்துக்குளி போலீசில் இன்று காலை தனது மகன் ஆனந்த்தை காணவில்லை என்று புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தும், அதே பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரும் நண்பர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மானூர் பகுதியில் உள்ள பாலகுரு வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வரவே போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆனந்த்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் பணம் தர மறுத்ததால் கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஆனந்தின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டின் ஒரு அறையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சாக்கு மூட்டையில் இருந்து ஆனந்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு உதவிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×