என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seminarகருத்தரங்கம்"

    திருவையாறு அருகே சித்த மருத்துவ ஆய்வு மாநாடு நடைபெற்றது.
    திருவையாறு:

    திருவையாறு அருகே திங்களூர் சாலை இமயம் அறக்கட்டளை வளாகத்தில் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சித்த மருத்துவ ஆய்வு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் பாண்டிச்சேரி நீதிபதி (ஓய்வு) வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் தேன். ரகு தலைமையில் நோயை குணமாக்க உதவுவது பாரம்பரியம் தந்த விருந்தே பாட்டி தந்த மருந்தே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.சித்த மருத்துவ சாதனையாளர்களுக்கு அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில் மூலிகை கண்காட்சி, இரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 

    மேலும், மருத்துவ ஆலோசனைகள், அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் சித்த மருத்துவர்கள் மதுரை முத்தரசன், தேவூர் மணிவாசகம், விவேகானந்தன் மற்றும் வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினர். 

    மாநாட்டிற்கான ஏற்பாடுகளை இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
    வீ. கே. புதூர்:

     குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை ஆய்வு மையம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள புதிய கலையரங்கத்தில் நடைபெற்றது.  

    மகாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் அன்புமணி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஜெய்நிலா சுந்தரி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் விஜிலா நேசமணி துறை அறிக்கையினை வாசித்தார். 

    இயல் தமிழ் குறித்து பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன் எடுத்துரைத்தார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியரும் தலைவருமான முத்தையா இசைத்தமிழ் குறித்து எடுத்துரைத்தார். 

    நாடகத்தமிழ் குறித்து கல்லூரியின் உதவி பேராசிரியர் பாண்டிமாதேவி  பேசினார். இறுதியில் முத்தமிழ் விழா கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறினார். ஸ்ரீ பராசக்தி கல்லூரி மற்றும் பள்ளியின் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் போதை இல்லா உலகம் படைப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் சங்கர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சவுந்திர ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் தங்கப்பாண்டியன் வாழ்த்தி பேசினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் உதவிப் பேராசிரியர் இசக்கி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் அம்பை ஏ.எஸ்.பி. பல்பீர்சிங், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் கஷ்மீர் ராஜா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக்குழு சார்பில் போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சரக்கு மற்றும் சேவைத்துறையில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தங்களை தயார்படுத்தி கொள்வது எப்படி? என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக்குழு சார்பில் போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற சரக்கு மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையர் பி.கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், சரக்கு மற்றும் சேவைத்துறையில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தங்களை தயார்படுத்தி கொள்வது எப்படி?, போட்டி தேர்வை எதிர்கொள்வது எப்படி?, சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் பற்றியும், அதன் நுணுக்கங்கள், செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அகதர மதிப்பீட்டுக்குழு துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.கார்த்திகேயன் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் உலகமயமாக்கல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
    • 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''உலகமயமாக்கும் போக்கு'' என்ற தலைப்பில் சிறப்புரை நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி அறிமுக உரையாற்றினார்.

    சிவகாசி சிறப்பு விருந்தினராக எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி வணிகவியல் உதவிப் பேராசிரியர் சவுந்திரபிரியா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், உலகமயமாக்கல் என்பதன் பொருள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், உலகமயமாக்கும் யுக்திகள், உலகமயமாக்கும் போக்கினால் ஏற்படும் நிறை-குறைகள், இதனால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் சந்தையிடுதலில் ஏற்பட்டுள்ள புதிய யக்திகள் பற்றி எடுத்துரைத்தார்.

    அனைத்து மாணவர்க ளையும் சுயதொழில் தொடங்க ஊக்கம் அளித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சங்கீதப் பிரியா, ஸ்ரீமலர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    சூரியபிரகாஷ் வரவேற்றார். மகாராஜா நன்றிய கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார். இந்த சிறப்புரையில் 120 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    • மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான் என்று கலெக்டர் பேசினார்.
    • பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர்

    உலக உணவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் பாரம்பரியமிக்க, உயர்தர உளர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் பாரம்பரியமிக்க, உயர்தர, உளர் ரகங்கள் குறித்த விளக்க கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.

    அருப்புக்கோட்டை, கோவிலாங்குளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாபாபு கலந்து கொண்டு, பாரம்பரிய தானியங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து பேசினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-இந்தியாவில் லட்சத்தி ற்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் இருந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் பல முன்னோடி விவசா யிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பாரம்பரிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

    இந்த பாரம்பரியமிக்க உளர் பயிர் ரகங்கள், தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

    நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு அரசு எத்தனை துறைகள் இருந்தாலும், வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. ஏனெனில் உணவு மிக முக்கியமானது.

    மனிதனுடைய முதல் கண்டுபிடிப்பு வேளாண்மை ஆகும். அதற்கு பிறகுதான் மனிதனுடைய வளர்ச்சி பல்கி பெருகியது. மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான். அடுத்த வருடம் உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதால் விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சிறுதானியத்தை தொலைத்து விட்டு அதை தேடி அலைகிறோம். ருசிக்காக உணவின் ஊட்ட சத்தை விட்டுவிட்டோம். சிறுதானியங்கள் இன்று மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவே கிடைக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவை கொடுக்க வேண்டும். மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவகம், சிறுதானிய மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அங்காடி அமைக்கப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான கண்மணி மற்றும் இரும்பு பெண்மணி ஆகிய திட்டங்களில் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக அரபு மற்றும் உருது துறை பேராசிரியர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரபித்துறை சார்பில் இஸ்லாமும் சமூக நீதியும் எனும் தலைப்பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக அரபு மற்றும் உருது துறை பேராசிரியர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டு பேசினார். இஸ்லாமும், சமூக நீதியும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஜாகிர் உசேன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முகம்மது சதக் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் அலாவுதீன், கணிணித் துறை பேராசிரியர் முகம்மது நஜிமுதீன் ஆகியோரும் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை அரபி துறை தலைவர் முகைதீன் அப்துல் காதர், தமிழ்துறை பேராசிரியர் பாபு ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப், செயலர் சர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
    • உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    கல்வி குழும தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார். கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    கல்வி குழும செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் நடராஜன், முகமது இஸ்மாயில், துணை முதல்வர்கள் கலியபெருமாள், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

    பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் உமா வரவேற்றார். துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர் வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது
    • கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்தனர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொருளியல் துறை தலைவர் சண்முகவல்லி வரவேற்று பேசினார்.

    பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி பொருளியல் துறை உதவிப்பேராசிரியர் தே.கதிரவன் "பொருளியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற முன்னாள் மாணவிகளும், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பொருளியல் துறை தலைவர் மகாலட்சுமி, சாத்தான்குளம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி உதவி மேலாளர் ரத்தினவள்ளி, ஏரல் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரியாதேவி ஆகியோர் பேசும்போது, நாங்கள் இந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தோம். பொருளியல் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்விற்கான வழிகாட்டுதல் வகுப்புகளில் கலந்து கொள்வோம். கல்லூரியில் வழங்கப்பட்டு வரும் பிற வாய்ப்புகளையும், நூலக வசதிகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினோம். இதனால் நாங்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று இன்று இத்தகைய நல்ல பதவியில் இருக்கிறோம் என கூறினர். பின்னர் கல்லூரியின் பொருளியல் துறை மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை அனைவரும் கண்டுகளித்தனர். பள்ளி மாணவிகள் சிலர் நிகழ்ச்சி பற்றிய தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில், 12 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொருளியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் செல்வராணி மற்றும் ஜின்சிமோள் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளியல் துறை உதவி பேராசிரியை கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்தி, பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறையின் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி தாளாளர்் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.

    உயிர் மருத்துவ பொறியியல் துறையின் 4-ம் ஆண்டு மாணவி வாஷினி வரவேற்றார். உயிர் மருத்தவ துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ''நிப்ரோ மெடிக்கல் இந்தியா'' நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் நம்பி வேதாச்சலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    3-ம் ஆண்டு மாணவர் சதீஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தின்ர் பேசுகையில், உயிர் மருத்துவ பொறியியல் துறை என்பது வளர்ந்து கொண்டிருக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும்.

    உயிர் மருத்துவ பொறியாளர்கள் மருத்தவ சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், மற்றும் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் பேப்பர் பிரசன்டேசன், மல்டிமீடியா பிரசன்டேசன், போஸ்டா் மேக்கிங் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளும், தொழில்நுட்பம் சாராத போட்டிகளும் நடந்தன.

    இதில் பல்வேறு கல்லூரிகளில் இருத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு திறமைகணை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் கிருத்திகா, காளீஸ்வரி, மாணவர் ஒருங்கிணைப்பாளர், 4-ம் ஆண்டு மாணவர் நெல்லையப்பராஜா மற்றும் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
    • கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    உயர்திறள் ஒன்றெனக்கோரி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானாரின் தருமசாலை தொடங்கிய 152-வது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இந்த உலகிற்கு வருவிக்க உள்ள 200-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து முப்பெரும் விழா தமிழக அரசின், உத்தரவுப்படி இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. அகல் விளக்கை டாக்டர் தம்பையா ஏற்றினார். பின்னர் மாநில சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம், சமரச சித்த சன்மார்க்க சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் சன்மார்க்கக் கொடி கட்டினர் . அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதுதல், திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது.

    பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சன்மார்க்க பெரியோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து திருவருட்பா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வள்ளலார் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டல இணை ஆணையர் சூரிய நாராயணன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ( வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா பரிசு வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து சன்மார்க்க பெரியோர்கள் கௌரவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், வள்ளலார் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா நன்றி கூறினார்.

    ×