என் மலர்
நீங்கள் தேடியது "Women's College"
- கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.
- கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
சென்னை:
சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ வினளயாட்டு போட்டிகள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.
கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம் , ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பால் பேட்மின்டன் போட்டிக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, 5000 கிடைக்கும். செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் முதல் 3 இடங்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கல்லூரிகள் வருகிற 10-ந்தேதிக்குள் 9840737407 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உயர்கல்வி இயக்குனர் அமுதா சுமன் தெரிவித்துள்ளார்.
- பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரி ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
- இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரியும், வானூர் வட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட துறையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
கல்லூரி செயலர் சிவகுமார் வாழ்த்துடன் நடைபெற்ற இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, கல்லுரி முதல்வர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட விரிவாக்க அலுவலர் புவனேஸ்வரி, சித்தா ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர்.சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயபிரகாஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் வித்யா, வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷாமுரளி, ஊராட்சி ஒன்றிய துணைபெருந்தலைவர் பருவகீர்த்தனா, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த செய்திகள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






